சிங்க பெண்ணே சீரியல் அன்புக்கு கல்யாணம்.. மணப்பெண் விஜய் டிவி கதாநாயகி தான்.. யாருன்னு தெரியுமா?
சென்னை: சன் டிவியில் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கும் சிங்க பெண்ணே சீரியலில் அன்பு கேரக்டரில் நடிகர் அமல்ஜீத் நடித்து வருகிறார்.
நடிகர் அமல்ஜித் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணே கலைமானே சீரியல் கதாநாயகி பவித்ரா அரவிந்த்தை காதலிக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
விரைவில் சிங்க பெண்ணே அன்புவிற்கும் கண்ணே கலைமானே சீரியல் பானுவுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் சின்னத்திரையாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் தான் இப்போது புதியதாக சின்னத்திரையில் ஒரு ஜோடி உருவாகி இருக்கின்றனர்.இவர்கள் நடித்த முதல் சீரியலிலே காதல் ஏற்பட்டு இப்போது திருமணத்திற்காக காத்திருக்கும் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
அது வேறு யாரும் இல்லை சன் டிவியில் ஒளிபரப்பாகி அதிகமான சின்னத்திரை ரசிகர்களின் மனதில் குறுகிய நாட்களுக்குள் சிம்மாசனம் இட்டு அமைந்திருக்கும் சிங்க பெண்ணே சீரியலில் ஹீரோ அன்பு தான். அவர் காதலிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகையை விரைவில் கரம்பிடிக்க இருக்கிறார்.
சிங்க பெண்ணே சீரியல் கதாநாயகி ஆனந்திக்கு உதவுவதற்காக பல அவமானங்களை தாங்கிக் கொண்டிருக்கும் அன்பு பல பெண்களின் மனதை கவர்ந்திருக்கிறார். இப்படி ஒரு பையன் நம்ம வீட்டில் இல்லையே என்று இப்போது பல தாய்மார்கள் இந்த சீரியல் பார்க்கும்போது புலம்புவதை கேட்க முடிகிறது.

இப்படியான நிலையில்தான் சிங்க பெண்ணே சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் அமல்ஜீத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணே கலைமானே சீரியலில் பானு கேரக்டரில் நடிக்கும் பவித்ரா அரவிந்தோடு எடுத்த புகைப்படங்கள் பலவற்றை குவித்து வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான அம்மன் சீரியலில் ஒன்றாக நடித்திருந்தபோது நட்பாக பழகி வந்த நிலையில் பிறகு காதலிக்க தொடங்கி இருக்கிறார்கள்.
சமீபத்தில் இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கின்றனர். இந்த நிலையில் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications