குழந்தை பிறந்து விட்டது..மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட பாடகர் அஜய் கிருஷ்ணா.. குவியும் வாழ்த்துக்கள்
பாடகர் அஜய் கிருஷ்ணாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்று அவர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்
சென்னை: விஜய் டிவி சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பாடகர் அஜய் கிருஷ்ணாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்த விஷயத்தை இன்று ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார்.
பாடகர் அஜய் கிருஷ்ணா மற்றும் ஜெசி தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஏழ்மையான குடும்பம்
விஜய் டிவி பிரபலமான அஜய் கிருஷ்ணா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் பரிச்சயம் ஆனவர்தான். இவர் அந்த சீசனில் அவ்வளவு பெரிய அளவில் பிரபலமாகவில்லை என்றாலும் இவர் ஜூனியர்களுக்காக சப்போர்ட் பண்ணி கொண்டிருந்த சீசனில் அதிக அளவில் பிரபலமாகி விட்டார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அஜய் கிருஷ்ணா மூன்று அக்காக்களுக்கு ஒரே தம்பியாக இருந்திருக்கிறார். இவருடைய அம்மாவும் இவர் சிறுவயதில் இருக்கும் போதே இறந்து விட்டாராம். அக்காவின் அரவணைப்பில் தான் இவர் வளர்ந்து வந்துள்ளார். அந்த நேரத்தில் திடீரென இவருடைய அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டதால் அவரும் வீட்டிலே முடங்கி விட்டார்களாம்.

வாழ்த்து முதல் திருமணம் வரை
இவருடைய அக்காக்கள் தான் இவரை படிக்க வைத்து, இவருக்குள் இருக்கும் பாடல் திறமையை வெளிக்கொண்டு வருவதற்காக பல முயற்சிகளை எடுத்து இருக்கின்றனர் .குடும்பத்தின் மீது எப்போதுமே பாசமாகவும் அன்பாகவும் இருக்கும் அஜய் கிருஷ்ணா தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் குடும்பத்தை பற்றி கண்ணீர் மல்க பேசி இருக்கிறார். இந்த நிலையில் தான் இவருடைய வாழ்க்கைக்கு மகிழ்ச்சியை கொடுக்க வந்த ஜெஸ்ஸியை இவர் இன்ஸ்டாகிராம் மூலமாக பார்த்திருக்கிறாராம். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் தன்னுடைய பாடல் ஒன்றை பதிவிட அதற்கு வாழ்த்து கூறிய ஜெஸி ரிப்ளை செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் நட்பாக பழகி பின்பு காதலித்து திருமணம் செய்து இருக்கின்றனர்.

பெற்றோர் ஆகியாச்சி
காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு அஜய் கிருஷ்ணாவுடைய வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் நடைபெற்று இருக்கிறதாம். இவர் ஒரு சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய பிறந்தநாளில், தான் அப்பாவாக போகும் மகிழ்ச்சியை ரசிகர்களோடு பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த அஜய் கிருஷ்ணா மனைவி ஜெசி பல போட்டோ சூட் நடத்தி அடிக்கடி சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். நடிகைகள் மற்றும் சின்னத்திரை நடிகைகள் பலரும் போட்டோ சூட் நடத்திவரும் நிலையில் பாடகர் மனைவியான ஜெஸியும் அதிகமான போட்டோ சூட் நடத்தி இருந்தார். தொடர்ச்சியாக இவருடைய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகிக் கொண்டே இருந்தது. இந்த பிப்ரவரி 12ஆம் தேதி இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆண் குழந்தை பிறந்து இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை இரண்டு நாட்கள் கழித்து இன்று இப்போதுதான் அஜய் கிருஷ்ணா ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.

மகன் வந்து விட்டான்
தன்னுடைய மனைவியோடு கர்ப்ப காலத்தில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அவர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் இறுதியாக என்னுடைய மகன் வந்துவிட்டான் நாங்கள் பெற்றோராக மாறிவிட்டோம் எங்களுக்கு ஆசி வழங்கி வந்த அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை பிரபலங்களும், பாடகர்களும் தொடர்ச்சியாக வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications