சூப்பர் சிங்கரில் நடந்தது இதுதான்.. சிவாங்கி பற்றி ரகசியத்தை உடைத்த பாடகர் அனந்த் வைத்தியநாதன்
சென்னை: பாடகர் அனந்த் வைத்தியநாதன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருக்கும் போது நடந்த நிகழ்வுகள் குறித்து சமீபத்தில் பேட்டியில் பேசியிருக்கிறார்.
அப்போது போட்டியாளராக இருந்த சிவாங்கி குறித்து பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் குரலை மேம்படுத்திய இவர் பல வருடங்கள் கழித்து அந்த நிகழ்ச்சி பற்றி பேசி இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமடைந்து இருக்கின்றனர். அதற்கு காரணம் போட்டியாளர்களின் திறமையாக இருந்தாலும் அவர்களுக்கு கொடுக்கும் மோட்டிவேஷன் மற்றும் சின்ன சின்ன குறைகளையும் சுட்டிக்காட்டும் நடுவர்களும் தான்.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகர் அனந்த் வைத்தியநாதன் பலருக்கும் பிரபலமானவர்தான். இவருக்கு பாட்டு பாடுவது என்றால் உயிராம். அதற்காகவே பல பாடகர்களிடம் இவர் பாடல் கற்று இருந்திருக்கிறார். அப்போதுதான் இவருடைய தொண்டையில் ஏற்பட்ட பிரச்சனையால் இவருடைய குரல் வளம் போய்விட்டதாம்.
பிறகு வேகமாக பாடக் கூடாது என்று இவரிடம் மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். எத்தனையோ மருத்துவமனையில் பார்த்த பிறகும் இவருக்கு கடைசியில் இதுதான் நிலைமை என்று ஆகி இருக்கிறது. அதற்குப் பிறகு தன்னுடைய பாடல் கலை அழிந்து விடக்கூடாது என்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பாடல் சொல்லிக் கொடுத்து அவர்களுடைய திறமையை வளர்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்போதுதான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக சிவாங்கி அறிமுகம் ஆகி இருக்கிறார். அப்போதே எனக்கு சிவாங்கியை பற்றி நன்றாகவே தெரியும். சிவாங்கியின் ரத்தத்திலேயே பாட்டு திறமை இருக்கிறது அவருடைய அம்மா ஒரு பாடகி என்பதும் ஒரு கூடுதல் காரணம்தான்.

சிவாங்கியின் குரல் பேசும் போது இருக்கும் வித்தியாசம் பாடும்போது இருக்கும் வித்தியாசம் என இரண்டையும் பார்த்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருக்கும் போது அனுராதா கூட சொல்லி இருந்தார் சிவாங்கியின் குரலை இன்னும் மேம்படுத்தினால் வேற லெவலில் வருவார் என்று அப்போது அந்த சீசனில் சிவாங்கி வெற்றி பெறவில்லை என்றாலும் இப்போதும் சிவாங்கி பல பாடல்களை பாடி கொண்டிருப்பது அவருடைய திறமையால் தான்.
ரியாலிட்டி ஷோவில் வெற்றி பெற்றால் மட்டும்தான் அவர்களுக்கு திறமை இருக்கிறது என்று இல்லை. ஆனால் இப்போது அதைவிட பல மடங்கு சிவாங்கி கலக்கி கொண்டிருக்கிறார். அது எனக்கு சந்தோஷம்தான்.சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் இப்போது கலந்து கொண்டிருக்கிறார். அதை விடவும் அவர் அவருடைய திறமை மூலமாக பல திரைப்படங்களில் பாடி கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி என்று சமீபத்தில் பேட்டியில் அனந்த் வைத்தியநாதன் தெரிவித்திருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
முத்துவின் விபரீத முடிவு.. சிந்தாமணியின் சூழ்ச்சியை முறியடிக்க முடியுமா? சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications