அந்த நபரை காதலிச்சேன்! அழகா இல்லன்னு பிரச்சனை.. பிரேக்கப் வலி! எமோஷனலாக பேசிய சிவாங்கி
சென்னை: விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பாடகியாக வேண்டும் என்று வந்த சிவாங்கி அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறி இருந்தாலும் குக் வித் கோமாளியில் அவருடைய பாடல் பலருக்கும் ஃபேவரைட் ஆகிவிட்டது. இப்போது சினிமாவிலும் நடித்துக் கொண்டிருக்கும் சிவாங்கி தன்னுடைய காதல் பிரேக் அப் குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார்.
விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் பார்க்கும் ரசிகர்கள் பலருக்கும் சிவாங்கி தெரிந்து இருக்கும் மூன்று சீசன்களாக கோமாளியாக வந்த சிவாங்கி நான்காவது சீசனில் அதிரடியாக குக்காக மாறி இருந்தார். இவருடைய இந்த மாற்றம் இணையத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ரசிகர்களுக்கு சந்தேகம்
சிவாங்கிக்கு மூன்று சீசன்களாக உப்பு எது? சீனி எது? என்று கூட தெரியாது என்று போல நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் நான்காவது சீசனில் அவரால் எப்படி சமைக்க முடியும் அப்போ விஜய் டிவி பிளான் பண்ணி தான் சிவாங்கியை இறக்கி இருக்காங்க என்றெல்லாம் பலர் பேசி வந்தார்கள். ஆனாலும் சிவாங்கி வாராவாரம் புதுமையான சமையல்களை செய்து அங்கிருந்த நடுவர்களை அசத்தி கொண்டிருந்தார்.

பிரபலம் தந்த நிகழ்ச்சி
அதுபோல சிவாங்கிக்கு விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் முதல் அறிமுகத்தை கொடுத்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே சிவாங்கி வெளியேற்றப்பட்டார். உண்மையான திறமை இருந்தால் அதற்கான அங்கீகாரம் கண்டிப்பாக ஒருநாள் கிடைக்கும் என்பதற்கு சான்றாகத்தான் சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாட்டுப்பாட அனுமதி கிடைத்தது. அதில் தன்னுடைய பாடல்கள் மூலம் அனைவரையும் சிவாங்கி அதிர வைத்திருந்தார்.

மயக்கும் குரல்
அதுவரைக்கும் சிவாங்கி பேசும் விதம் வேற மாதிரி இருக்கும் ஆனால் பாட்டு பாடத் தொடங்கிவிட்டால் அவருடைய குரல் மொத்தமாக மேஜிக் செய்ய தொடங்கிவிடும். இது சிவாங்கியா? என்று பலரும் வியக்கும் வகையில் அவருடைய குரல் இருக்கும். அதுபோல சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்கும் போது அஸ்வின் தான் தன்னுடைய கிரஷ் என்று அஸ்வின் பின்னாடி சுற்றி வந்தார்.

செஃப்ஆக அசத்தல்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர்களுடைய கெமிஸ்ட்ரியும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. அதுபோல இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுப்பு எழுந்து வந்தது. அதற்குப் பிறகு பாடகர் வித்யாசாகர் மகன் அஸ்வினுடன் சிவாங்கி அதிகமான வீடியோக்கள் வெளியிட்டு வந்ததால் இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுப்புகள் பரவி இருந்தது.

கண் கலங்கிய சிவாங்கி
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சிவாங்கி தன்னுடைய காதல் தோல்வி குறித்து பேசி இருக்கிறார். அதில், "பொதுவாக அழகான பசங்களை பெண்களுக்கு பிடிக்கும். ஆனால் அவங்களுக்கு நம்மளை பிடிக்கணுமே? நானும் காதலில் இருந்தேன். ஆனா பிரேக் அப் ஆகிடுச்சு. அந்த பிரேக்கப் எனக்கு பெரிய மன பலத்தை கொடுத்தது. அதனால் தான் என்னையே நான் அழகுபடுத்த ஆரம்பித்தேன். பொண்ணுங்க அதிகமா லவ் பண்ணுனா அந்த லவ் நிலைக்காதுன்னு புரிஞ்சுகிட்டேன்" என்று கண் கலங்கியபடி பேசி இருக்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications