அந்த போன் கால் மட்டும் வரலைனா.. நாங்க இப்போ உயிரோடு இல்லை.. கண்கலங்கிய பாடகி அனிதா குப்புசாமி

பாடகி அனிதா குப்புசாமி தன்னுடைய நிஜ வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை பகிர்ந்திருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி தன்னுடைய வீட்டில் தனக்கு எதிர்பாராமல் நடந்த நிகழ்வு பற்றி உருக்கமாக பேசியிருக்கிறார்.

தனக்கு ஒரு போன் கால் வந்ததால் தன்னுடைய உயிர் காப்பாற்றப்பட்டதாகவும் நெகிழ்ச்சியோடு அனிதா குப்புசாமி பேசியிருக்கிறார்.

நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யும் சிறு சிறு செயல்களால் ஏற்படும் பல விஷயங்கள் நொடி பொழுதில் நம்முடைய வாழ்க்கையை மாற்றிவிடும் என்பது அனிதா குப்புசாமியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வாக இருக்கிறது.

நாட்டுப்புறப் பாடகி

நாட்டுப்புறப் பாடகி

அனிதா குப்புசாமி ஒரு நாட்டுப்புற பாடகியாக இருந்து வருகிறார். திரைப்பட பின்னணி பாடகி ஆகவும் இருக்கிறார். அவருடைய கணவர் புஷ்பவனம் குப்புசாமி உடன் இணைந்து பல கிராமிய பாடல்களை எழுதியும், பாடியும் வருகிறார். அனிதா குப்புசாமி தன்னுடைய கணவர் புஷ்பவனம் குப்புசாமி யோடு சேர்ந்து இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 3000 மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார்.தன்னுடைய பாடல்களில் எய்ட்ஸ், வரதட்சணை, புகைபிடித்தல், மது அருந்துதல், பெண் சிசுக்கொலை, குழந்தை உழைப்பு, பெண் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் தாய்ப்பால் பற்றிய பல சமூக விழிப்புணர்வுகளை பாடி வருகிறார்கள்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

அனிதா குப்புசாமி சென்னை பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது தன்னோடு படித்த புஷ்பவனம் குப்புசாமியை சந்தித்து இருக்கிறார். இருவரும் இணைந்து பல்வேறு போட்டிகளிலும் கச்சேரிகளிலும் ஒன்றாக பாடி இருக்கிறார்கள். இவர்கள் முதலில் நட்பாக பழகி பிறகு காதலித்து திருமணமும் செய்து இருக்கின்றனர். இவர்களுக்கு பல்லவி என்கிற ஒரு மகள் பிறந்திருக்கிறார். தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி வந்ததாகவும் அதுபடியே தனக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது என்றும் கூறியிருக்கிறார்.

குழந்தையின் இறப்பு

குழந்தையின் இறப்பு

அனிதா குப்புசாமிக்கு ஆப்ரேஷன் மூலமாகத்தான் இரண்டாவது குழந்தை பிறந்ததாம். இரண்டாவதாக பிறந்த ஆண் குழந்தை அவ்வளவு அழகாக இருந்ததாம். கலராகவும் முகத்தில் ஒரு வசீகரகத்தோடும் இருந்ததாம். ஆனால் இவர் மயக்கத்தில் இருக்கும் போது மருத்துவர்கள் அந்த குழந்தைக்கு தவறாக ஊசி செலுத்தி விட்டார்களாம். அதனால் குழந்தையின் நெஞ்செல்லாம் எரிந்து குழந்தை இறந்து விட்டது என்று கண் கலங்க பேட்டியில் பேசி இருக்கிறார்.

உயிர் தப்பித்த தருணம்

உயிர் தப்பித்த தருணம்

இந்த நிலையில் அனிதா குப்புசாமி ஒருமுறை தன்னுடைய வீட்டில் மாடியில் நடந்து கொண்டிருந்தாராம். அப்போது திடீரென வீட்டிற்கு கீழே இறங்கி வரும்போது பக்கத்து வீட்டில் இருந்து ஒரு குழந்தை இவரை பார்த்து சிரித்து இருக்கிறது. இவர் அந்த இடத்தில் நின்று அப்படியே லயத்து போனாராம். அந்த குழந்தையை பார்த்து அந்த நேரத்தில் இவருக்கு ஒரு போன் கால் வந்திருக்கிறது. இவர் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். அதே நேரத்தில் இவருடைய கணவர் புஷ்பவனம் குஷ்புசாமி வீட்டிற்கு வந்திருக்கிறார். அவர் வீட்டிற்குள் வரும்போது வீட்டிற்குள் இருந்து கேஸ் லீக் ஆன வாடை வந்திருக்கிறது. அதை கவனித்து உடனே அவர் அடுப்பை அணைத்து இருக்கிறார். ஆனால் நான் அவருக்கு முன்பு நான் சென்று இருந்தால் கண்டிப்பாக அதை கவனித்திருக்கவே மாட்டேன். வீட்டில் லைட்டை போட்டு இருப்பேன். வீடு முழுக்க முழு பரவி இருந்த கேசால் அன்று எங்கள் குடும்பமே அழிந்து போய் இருப்போம். எனக்கு அந்த நேரத்தில் வந்த ஒரு போன் காலால் என்னுடைய கணவர் வீட்டிற்கு கீழே இறங்கி வந்ததால் தான் எங்களுடைய உயிர் காப்பாற்றப்பட்டது என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+