நாம ஜெயிச்சுட்டோம் மாறா... அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய அந்தோணி தாஸ்... குவியும் வாழ்த்துக்கள்
பாடகர் அந்தோணி தாஸ் தன்னுடைய அம்மாவின் ஆசையை நிறைவேற்றி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
சென்னை: தமிழ் சினிமாவின் பிரபலமான பாடகராக இருக்கும் அந்தோணி தாசன் தற்போது தன்னுடைய அம்மாவின் ஆசைக்காக விமானத்தில் கூட்டிக்கொண்டு சென்றிருக்கிறார்.
பல வருடங்களாக நினைத்துக் கொண்டிருந்தது நடந்துவிட்டது என்று மகிழ்ச்சியை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கும் அந்தோணி தாசனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தன்னை வளர்த்து இந்த நிலைமைக்கு ஆளாக்கிய தாய்க்கு பாடகர் அந்தோணி தாசன் செய்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

பாடகராக கிடைத்த வாய்ப்பு
பாடகர் அந்தோணி தாசன் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் சிறுவயதிலிருந்தே பாடல்களின் மீது தீராத காதலால் இருந்திருக்கிறார். அதன் காரணமாகத்தான் இவர் நாட்டுபுற பாடகராக உருமாறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இப்ப வரைக்கும் பல கச்சேரிகளை செய்து கொண்டிருக்கிறார். மேலும் தெருக்கூத்து நிகழ்ச்சிகளிலும் இவர் பாடியிருக்கிறார். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தால் இவருக்கு சினிமாவிலும் பாட வாய்ப்பு கிடைத்தது. இவருடைய திறமையை தெரிந்து கொண்ட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனால் தான் இவருடைய பாடலுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம்.

முதல் வாய்ப்பும் வெற்றியும்
பாடகர் அந்தோணி தாசன் முதல் முறையாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் என்ற திரைப்படத்தில்," காசு பணம் துட்டு துளி மணி" என்ற பாடலை பாடியிருக்கிறார். அந்த பாடல் ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து பாண்டியநாடு, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற பல திரைப்படங்களில் குத்தாட்ட பாடல்களை பாடி இருக்கிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாகவும் இவர் சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார்.

சமையலிலும் அசத்தல்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு குக்காக கலந்து கொண்டு தன்னுடைய திறமையை நிரூபித்து இருந்தார். அதற்கு பிறகு இவருடைய முகமும் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைய தொடங்கியது. அதை தொடர்ந்து தற்போது பல படங்களில் கமிட் ஆகி பாடி கொண்டு வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய அம்மாவின் நீண்ட நாள் ஆசையை அந்தோணி தாசன் நிறைவேற்றி இருக்கும் தகவல்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்தோணி தாசனின் அம்மாவிற்கு விமானத்தில் பயணம் செய்வது என்பது நீண்ட நாள் கனவாக இருந்ததாம். அதனால் அந்தோணி தாசன் தன்னுடைய தாயை விமானத்தில் அழைத்து சென்று அந்த ஆசையை நிறைவேற்றி இருக்கிறார்.

தாயின் ஆசை நிறைவேற்றம்
இந்த வீடியோவை தன்னுடைய instagram பக்கத்தில் பதிவிட்ட அந்தோணி தாசன்," பூமியிலிருந்து வானத்தைக் காட்டிய என் தாய்க்கு வானத்திலிருந்து பூமியை காட்டி விட்டேன் நன்றி..." என்று கூறி இருக்கிறார். இப்படி அந்தோணி தாசன் வெளியிட்ட பதிவு தற்போது சமூக இடைத்தளத்தில் வைரல் ஆக வரும் நிலையில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அம்மாவை மிஸ் பண்ணும் பலரும் தங்களுடைய பாசங்களையும் கருத்துகளாக வெளியிட்டு வருகிறார்கள்.
-
ஜாய் கிரிஸில்டா வக்கீலுடன் சீரியல் நடிகை செய்த சதி! நாஞ்சில் விஜயன் வெளியிட்ட ஆதாரம்.. வெளிவரும் ரகசியம் -
வருணுடன் திருமணத்தை நிறுத்தியது இதனால்தான்! அப்பவே வெளிப்படையாக பேசிய திரிஷா.. காரணம் இதுதானாமே! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்!












Click it and Unblock the Notifications