Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீரியலில் இப்படி பண்ணுறாங்களே! தப்பா பண்றாங்க? அதுதான் பயம்.. வருத்தத்தில் பேசிய ஏ.ஆர் ரகுமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடகர் ஏ.ஆர் ரகுமான் தன்னுடைய பாடல்களை கிரிடிட் இல்லாமல் சீரியல்களில் பயன்படுத்தி கொள்வதாக தன்னுடைய வருத்தத்தை தெரிவித்திருக்கிறார்.

பல சீரியல்களில் தன்னுடைய பாடல்கள் எந்த அனுமதியும் இல்லாமல் ஒலிக்கப்பட்டு வருகிறது என்று ஏ.ஆர் ரகுமான் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.

சிலர் பாடல்களில் தப்பான பெயர்களை போடுகிறார்கள் என்று தன்னுடைய வருத்தத்தை ஏ.ஆர் ரகுமான் தெரிவித்திருக்கிறார்.

Singer AR Rahman laments that his songs are aired without credits in small screen serials

ஏ.ஆர் ரகுமான் வருத்தம்

பாடகர் ஏ.ஆர் ரகுமான் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் சமீபத்தில் தான் கோச்சடையான் படத்தின் ஓ எஸ் டி வெளியிட்டேன். ஏன் இவ்வளவு நாள் தாமதம் என்றால் மணிரத்னம் சார் படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது சீரியலில் கிரெடிட் இல்லாமல் என்னுடைய இசையை பயன்படுத்துகின்றார்கள். எந்த ஒரு கிரிடிட் இல்லாமல் வருவது எனக்கு கஷ்டமாக இருந்தது. ஒரிஜினல் ஸ்கோர் சிஸ்டம் வரும் வரைக்கும் ரிலீஸ் பண்ண வேண்டாம் என்று நினைத்தேன். இப்போதெல்லாம் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அதில் ஒரு சிலதை மட்டும் மாற்றுகிறார்கள். பெயரை தப்பாக போடுகிறார்கள். இதற்கு பயந்து தான் நான் ரிலீஸ் பண்ணாமல் இருந்தேன் என்று கூறி இருக்கிறார்.

முதல் படம்

தற்போது சோசியல் மீடியாவில் ஏ.ஆர் ரகுமான் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இந்திய அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக திகழும் ஏ.ஆர் ரகுமான் சென்னையில் பிறந்து சிறுவயதிலிருந்தே இசையில் இருந்த ஆர்வத்தால் பல கச்சேரிகளில் பாடி இருக்கிறார். இவர் முதல் முதலாக ரோஜா என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். முதல் படத்திலேயே யார்ரா இந்த மனுஷன் என்று பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருந்தார்.

Singer AR Rahman laments that his songs are aired without credits in small screen serials

பலமொழி பாடல்கள்

ஏ.ஆர் ரகுமான் பாடல்களுக்கு ரசிகர்களின் மத்தியில் எப்போதுமே தனி வரவேற்பு இருக்கிறது. சோகமாக இருந்தாலும் ஏ.ஆர் ரகுமான் பாடல் வேண்டும். இல்லை நண்பர்களோடு சேர்ந்து குத்தாட்டம் போட வேண்டும் என்றாலும் அங்கே ஏ.ஆர் ரகுமான் பாடல் வேண்டும் என்று பலர் அடம்பிடிக்கும் அளவிற்கு இவருடைய பாடல்கள் பலருடைய ஃபேவரைட். முதல் திரைப்படத்திலேயே தேசிய விருதையும் பெற்ற ஏ.ஆர் ரகுமான் பிறகு ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

Singer AR Rahman laments that his songs are aired without credits in small screen serials

ஆஸ்கார் நாயகனின் வருத்தம்

சர்வதேச அளவில் திறை துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கார் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் தமிழை நிமிர செய்தவர் ரகுமான். இப்படி குறுகிய காலகட்டத்திலேயே பாலிவுட், கோலிவுட் என எல்லா மொழிகளையும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துக் கொண்டிருக்கும் ஏ.ஆர் ரகுமான் தற்போது சின்னத்திரையில் செய்யும் அட்டூழியங்கள் குறித்து பேசி இருப்பது நெட்டிசன்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. காரணம் தற்போது பல சீரியல்களில், பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் பாடல்கள் தவறாமல் இடம்பிடித்து விடுகிறது. காதல் காட்சிகள் மட்டும் அல்லாமல் சோக சீன்களிலும் கூட திரைப்பாடல்கள் தான் அங்கே இடம் பிடிக்கிறது. இதுகுறித்து சமூக வலைதளத்திலும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+