Chinmayi: மார்பிங் போட்டோவை போட்டு மிரட்டிய நபர்! சின்மயி செய்த செயலை பாருங்க! சரியான பதிலடி
சென்னை: பாடகியாக மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் சின்மயி செய்த செயல் பற்றி தான் இப்போ இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது. அதாவது சின்மயியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து ஒருவர் சின்மயி மிரட்டி இருக்கிறார். அதற்கு சின்மயி தரமான சம்பவம் செய்து விட்டிருக்கிறார்.
சினிமாவில் இருக்கும் ஒரு சிலர் தங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றாலும், சரி பிறருக்கு ஏதாவது பிரச்சனை என்றாலும் சரி அதை பற்றி கருத்து சொல்வதை தவிர்த்து வருவார்கள். காரணம் இதனால் நமக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ? அல்லது நமக்கு ஏதாவது வாய்ப்பு வராமல் இருந்து விடுமோ என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு சிலர் எதற்கும் துணிந்து செயல்படுவார்கள். அதில் ஒருவர் தான் பாடகி சின்மயி.

சின்மயி 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடல்கள் பலவற்றையும் பாடி இருக்கிறார். அவருடைய இனிமையான குரல் அந்த பாட்டை இன்னொரு முறை கேட்க வைக்க தூண்டும் வகையில் தான் இருக்கும். சில வருடங்களாக சின்மயி பாடாமல் இருந்த நிலையில் இப்போது மீண்டும் பாட தொடங்கி இருக்கிறார். ஆனால் இவர் அடிக்கடி சோசியல் மீடியாவில் சர்ச்சைகளையும் ஏற்படுத்திவிடுவார். அதுபோல சில சம்பவங்களுக்கு குரல் கொடுக்கும் நபராகவும் இருக்கிறார்.
மார்பிங் போட்டோ
இந்த நிலையில் எக்ஸ் பக்கத்தில் ஒருவர் நடிகை ஒருவரின் மார்பிங் போட்டோஸ் மற்றும் வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த சின்மயி தன்னுடைய கண்டனங்களை தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதோடு காவல்துறையை நேரடியாக டேக் செய்து புகார் கொடுத்து இருக்கிறார். இதற்கு பிறகு வேறு ஒரு சம்பவமும் நடந்திருக்கிறது. அதாவது சின்மயி காவல்துறையில் புகார் கொடுத்ததும் அந்த எக்ஸ் பக்கத்தில் சின்மயியின் மார்பிங் மற்றும் ஏஐ புகைப்படங்களை பகிர்ந்து சின்மயியை மோசமாக விமர்சித்து கேப்ஷன் போட்டு இருக்கிறார்கள்.
சின்மயி வீடியோ
இதை பார்த்ததும் சின்மயி அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இருக்கிறார். மேலும் அந்த போஸ்ட் போட்டவரை பற்றிய தகவலையும் எடுத்து இருக்கிறார். பிறகு இதை பற்றி பேசி சோசியல் மீடியா பக்கத்தில் வீடியோ இருக்கிறார். அதில் தான் மார்பிங் போட்டோவை பகிர்ந்த எக்ஸ் பக்கம் மற்றும் அந்தப் பக்கத்தை பயன்படுத்தியவரின் தகவல் போன்றவற்றையும் பகிர்ந்து இருக்கிறார். சின்மயி வெளியிட்ட அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் பேசும்போது, பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு அடங்கி போக வேண்டும் என்று எண்ணம் இந்த ஆணாதிக்க சமூகத்தில் பலருக்கும் இருக்கிறது. அப்படி அடங்கி போகாத பெண்களும், பெண் குழந்தைகளும் செத்துப் போகலாம் என்று பதிவிட்டுள்ளார். இந்த ஆணாதிக்கவாதிகள் எப்போதும் பெண்கள் அடங்கிப் போக வேண்டும் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து கேள்வி கேட்பவர்களுக்கும், அவர்களை எதிர்த்து பேசும் பெண்களையும் அவர்கள் தொடர்ந்து ஏதாவது சித்தரித்து கொண்டே தான் இருப்பார்கள்.
இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் முன்பு பேய், வசியம் செய்பவள் என்று எல்லாம் சொல்லி வந்தார்கள் ஆனால் இன்றைக்கு ஏஐ மூலம் மார்பிங் புகைப்படங்களை உருவாக்கி வருகிறார்கள். இந்த குரூர புத்தி கொண்ட ஆண்களுக்கு இதைத்தவிர வேறு எதுவும் தெரியாது. அவர்களை பார்த்து நாமும் அல்லது நமது குடும்பத்தினரோ பயப்படத் தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் நாம தைரியமாக இருக்க வேண்டும், குடும்பத்தினரையும் தைரியப்படுத்த வேண்டும் என்று ஆதங்கத்தோடு பேசி இருக்கிறார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications