நடிகர் மோகன்லாலுக்கு பிறந்தநாள்..பாடகி சித்ரா வெளியிட்ட பதிவு..அதில் அவர் குறிப்பிட்ட அந்த வார்த்தை!
சென்னை: பாடகி சித்ரா நடிகர் மோகன்லால் பிறந்தநாளுக்கு தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். அதற்கு மோகன்லாலின் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த வகையில் நடிகர் மோகன்லால் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் என்ட்ரி கொடுத்தாலும் அதிலிலும் தன்னுடைய தனித்துவத்தை காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அந்த வகையில் மே 21ஆம் தேதியான இன்று அவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

மோகன்லாலுக்கு இன்று 64 வயதாகிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய சினிமா வாழ்க்கையில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கொண்டிருக்கும் மோகன்லால் தன்னுடைய 18ஆவது வயதில் "திராணோட்டம்" என்ற திரைப்படத்தின் மூலமாக நடிக்க தொடங்கி இருந்தாலும் அவருக்கு முதலில் "மஞ்சில் விரிச்சா பூக்கள்" என்ற படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்த படம் தான் முதலில் வெளியாகி இருந்தது.
அதே நேரத்தில் மலையாளத்தில் அவரை பலரும் லலேட்டன் (மூத்த சகோதரன்) என்று அழைத்து வருகிறார்கள். இந்த நிலையில் பாடகி சித்ரா, மோகன்லாலுக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அதில் என்னுடைய லலேட்டனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் பிறந்த நாளை அனுபவியுங்கள் என்று அவருடைய புகைப்படத்தோடு வாழ்த்துக்கள் தெரிவிக்க அதற்கு அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதிலும் ஒரு சில ரசிகர்கள் கமெண்டில் மோகன்லால் குறித்து கவிதைகளையும் பதிவு செய்திருக்கிறார்கள்.
பாடகி சித்ரா தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் அதிகமான பாடல்கள் பாடிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் மோகன்லால் தன்னுடைய அண்ணன் என்று சித்ரா கூறி இருக்கும் நிலையில் இந்த பதிவு அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதுபோல சித்ரா வெளியிட்ட பதிவுக்கு கீழே அதிகமானோர் மோகன்லால் எங்களுக்கும் அண்ணன் தான் என்று அவரை லலேட்டன் என்று குறிப்பிட்டு வருகிறார்கள்.

மோகன்லாலின் நடிப்பு மலையாள சினிமாவை தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் அதிகமாக பிரதிபலித்திருக்கிறது. அதிலும் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து இருவர், சிறைச்சாலை, ஜில்லா, உன்னைப்போல ஒருவன், காப்பான் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக இருவர் படத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும் ,ஏழைகளின் விடிவெள்ளியாகவும் அடையாளம் படுத்தப்பட்ட எம்ஜிஆரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆனந்தன் கேரக்டரில் அவ்வளவு சிறப்பாகவும் உயிர்ப்புடனும் நடித்துக் காட்டி இருந்தார்.
தமிழ் மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இன்று அவருடைய பிறந்தநாளுக்கு அவர் சமீபத்தில் நடித்துக் கொண்டிருக்கும் எம்புரான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications