ஜெயம் ரவி உங்களுடன் பத்திரமாக இருக்கிறாரா? பாடகி கெனிஷா கொடுத்த பதில் என்ன தெரியுமா? ஆர்த்திக்குமா?
சென்னை: நடிகர் ஜெயம் ரவியுடன் ரகசிய உறவில் இருப்பதாக வெளியான வதந்திகளுக்கு பாடகி கெனிஷா பிரான்சிஸ் பதிலளித்துள்ளார். அது போல் இந்த வதந்திகளை பரப்ப வேண்டாம் என நேற்றைய தினம் பிரஸ் மீட்டில் ஜெயம் ரவியும் கேட்டுக் கொண்டிருந்தார்.
தனுஷ் ஐஸ்வர்யா, இமான்- மோனிகா, ஜிவி பிரகாஷ்- சைந்தவி வரிசையில் ஜெயம் ரவியும் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியிட்டிருந்தார். தங்களை சுற்றியுள்ளவர்களின் நலனுக்காக இந்த கசப்பான முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதை இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு என ஜெயம் ரவி தெரிவித்திருந்தார். இதனால் அவருடைய மனைவி ஆர்த்தி அதிர்ச்சியடைந்து மறுப்பு தெரிவித்திருந்தார். ஜெயம் ரவியின் இந்த முடிவு தன்னிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்று தெரிவித்திருந்தார்.
மேலும் ஆர்த்தி கூறியிருந்ததாவது: ரவியிடம் பேசுவதற்கு நான் பல முறை முயற்சித்தும் அது நடக்கவில்லை. எனக்கும் இரு குழந்தைகளுக்கும் என்ன வழி என்பதை போல் ஆர்த்தி கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்துதான் ஜெயம் ரவி கோவாவில் இருந்து கொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டார் என தகவல்கள் கிடைத்தன.
மேலும் ஆர்த்தியும் ஜெயம் ரவியை தேடி அவருடைய வீட்டிற்கு சென்றால் அங்கு அவர் இல்லை என்றும், ரவி தங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டார் என ரவி குடும்பத்தினர் தெரிவித்திருந்தார். ஜெயம் ரவியின் அறிக்கை பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தது.
இந்த நிலையில் ஆர்த்திக்கு நடிகருடன் தொடர்பு, அதனால்தான் விவாகரத்து முடிவு என்றெல்லாம் ஆதாரமில்லாத செய்திகள் காற்றில் பரவின. அதே வேளையில் ஆர்த்தி, ஜெயம் ரவியை எந்த அளவிற்க விரும்பினார் என்ற பழைய பேட்டி வீடியோவும் வெளியாகியிருந்தன.
இதைத் தொடர்ந்து ஜெயம் ரவிக்கு பாடகி கெனிஷாவுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் அதனால்தான் ஆர்த்தியை விவாகரத்து செய்யவிருப்பதாகவும் ஒரு தகவல் வந்தது. ஆனால் இதுவும் பொய் என்பதை ஜெயம் ரவி நேற்று நடத்திய பிரஸ் மீட்டில் நிரூபித்துவிட்டார்.
ஜெயம் ரவி கூறுகையில் , வாழு வாழ விடு, ஒரு பாடகியுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுகிறார்கள். இப்படி செய்யாதீர்கள். கெனிஷா 600 லைவ் ஷோக்களில் பாடியவர். தனது வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உயர்ந்தவர். அவர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மனநல ஆலோசகர். நானும் அவரும் சேர்ந்து ஒரு ஹீலிங் மையம் தொடங்கப் போகிறோம். அதை கெடுக்காதீங்க, யாரும் கெடுக்க முடியாது என ஜெயம் ரவி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கோவாவை சேர்ந்த கெனிஷாவை ட்ரோல் செய்வது போல் ரசிகர்கள் பல கேள்விகளை கேட்டுள்ளனர். அதில் கெனிஷாவின் பதிவில் "ஜெயம் ரவி உங்களுடன் பத்திரமாக இருக்கிறாரா" என நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு கெனிஷா பதிலளிக்கையில், நீங்கள் உங்கள் பெற்றோர்களுடன் பாதுகாப்பாக இருக்கிறீர்களா, உங்களது கீழ்த்தரமான சிந்தனைகளில் இருந்தும் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? முதலில் நீங்கள் ஒரு பாதுகாப்பான நபர்தானா என பல்வேறு கேள்விகளை கெனிஷா எழுப்பியுள்ளார். இந்த பதிலை அவர் ஆர்த்திக்கும் சேர்த்து தெரிவித்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கெனிஷாவின் பதில் வைரலாகி வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications