அவங்க இரண்டு பேரும் எனக்கு துணையாய் இருக்கிறாங்க! நான் கர்ப்பமா? விளக்கம் கொடுத்த கெனிஷா
சென்னை: பாடகி கெனிஷா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்திருந்தார். அதில் அதிகமானோர் கெனிஷாவிடம் நீங்க கர்ப்பமாக இருக்கிறீர்களா? என்று கேட்டு வருவதாகவும் ஆனால் உண்மை நிலை என்ன என்பது பற்றி கெனிஷா பேசுகிறார்.
பாடகி கெனிஷா பற்றிய செய்திகள் சோசியல் மீடியாவில் சில மாதங்களாகவே பரவி வருகிறது. கெனிஷா சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். தான் பாடும் வீடியோ மற்றும் சுற்றுலா செல்லும் வீடியோக்களையும் பகிர்ந்து வரும் கெனிஷா பற்றிய சர்ச்சைகளும் அளவுக்கு அதிகமாக பரவி வருகிறது. அதாவது நடிகர் ரவி மோகன் அவருடைய மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடத்தில் அறிவித்திருந்தார். அப்போது ரவி மோகன் கெனிஷா உடன் பழகி வருவதால் தான் ரவி மோகன் ஆர்த்தியை பிரிந்து விட்டார் என்றெல்லாம் வதந்திகள் பரவி வந்தது.

ரவி மோகன் சர்ச்சை
அதுபோல கெனிஷா மற்றும் ரவி மோகன் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வீடு திருமண பங்க்ஷனில் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஜோடியாக கலந்து கொண்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் சிலர் கூறி வந்தனர். ஆனால் அதை எல்லாம் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் மறுத்திருந்தனர்.
கெனிஷா பேட்டி
இந்த நிலையில் கெனிஷா இப்போது கர்ப்பமாக இருக்கிறாரா? என்று அவரிடம் சில கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு கெனிஷா சமீபத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில், நான் பெங்களூரில் பிறந்து வளர்ந்தேன். அதற்குப் பிறகு கனடா சென்று விட்டேன். அங்கு இசை கல்லூரியில் படித்து முடித்த பிறகு மீண்டும் பெங்களூருக்கு வந்து விட்டேன். என்னுடைய அப்பா அம்மாவிற்கு நான் ஒரே பொண்ணு. அதனால் நான் சொல்வதை தான் அவர்கள் கேட்பார்கள்.
பாடகி கெனிஷா விளக்கம்
என்னுடைய அம்மாவும் பாடகி, அப்பாவும் பாடகர். எனக்கு 17 வயதாக இருக்கும்போது அவர்கள் இறந்து விட்டாங்க. அதற்குப் பிறகு என்னுடைய வாழ்க்கையில் நான் பல கஷ்டங்களை கடந்து தான் வந்திருக்கிறேன். முதலில் காபி ஷாப் ஒன்றில் 500 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்தேன். இப்போ கூட சோசியல் மீடியாவில் என்னைப் பற்றியும் என்னுடைய அப்பா, அம்மா பற்றியும் பலர் தப்பு தப்பா பேசுறீங்க. உங்களுக்கு வாய் இருக்கிறது என்று நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அதுவே நாளைக்கு உங்களுக்கு திரும்ப கிடைக்கும் "கர்மா" சும்மா விடாது.

கர்மா
நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூட சிலர் கருத்துக்கள் பகிர்ந்து வருகிறார்கள். எனக்கு சிக்ஸ் பேக் தான் இருக்கிறது. "நான் ஒன்றும் கர்ப்பமாக இல்லை" யார் என்ன பேசினாலும் அது அவர்களுக்கு திரும்ப வரும். கர்மா சும்மா விடாது. எது உண்மை எது பொய் என்று எல்லோருக்கும் ஒரு நாள் தெரியும். என்னைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் உங்களில் பலருக்கு அப்பா அம்மா கூடவே இருப்பார்கள்.
பெற்றோர் துணை
நீங்கள் செய்கிற தப்பை எல்லாம் அவங்க கேள்வி கேப்பாங்கன்னு நீங்க வீட்டுக்கு வந்தா மட்டும் தான் பயப்படுவீங்க. ஆனா என்னுடைய பெற்றோர் மேலே இருந்து என்னை 24 மணி நேரமும் பார்த்துக்கொண்டே இருக்கிறாங்க. அவங்களுடைய பார்வையில் இருந்து நான் தப்ப முடியாது. அதனால் நான் அவர்களுக்கு பயந்து தான் நடப்பேன். எனக்கு என்னுடைய பெற்றோர் மட்டும்தான் துணையாய் இருக்கிறாங்க, என்று அந்த பேட்டியில் கெனிஷா பேசியிருக்கிறார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications