'தஞ்சாவூரு மண்ணெடுத்து’ பாடிய கிருஷ்ணராஜும் காலமானார்.. தேவா சோகம் தணிவதற்குள் அடுத்த துயரம்அதிர்ச்சிஅதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் இசை ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சோகமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவாவின் மறைவால் ரசிகர்கள் இன்னும் துயரத்தில் இருக்கும் நிலையில், அவர் இசையமைத்த மறக்க முடியாத பாடல்களில் ஒன்றான 'தஞ்சாவூரு மண்ணெடுத்து' பாடலை பாடிய கிருஷ்ணராஜின் மறைவு குறித்த செய்தியும் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இசையமைப்பாளர் கானா பிரபா, கிருஷ்ணராஜின் புகைப்படத்தைப் பகிர்ந்து இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தேவானின் பாதையில் பாடகர் கிருஷ்ணராஜ். இறைவனின் திருவடிகளில் ஆழ்ந்த மரியாதை" என்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார். இந்த பதிவு இசை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணராஜ் என்றதும் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடல்தான். சேரன் இயக்கத்தில் முரளி, மீனா உள்ளிட்டோர் நடித்த பொற்காலம் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலுக்கு தேவா இசையமைத்திருந்தார். வைரமுத்து எழுதிய வரிகளை கிருஷ்ணராஜ் தனது குரலில் பாடியிருந்தார்.

Deva singer Krishna Raj

1997-ம் ஆண்டு வெளியான இந்த பாடல், அன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஒரு ஊரின் மண்ணையும், இன்னொரு பகுதியின் நீரையும் எடுத்து பொம்மை செய்யும் கைவினைக் கலைஞரின் பின்னணியில் அமைந்த பாடல் என்பதால், அதன் வரிகளும் இசையும் தனித்துவமாக அமைந்திருந்தன.

அதேபோல, 'காதல் கோட்டை' படத்தில் இடம்பெற்ற 'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா' பாடலின் மூலமாகவும் கிருஷ்ணராஜ் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். தொடர்ந்து பல திரைப்படங்களில் பாடியிருந்தாலும், 'தஞ்சாவூரு மண்ணெடுத்து' பாடல் அவரது இசைப் பயணத்தில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது. இந்தப் பாடலுக்காக அவருக்குத் தமிழக அரசின் சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதும் கிடைத்தது.

தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடலின் பெருமை

தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடலின் பெருமையைச சொல்வதற்கு இன்னொரு முக்கியமான சம்பவம் இருக்கிறது. சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதனுக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்திருந்தது. அந்த அளவுக்கு அவர் மனதில் இடம்பிடித்த பாடல், அவர் மறைந்தபோதும் அவருக்கான இறுதி நிகழ்வில் ஒலித்தது. 2016-ம் ஆண்டு எஸ்.ஆர். நாதன் மறைந்தபோது, அவரது இறுதி நிகழ்வில் 'தஞ்சாவூரு மண்ணெடுத்து' பாடல் ஒலிக்கப்பட்டது. ஒரு தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல், சிங்கப்பூர் முன்னாள் அதிபரின் இறுதி நிகழ்வில் ஒலிக்கும் அளவுக்குப் பெருமை பெற்றது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

இந்த சம்பவம் தேவாவின் இசைக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்பட்டது. அந்தப் பாடலை எழுதிய வைரமுத்துவின் வரிகளும், தேவாவின் இசையும், கிருஷ்ணராஜின் குரலும் இணைந்து மொழி எல்லைகளைக் கடந்து ஒரு தனி இடத்தைப் பிடித்திருந்தன. தேவாவின் மறைவால் அவரது இசையை நினைத்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு, அந்தப் பாடலைப் பாடிய கிருஷ்ணராஜ் குறித்த இந்த இரங்கல் செய்தியும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் இணைந்து உருவாக்கிய பாடல் மட்டும் காலத்தைக் கடந்து ரசிகர்களின் நினைவில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+