Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனோ மனைவி பேசுவது தப்பு! என் மகன் முதுகெல்லாம்.. அண்ணான்னு சொன்னானே! பாதிக்கப்பட்டவரின் தந்தை கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடகர் மனோவின் மகன்கள் தன் வீட்டு முன்பு இரண்டு இளைஞர்களை தாக்கிய விவகாரம் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் தப்பு செஞ்ச மகன்களுக்காக மனோவின் மனைவி பேசுவது தவறு. மனோவின் மகன்களால் என்னுடைய மகன் வாழ்க்கை அழிந்துவிட்டது. என் மகனை கதற கதற அடித்திருக்கிறார்கள் என்று கண்ணீர் மல்க அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

பிரபல திரைப்பட பின்னணி பாடகரான மனோ சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சாகீர் மற்றும் ரபீக் என இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பாடகர் மனோவின் மகன்கள் தங்களுடைய வீட்டின் முன்பு நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

television singer mano

அப்போது அந்தப் பகுதியில் கால்பந்து பயிற்சிக்கு வந்த வாலிபர்கள் சிலர் மனோவின் வீட்டின் எதிரே உள்ள ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு மனோவின் வீட்டை வேடிக்கை பார்த்தபடி நடந்து சென்றதாக கூறப்படுகிறது. மனோவின் மகன்கள் எதற்காக எங்களுடைய வீட்டை நோட்ட மீட்டவாறு சொல்கிறீர்கள் என்று கேட்டு தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ரித்தீஷ் மற்றும் கிருபாகரன் என்ற இரண்டு இளைஞர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனை கண்டதும் அவர்களோடு வந்த நண்பர்கள் ஓடிவிட்டனர். இதில் ரித்தீஷ் மற்றும் கிருபாகரன் இருவரையும் மனோவின் மகன்கள் முட்டி போட வைத்து சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இருவரும் வளசரவாக்கம் போலீஸில் புகார் கொடுத்து இருக்கின்றனர். அதில் மனோவின் மகன்களான ரபீக், சாகீர் மற்றும் அவருடைய நண்பர்கள் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இதில் இரண்டு பேரை போலீஸ் கைது செய்துள்ள நிலையில் தலைமறைவான மனோவின் இரண்டு மகன்கள் உட்பட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை பேட்டி ஒன்றில் கண்ணீர் மல்க பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில், ஒரு பிரபலத்தின் மகன் இவ்வளவு திமிராக இருக்கலாமா? எதற்காக என்னுடைய மகனை அடிக்கிறாங்க. என் மகன் அடிச்ச வீடியோவை நான் இன்னைக்கு தான் பார்த்தேன்.

அப்போ கூட அவன் அடி வாங்கும்போது அம்மா, அப்பா என்று கத்தல ஐயோ அண்ணா விட்ருங்கண்ணா.. அண்ணா அடிக்காதீங்க அண்ணா என்று தான் கத்துகிறான். ஒரு அண்ணா என்று கதறுகிற பையனை இப்படி போட்டு அடிக்கலாமா? அவன் வயசு என்ன? அவனால் உங்களை எதிர்த்து நிற்க முடியுமா? என் பையனை நீங்க போட்டு இப்படி அடிக்கிறது சரியா? நான் இதுவரைக்கும் என்னுடைய மகனை அடிச்சது கூட கிடையாது.

அவன் ஏதாவது தப்பு பண்ணா கூட அவனை பார்வையால் தான் நான் முறைப்பேன். ஆனால் சின்ன பிள்ளையை இந்த வயதில் இப்படி போட்டு அடிச்சிருக்காங்க... நான் நியூஸ் பேப்பரில் பார்க்கிறேன் என்னுடைய பையன் பேரு வந்து இருக்கு, எனக்கு அதிர்ச்சியா இருக்கு. தப்பு செஞ்ச மகன்களுக்கு பாடகர் மனோவின் மனைவி சப்போர்ட் செய்துகொண்டு இருக்குது. நான் அந்த அம்மாவுக்கு ஒன்னு சொல்ல விரும்புறேன். உங்க புருஷன் சம்பாதித்த பெயரை உங்க பசங்க கெடுக்குறானுங்க.

அதனால் எங்க வாழ்க்கை கெடுக்காதீங்க. நான் உங்களை மாதிரி அழ மாட்டேன். ஆனா என் மனசுக்குள்ள நிறைய இருக்கு.. ஒருவேளை மனோ மகன்கள் தப்பு செய்யலன்னா அவங்க போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கலாமே? ஏன் அவங்க கொடுக்கல? பிரச்சனை நடந்த அப்பவே ஏன் கம்ப்ளைன்ட் கொடுக்கல? ஆனா அவங்க சில போட்டோக்கள் வெளியிடுறாங்க அதெல்லாம் நானும் பார்த்தேன்.

அவங்க கிட்ட காசு இருக்கு அவங்க என்ன வேணாலும் வெளியிடலாம். என் பிள்ளை முதுகுல நான் தொட்டு பாக்குறேன் உடம்பெல்லாம் அவ்வளவு வீங்கி இருக்கிறது. அதை பார்த்து எனக்கு அழுகை வருது. இந்த வேதனை யாருக்கும் வரக்கூடாது. நாங்க பெருமைக்காக வாழ்கிற ஆட்கள் கிடையாது. நாங்க தினம் சம்பாதிச்சாதான் எங்களுக்கு வாழ்க்கை அப்படின்னு தான் நாங்க இருக்கிறோம்.

என் பையனை அடிச்ச அந்த பையன் வந்து என் பிள்ளை கிட்ட கைய கொடுத்து என்னை மன்னிச்சுக்கப்பான்னு கேட்கணும். அது மட்டும் எங்களுக்கு போதும். வேற எதுவும் கூட வேண்டாம் என் பிள்ளைங்க எங்கேயோ இருக்காங்கன்னு மனோ மனைவி சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஆனா ஒளிச்சு வச்சுட்டு எல்லா டெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்காங்க. நான் என் பிள்ளையை நல்லா வளர்த்திருக்கிறேன். ஆனால் நீங்க பிள்ளைய நல்லா வளர்க்கல மிஸ்சஸ் மனோ.. என்று அந்த பேட்டியில் ஆதங்கத்தோடு பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+