நீங்க இந்துவா மாறிட்டீங்களா? பயில்வான் ரங்கநாதன் கேட்ட கேள்வி! நறுக்குன்னு பதிலடி கொடுத்த பாடகர் மனோ
சென்னை: தென்னிந்திய திரையுலகில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான, துடிப்பான குரலால் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் பாடகர் மனோ (நாகூர் பாபு). இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நூற்றுக்கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ள இவரிடம், சமீபத்திய பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் எழுப்பிய கேள்வி ஒன்று, சமூக வலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.

மனோவிடம் பயில்வானின் கேள்வி
சமீபத்தில் ஒரு பேட்டியில், மனோவிடம் பயில்வான் ரங்கநாதன், அவரது தனிப்பட்ட மத நம்பிக்கைகள் குறித்துக் கேள்வி எழுப்பினார். பயில்வான், மனோவைப் பார்த்து, "நீங்க இந்துவா மாறிட்டீங்களா? சமீபத்தில கோயிலுக்கு போய் அங்கப்பிரதட்சணம் பண்ணி இருக்கீங்க..." என்று நேரடியாக கேட்டிருந்தார். மனோ பொதுவாக பல்வேறு மத வழிபாட்டு தலங்களுக்கு செல்வது வழக்கமாக இருந்தாலும், பயில்வானின் இந்தக் கேள்வி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மனோ கொடுத்த முற்போக்கான பதிலடி
பயில்வானின் இந்த கேள்விக்கு சற்றும் தாமதிக்காமல், பாடகர் மனோ அளித்த பதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, முற்போக்கான சிந்தனைக்கு உதாரணமாக பாராட்டப்பட்டு வருகிறது. மனோ அளித்தப் பதிலில், "பாடகருக்கு எல்லா மதமும் சொந்தம்... நான் இந்து... நான் முஸ்லீம்.. நான் கிறிஸ்தவன்.. என்று இல்ல. நான் எல்லா இடத்துக்கும் போவேன்."
இசைக்கு மதம் இல்லை
மேலும், "என் பாட்டை எல்லாரும் தானே கேக்கிறாங்க... எல்லா மதமும் சம்மதம். அதுக்கு மேல நான் மனிதன்" என்று அவர் பதிலளித்தார். ஒரு கலைஞனின் படைப்புகளுக்கு மதம் இல்லை என்றும், மனிதம்தான் உயர்ந்தது என்றும் மனோ அளித்த இந்த அறிவார்ந்த பதிலடிக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பாடகர் மனோவின் பயோகிராஃபி
பாடகர் மனோவின் நிஜப் பெயர் நாகூர் பாபு இவர் 15 மொழிகளில் 30,000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இசைஞானி இளையராஜா இசையில் மட்டும் 2,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். இளையராஜா இசையில், 'பூவிழி வாசலிலே' படத்தில் "அண்ணே அண்ணே நீ" என்றப் பாடலைப் பாடித் தமிழில் அறிமுகமானார்.
ஹிட் பாடல்கள்
"முக்காலா முக்காபுலா" (காதலன் - ஏ.ஆர்.ரஹ்மான்), "தில்லானா தில்லானா" (முத்து),"அழகிய லைலா" (உள்ளத்தை அள்ளித்தா), "அட உச்சந்தல உச்சியிலே" (சின்னத் தம்பி) "தூளியிலே ஆடவந்த" (சின்னத் தம்பி)
விருதுகள்
இவர் ஆந்திர மாநில அரசின் நந்தி விருதையும் , தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். பாடகர் மட்டுமன்றி, நடிகர் (சிங்கார வேலன்), தயாரிப்பாளர், இசையமைப்பாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் மற்றும் இசைப்போட்டி நடுவர் என பல தளங்களில் செயல்பட்டு வருகிறார். மனோ தனது கலையை எந்த மத எல்லைகளுக்குள்ளும் அடைத்து வைக்க விரும்பாமல், மனித நேயமே உயர்வானது என்ற கருத்தை வலியுறுத்தியிருப்பது, ரசிகர்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications