பிக் பாஸ் 8: சவுண்ட் சரோஜா முதல் சர்ச்சை பாடகர் வரை.. கடைசி நேரத்தில் செலக்ட் ஆன 5 பேர்.. வேற லெவல்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது அக்டோபர் ஆறாம் தேதி தொடங்க இருக்கிறது என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில் கடைசி நேரத்தில் 5 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் ஆறு படத்தில் சவுண்டு சரோஜாவாக மிரட்டிய நடிகை ஐஸ்வர்யா முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த விஜே விஷால் வரை 5 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. அதோடு நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்று பலரும் ஆர்வத்தோடு காத்திருப்பதாக கருத்து கூறி வருகிறார்கள். இப்படியான நிலையில் ஏற்கனவே ஒரு சிலர் கலந்து கொள்ளும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நடிகை ஐஸ்வர்யா: அதைத் தொடர்ந்து இப்போது கடைசியில் சிலருடைய பெயர் இடம் பிடித்திருக்கிறது. அதில் முதலாவதாக நடிகை ஐஸ்வர்யா பெயர் இருக்கிறது. அதாவது ஐஸ்வர்யா நடிகை லட்சுமியின் மகள் தான். இவர் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் ஆறு திரைப்படத்தில் சவுண்டு சரோஜாவாக நடித்தது இவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது. அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் வில்லியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.
சினிமாவில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் தொடர்ச்சியாக சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் சீனியர் நடிகையாக கலந்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பல சீனியர் நடிகைகள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் கடந்த சீசனில் நடிகை விசித்ரா பெரிய அளவில் பிரபலம் அடைந்து விட்டார். அவர் வரிசையில் இவரும் பிரபலம் அடையப்போகிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

சௌந்தர்யா நஞ்சுண்டன்: அடுத்ததாக கலந்து கொள்ளும் போட்டியாளரின் பெயர் நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டன். இவர் கடந்த சீசனில் கலந்து கொண்ட நடிகர் விஷ்ணுவின் காதலி என்று கூறப்படுகிறது. இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் சில நாட்களாகவே வைரலாகி வரும் நிலையில் இவரும் இந்த சீசனில் கலந்து கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது. இவர் சென்னை பொண்ணாக இருந்தாலும் தர்பார், ஆதித்யா வர்மா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

பாடகர் பால் டப்பா: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் பல பாடகர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே இந்த வரிசையில் வேல்முருகன், கானா பாலா, சின்ன பொண்ணு, அசல் கோளாறு என்று சிலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து இந்த சீசனில் பால் டப்பா என்று தன்னை அழைத்துக் கொள்ளும் அணிஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதி ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.

கோகுல்நாத்: பாடகர்களைப் போலவே ஒவ்வொரு சீசனிலும் டான்ஸ் மாஸ்டர்கள் கலந்து கொள்வதும் வாடிக்கையாக இருக்கிறது. அமீர், சாண்டி மாஸ்டர், ராபர்ட் மாஸ்டர் என பலர் வந்த வரிசையில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கேட்டகிரியில் இந்த முறை மானாட மயிலாடு நிகழ்ச்சியில் பிரபலமான கோகுல்நாத் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவர் டான்ஸ் ஸ்கூல் நடத்திக் கொண்டு சினிமாவில் பணிபுரிந்து வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறாராம்.
விஜே விஷால்: அதுபோல ஏற்கனவே சின்னத்திரை பிரபலங்கள் பலர் இந்த சீசனில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வரிசையில் வி.ஜே விஷால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. வி.ஜே விஷால் சமீபத்தில் தான் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகி இருந்தார். நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் ஆரம்பத்திலிருந்து இவர் தான் எழிலாக நடித்திருந்தார். ஆனாலும் சீரியலை விட்டு விலகி இருந்த நிலையில் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications