ஸ்டைலாக மாறி ஆங்கில பாடலை பாடிய ராஜலட்சுமி.. கணவர் சொன்ன ஒரே வார்த்தை.. என்ன இப்படி மாறிட்டாங்க?
பாடகி ராஜலட்சுமி ஆங்கில பாடல் பாடிய வீடியோவை அவருடைய கணவர் பகிர்ந்து இருக்கிறார்
சென்னை: பாடகி ராஜலட்சுமி மார்டன் உடையில் ஸ்டைலாக மாறி இங்கிலீஷ் பாடல் ஒன்றை பாடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
தன்னுடைய மனைவி வீடியோவை பகிர்ந்து பாடகர் செந்தில் கணேஷ் செந்தமிழ் ஸ்டைலிஷ் தமிழச்சி என்று கருத்து கூறி இருக்கிறார்.
திடீரென மார்டன் உடையில் ஸ்டைலாக மாறிய ராஜலட்சுமியின் வீடியோவை ரசிகர்கள் பார்த்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

கிராமத்து பாடலால் பிரபலம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக சமூகவலைத்தளத்தில் அனைவருக்கும் பரிச்சயமான ஒரு கிராமத்து ஜோடிதான் ராஜலட்சுமி மற்றும் செந்தில். இவர்களில் ஜோடிப்பொருத்தம் க்யூட்டாக இருக்கிறது என்று சொல்லும் ரசிகர்கள் ஒரு பக்கம் என்றால் இவர்களின் ஜோடி பாடல்கள் வேற லெவல் என்று வர்ணிக்கும் ரசிகர்கள் அதிகமானோர் இருந்து வருகின்றனர். இவர்களுடைய கிராமத்து இசை ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

ஹிட்டான சின்ன மச்சான்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக தங்களுடைய கிராமத்து இசையை உலகமெங்கும் கொண்டு வந்த இந்த ஜோடி பல திரைப்படங்களிலும் பின்னணி பாடல்களை பாடிக் கொண்டிருக்கிறது. சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் பலருடைய இதயங்களை கலந்து கவர்ந்து கொண்ட இந்த ஜோடி பிரபுதேவா படத்தில் இடம்பெற்ற ஏ..ஏ..சின்ன மச்சான் என்னும் பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்த சூப்பர் ஹிட் பாடலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் கிராமத்து இசையில் இவர்கள் பாடிய பாடல்கள் பல ஹிட் ஆகி இருக்கிறது.

ஸ்டைலிஷ் தமிழச்சி
இந்த நிலையில் பாடகி ராஜலட்சுமி சமீபத்தில் ஒரு பேட்டியில் தனக்கு இங்கிலீஷ் பாட்டு பாட தான் ரொம்பவே பிடிக்கும். அது விரைவில் நடக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார். அது தற்போது நடந்திருக்கிறது. இங்கிலீஷ் பாடல் ஒன்றுக்கு இவர் ஸ்டைலாக மாறி பாட்டு பாடி அசத்தியிருக்கிறார். அந்த வீடியோவை செந்தில் கணேஷ் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து ஸ்டைலிஷ் தமிழச்சி என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இது தற்போது ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதிகமான ரசிகர்கள் ராஜலட்சுமியின் புது முயற்சிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷின் தீவிரமான ரசிகர்களில் சிலர் நாங்கள் இதுவரைக்கும் நாட்டுப்புற பாடகி ஆக பார்த்த நிலையில் திடீர் இந்த மாற்றம் எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. மார்டன் உடையை விட கிராமத்து ராஜலட்சுமி தான் எங்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்று தங்களுடைய விருப்பங்களை தெரிவித்து வருகிறார்கள்.

புது திரைப்படம்
இதுவரைக்கும் நாட்டுப்புற பாடல்களும், திரைப்பட பாடல்களும் பாடி வந்த ராஜலட்சுமியின் புது முயற்சி பலருடைய பாராட்டை பெற்று வரும் நிலையில், சமீபத்தில் தான் ராஜலட்சுமி புது திரைப்படத்தில் நடிக்கும் போஸ்டர் வெளியானது. திரைப்படத்தின் போஸ்டரில் ராஜலட்சுமி நயன்தாராவுக்கு டப் கொடுக்கும் வகையில் கெத்தாக போஸ் கொடுத்திருந்தார். அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இவருக்கு முக்கியமான கேரக்டராக இருப்பதால் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியும் வருகிறார்கள்.
-
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
"குடும்ப வாழ்க்கை” மொத்த சர்ச்சைகளுக்கும் போல்டாக முற்றுப்புள்ளி வைத்த நடிகை சுகன்யா.. பாராட்டும் ரசிகர்கள் -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
திரிஷா பிரண்ட் நடிகை சார்மியோட மட்டும் ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்காதீங்க! எச்சரித்த விஜய் சேதுபதி! பின்னணி காரணம் -
"29 வயசுல உங்களுக்கு இந்த ஃபீலிங் வந்திருக்கா? Netflix-ல் டிரெண்டாகும் ‘29’ படம் ஏன் இளைஞர்களின் மனசை கலக்குது!" -
மன்னிப்பு கேட்டும் ஓயாத சர்ச்சை... ரவி மோகனுக்கு என்ன ஆச்சு? நீதிமன்றத்துக்கு தெரியாதா? பிரபலம் கேள்வி -
100ஐ தொடாமல் போன சூப்பர் குட் பிலிம்ஸ் RB சௌத்ரி.. காற்றில் கரைந்த ரியல் ஜென்டில்மேனின் கடைசி ஆசை -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications