சரிகமப சீனியர்ஸ் சீசன் 5ல் சைந்தவிக்கு பதில் அதிதி சங்கர்.. ஆரம்பமே சரவெடி! அதுவும் அந்த பாடல் ஹைலைட்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த இசை நிகழ்ச்சியான 'சரிகமப சீனியர்ஸ் சீசன் 5' விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம், வழக்கமான நடுவர்களில் ஒருவரான பாடகி சைந்தவி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக பிரபல பாடகர் கார்த்திக் நடுவர் பொறுப்பை ஏற்றுள்ளார். மேலும், சிறப்பு விருந்தினராக நடிகையும், இயக்குநர் ஷங்கரின் மகளுமான அதிதி ஷங்கர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டியுள்ளார்.
இந்த சீசன், கடந்த 2025 மே 24 ஆம் தேதி முதல் ஜீ தமிழில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. விஜே அர்ச்சனா இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, பாடகர்கள் ஸ்ரீனிவாஸ், சைந்தவி, விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன், எஸ்.பி. சரண் ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்று போட்டியாளர்களின் திறமையை மதிப்பிட்டு வருகின்றனர்.

சரிகமப சீனியர்ஸ் சீசன் 5
'சரிகமப' மேடை எப்போதும் பாடகர்களின் திறமையை வெளிப்படுத்தும் ஒரு பிரம்மாண்டமான தளமாகவே இருந்து வருகிறது. போட்டியாளர்கள் தங்கள் குரல் வளத்தால் பார்வையாளர்களைக் கட்டிப்போடுகின்றனர். நடுவர்கள், ஒவ்வொரு பாடலுக்கும் தங்கள் ஆழ்ந்த இசை அறிவுடன் கூடிய விமர்சனங்களையும், பாராட்டுகளையும் வழங்கி வருகின்றனர். பாடகர்களின் உணர்ச்சிபூர்வமான வெளிப்பாடுகளும், மேடையில் நிகழும் சில சுவாரசியமான தருணங்களும், பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன.
டூயட் ரவுண்டு
கடந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் டூயட் ரவுண்டு நடைபெற்றது. அதில் போட்டியாளர்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடல்களை பாடி பலரையும் வியக்க வைத்திருந்தனர். அதுபோல 80ஸ், 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட்டான பல பாடல்கள் கடந்த வாரத்தில் பாடப்பட்டது.
இந்த வார சிறப்பு அம்சங்கள்
சைந்தவியின் இடத்திற்கு வந்த பாடகர் கார்த்திக், தனது அனுபவமிக்க கருத்துக்களாலும், உற்சாகமான அணுகுமுறையாலும் போட்டியாளர்களை ஊக்கப்படுத்தினார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அதிதி ஷங்கர், தனது துடிப்பான பேச்சாலும், உற்சாகமான பங்கேற்பாலும் நிகழ்ச்சியில் புதிய பொலிவைச் சேர்த்தார். அவரது வருகை, இளம் தலைமுறை பார்வையாளர்கள் மத்தியிலும் நிகழ்ச்சியின் மீதான ஈர்ப்பை அதிகரித்துள்ளது. அதிதி சங்கர் அங்கிருந்த போட்டியாளர்களுடன் சேர்ந்து பாட்டு பாடி டான்ஸ் ஆடி இருக்கிறார் இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு வாரமும் புதிய சவால்களுடன், எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் 'சரிகமப சீனியர்ஸ் சீசன் 5', இறுதிப் போட்டிக்கு யார் முன்னேறுவார்கள் என்ற ஆவலை ரசிகர்கள் மத்தியில் தூண்டியுள்ளது.












Click it and Unblock the Notifications