சைந்தவி என்னோட சின்ன பொண்ணு.. அறிவும் இருக்கு.. ஆனால்! முகத்துக்கு நேராக பேசிய ஸ்ரீநிவாஸ்
சென்னை: பாடகி சைந்தவி மற்றும் பாடகர் ஸ்ரீநிவாஸ் இருவரும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருக்கின்றனர். அப்போது சரிகமப நிகழ்ச்சியில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி வெளிப்படையாக பேசி இருக்கின்றனர். அதோடு இசை மற்றும் சரிகமப நிகழ்ச்சியில் நடுவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை குறித்து பெருமையாக பேசி இருக்கிறார்கள்.
பாடகி சைந்தவி பற்றிய செய்திகள் தான் சில மாதங்களாக இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 12 வயதில் இருந்தே பாடல் பாடத் தொடங்கி இருந்தாலும் அன்னியன் படத்தில் இடம்பெற்ற "அண்டங்காக்கா கொண்ட காரி" என்ற பாடல் மூலமாக தான் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். அதற்குப் பிறகு எண்ணற்ற மெலடி மற்றும் காதல் பாடல்களை பாடி இருக்கும் சைந்தவி சில சீரியல்களுக்கு டைட்டில் பாடல் பாடி இருக்கிறார்.

அதிலும் அத்திப்பூக்கள், வள்ளி, தமிழ்ச்செல்வி, தாலாட்டு, கானா, மீனா, சிங்க பெண்ணே போன்ற சீரியலில் டைட்டில் பாடலை சைந்தவி தான் பாடி இருக்கிறார். அதோடு பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்த நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை திருமணம் செய்து கொண்ட சைந்தவி சமீபத்தில் தான் ஜீவி பிரகாஷை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார்.
அந்த நேரத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் மனம் ஒத்து தங்களுடைய பிரிவை அறிவித்திருந்தனர். அதே நேரத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியிலும் நடுவராக கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அதே நிகழ்ச்சியில் அவரோடு நடுவராக இருக்கும் பாடகர் ஸ்ரீநிவாஸ் உடன் பேட்டி ஒன்றில் சைந்தவி கலந்து கொண்டிருக்கிறார்.
அப்போது ஸ்ரீநிவாஸ் குறித்து சைந்தவி பேசுகையில் சரிகமப நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறேன். ஆனால் என்னோடு நடுவராக இருக்கும் ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் கார்த்திக் எல்லோரும் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு என்னிடம் ஆலோசித்து தான் எடுப்பார்கள். ஒருவேளை அவர்களுக்கு கோல்டன் ஷவர் கொடுப்பதற்கு முடிவெடுத்து இருக்கலாம் ஆனால் அது எனக்கு யோசித்தால் வேண்டாம் என்று விட்டுவிடுவார்கள்.
அதே நேரத்தில் எனக்கு ஒருவருக்கு கோல்டன் ஷவர் கொடுக்கலாம் என்று நான் முடிவு எடுத்து இருந்தால், உங்களுடைய முடிவுக்கு சம்மதம் தெரிவிக்கிறோம் என்று சொல்லிவிடுவார்கள். இது எனக்கு அவர்கள் கொடுக்கும் சப்போர்ட். அதனாலேயே என்னால் அந்த நிகழ்ச்சியில் தொடர முடிகிறது. அவர்கள் எந்த முடிவும் என்னிடமும் கலந்து ஆலோசித்து எடுப்பது நிஜமாகவே பெருந்தன்மை என்று பேசி இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து ஸ்ரீநிவாஸ் சைந்தவி குறித்து பேசுகையில் சைந்தவி என்னுடைய வயதில் பாதி தான் இருக்கும். ஆனால் நல்ல அறிவுள்ளவர். இசை பற்றி அவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார். சைந்தவிக்கு பாட்டு தான் எல்லாமே... அவங்க அவ்ளோ தெரிஞ்சு வெச்சிருக்காங்க. வயதுக்கும் இசைக்கும் சம்பந்தமே கிடையாது. என்னை விட ரகுமான் சார் ஐந்து வயது குறைவானவர்.
ஆனால் அவர் என்னைவிட அதிகமாக இசையில் பெரியவராக இருக்கிறார். அவருக்கு மியூசிக்கில் 300 வயசு பெரியவர். ஆனால் சில நேரங்களில் நான் உட்கார்ந்து இருக்கும் போது ரகுமான் சார் என்னிடமே டேக் ஓகேயா என்று கேட்பார். அவர் நம் இவ்வளவு இசை தெரிந்திருக்கிறமே நான் ஏன் இவரிடம் கேட்க வேண்டும் என்று நினைக்க மாட்டார். இசையை விட நீயும் நானும் பெருசல்ல இசை இருக்கும் இடம் தான் அழகானது என்று அந்த பேட்டியில் ஸ்ரீநிவாஸ் பேசியிருக்கிறார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications