இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல! ஆனால் இப்போதான் சந்தோஷமா இருக்கு.. ரகசியங்களை உடைத்த சைந்தவி.. நெகிழ்ச்சி
சென்னை: நடிகையும் பாடகியுமான சைந்தவி சமீபத்தில் அளித்த பேட்டி மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சி பற்றி பகிர்ந்த அனுபவங்கள் தற்போது இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இனிமையான குரலால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள சைந்தவி, இப்போது தனது இயல்பான பேச்சு மற்றும் நேர்மையான அனுபவங்களாலும் பாராட்டுகளை பெற்றுவருகிறார்.

நடுவர் சைந்தவி
தற்போது சரிகமப நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் சைந்தவி, இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்த தனது பயத்தை பற்றி ஓபன் ஆக பகிர்ந்துள்ளார். "நான் மேடையில் பாடும்போது டான்ஸ் ஆடினால் மக்கள் என்ன நினைப்பார்கள் என்று ஆரம்பத்தில் பயமாக இருந்தது. எனக்கு சரியாக டான்ஸ் ஆட வருமா என்ற சந்தேகமும் இருந்தது.
சரிகமப நிகழ்ச்சி அனுபவம்
ஆனால் இப்போது ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பாடுவது மட்டும் போதாது, பார்ப்பவர்களுக்கு அடென்ஸையும் ஈர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதனால் நானும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்து டான்ஸ் ஆட தொடங்கினேன்" என்று தெரிவித்துள்ளார்.
சைந்தவி பேட்டி
மேலும் அவர் கூறுகையில், "நான் ஒரு ப்ரொபஷனல் டான்ஸர் இல்லை. எனக்கு டான்ஸ் பற்றி பெரிய அறிவும் இல்லை. ஆனால் அந்த தருணத்துக்கு ஏற்ற மாதிரி என்னால் முடிந்ததை செய்தேன். மக்கள் இவ்வளவு ஆதரவு தருவார்கள் என்று நான் நினைக்கவே இல்லை. இப்போது எல்லோரும் மிகவும் பாசத்துடன் நடந்து கொள்கிறார்கள். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது" என்று கூறியுள்ளார்.
சைந்தவியின் இன்னொரு முகம்
நிகழ்ச்சியின் பின்னணியைப் பற்றியும் சைந்தவி சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார். "டிவியில் நீங்கள் பார்க்கிறதெல்லாம் கேமரா முன் நடப்பவை மட்டுமே. ஆனால் கேமரா ஆஃப் ஆன பிறகு இன்னும் நிறைய ஜாலியான சம்பவங்கள் நடக்கின்றன. நிகழ்ச்சியில் கலந்து கொள்கிற குழந்தைகள் எங்களுடன் ரொம்பவே நெருக்கமாகி விடுகிறார்கள். சில நேரங்களில் அந்த அனுபவங்கள் எனக்கு பயத்தையும், அதே நேரத்தில் மகிழ்ச்சியையும் தருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அர்ச்சனா குறித்து சிரித்தபடியே, "அர்ச்சனா எப்போதும் என்கிட்ட சின்ன சின்ன கலாய்ப்புகள் பண்ணுவாங்க. நாங்க ரொம்ப க்ளோஸ். ஒரு எபிசோட்ல எனக்கு காது குத்துற மாதிரி கலாய்த்தாங்க. அப்போது நான் ரொம்ப பயந்துட்டேன். அது உண்மையிலேயே நடந்திருந்தா என்ன ஆகும் என்று நினைத்தாலே பயமா இருக்கு" என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.
குழந்தை தனம்
ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றியும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். "இப்போது பாடும் குழந்தைகளுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ரியாலிட்டி ஷோக்கள் மூலம் நல்ல சப்போர்ட் கிடைக்கிறது. ஆனால் நான் பாட ஆரம்பித்த காலத்தில் இப்படி வாய்ப்புகள் அதிகமாக இல்லை. அதனால் இந்த அனுபவம் எனக்கு புதியதாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
தொடக்கத்தில் இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக வரும்போது மிகவும் பதட்டமாக இருந்ததாகவும், "அப்போது எடுத்த முடிவு சரியா என்று தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது அதை நினைத்துப் பார்க்கும்போது, இந்த வாய்ப்பை எடுத்தது மிகவும் சரியான முடிவு என்று தோன்றுகிறது" என்று பெருமையுடன் கூறியுள்ளார்.
சைந்தவியின் ஹிட் பாடல்கள்
சைந்தவி தனது இசைப் பயணத்திலும் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளார். 12 வயதிலேயே பாடத் தொடங்கிய சைந்தவி அந்நியன் திரைப்படத்தில் இடம்பெற்ற அண்டங்காக்கா கொண்டக்காறி என்ற பாடல் மூலமாகத்தான் பாடகியாக தன்னை நிரூபித்தார் அதற்கு பிறகு விழிகளில் ஒரு வானவில், பிறை தேடும் நிலவிலே, எழுவய பூக்களையே போன்ற பாடல்களை பாடி இருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications