Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல வருடங்களுக்கு பிறகு நிறைவேறிய கனவு! நடிகர் கமல்ஹாசனுடன் பாடகி சைந்தவி வெளியிட்ட பதிவின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி பின்னணிப் பாடகிகளில் ஒருவரான சைந்தவி, சமீபத்தில் நடிகர் உலக நாயகன் கமல்ஹாசனுடன் எடுத்துக்கொண்டப் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கூடவே, சில வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசனுடன் இணைந்து பாடியபோது எடுத்தப் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ள இந்தப் பதிவு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Saindhavi Kamal Haasan GV Prakash

சைந்தவி: குரலால் வசீகரித்த பாடகி

சைந்தவி தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். தனது மென்மையான மற்றும் அழுத்தமானக் குரலால் ரசிகர்களை வசீகரித்தவர். குறிப்பாக, உணர்வுப்பூர்வமானப் பாடல்களைப் பாடுவதில் இவர் வல்லவர். இவர் பாடிய பல பாடல்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. குறிப்பாக, விழிகளில் ஒரு வானவில், பிறை தேடும் இரவிலே, கையிலே ஆகாசம் போன்ற பல பாடல்கள் இவருக்குப் பெரிய புகழைப் பெற்றுத் தந்தன.

சொந்த வாழ்க்கை

இவர் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் பள்ளி பருவத்திலேயே இருந்தே காதலித்திருந்தாலும் இரண்டு குடும்பத்தின் சம்மதத்துடன் திருமணம் செய்திருந்தனர். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் கடந்த வருடத்தில் இருவரும் பிரிந்து போவதாக அறிவித்தனர். இது அந்த நேரத்தில் பெரிதாக பேசப்பட்டது. தாங்கள் பிரிந்தாலும் எந்த இடத்திலும் ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் ஒற்றுமையாக சப்போர்ட் செய்து வருகிறார்கள். இருவரும் பிரிந்த பிறகும் கூட பல மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

கமல்ஹாசனுடன் ஒரு ஸ்டார் ஸ்ட்ரக் தருணம்

சமீபத்தில் சைந்தவி, கமல்ஹாசனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்டு, தான் அடைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். சைந்தவி வெளியிட்டப் பதிவில், "And this happened! ✨" என்று குறிப்பிட்டு, "As artists, we often get starstruck when we meet multifaceted people whose aura just takes over you - and this was that moment for me! 💙" என்று தெரிவித்துள்ளார்.

அதாவது, "கலைஞர்களாகிய நாங்கள், பல பரிமாணங்களைக் கொண்ட மனிதர்களைச் சந்திக்கும்போது, அவர்களின் ஆளுமையால் வியந்து போகிறோம். கமல்ஹாசன் சார் அத்தகைய தருணத்தை எனக்குக் கொடுத்தார்!" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு, கமல்ஹாசன் மீது சைந்தவி கொண்டுள்ள மரியாதையையும், பாசத்தையும் வெளிப்படுத்துகிறது.

Saindhavi Kamal Haasan GV Prakash

பழைய புகைப்படம்

அதோடு, அவர் சில வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசனுடன் இணைந்துப் பாடியபோது எடுத்தப் புகைப்படத்தையும் பகிர்ந்து, தன் நினைவுகளைப் புதுப்பித்துள்ளார். உலக நாயகனுடன் சைந்தவி பகிர்ந்துள்ள இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கமல்ஹாசன் ரசிகர்கள் மற்றும் சைந்தவியின் ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, தங்களது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர். கலைத் துறையில் உச்சத்தில் இருக்கும் இரு ஆளுமைகள் இணைந்து இருக்கும் இந்தப் புகைப்படம், சினிமா மற்றும் இசை ரசிகர்களுக்கு ஒரு நெகிழ்ச்சியானத் தருணத்தைக் கொடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+