Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாடகி ஸ்வேதா மோகன் நினைவிருக்கா?இசையால் கிடைத்த அவமானமும் அங்கீகாரமும்.. கணவர் செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் ஸ்வேதா மோகன் ஆரம்பத்தில் பாடலே வேண்டாம் என்று முடிவு எடுத்து இருந்தாராம்.

இன்று இசையால் ஸ்வேதாவுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கும் நிலையில் ஆரம்பத்தில் இசையால் அவருக்கு அவமானமும் கிடைத்திருக்கிறதாம்.

பல காதல் பாடல்கள் பாடிய ஸ்வேதாவின் காதல் சுவாரசியங்கள் பற்றியும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

Singer Shweta Mohans experiences and love story in the singing industry

பாடகி ஸ்வேதா மோகன் பாடகி சுஜாதா மோகனின் ஒரே மகள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். இவர்கள் இருவரும் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவர்களாகவே இருந்து வருகிறார்கள். பாடகி ஸ்வேதா அவருடைய அம்மாவை போலவே குழந்தையாக இருக்கும் போது பாடுவதற்கு வந்திருக்கிறார்.

சுஜாதா மோகன் தன்னுடைய ஆறாவது வயதில் பாடல் பாட தொடங்கிய நிலையில் ஸ்வேதா மோகன் 10 வயதில் ஏ ஆர் ரகுமான் இசையில் "இனி அச்சம் அச்சம் இல்லை "எனும் பாடலை தன்னுடைய மழலை மொழியில் அழகாக பாடியிருப்பார். இந்த பாடலை பாடுவதற்காக ஏ ஆர் ரகுமான் தான். ஸ்வேதா மோகனிடம் கேட்டிருக்கிறார் அப்போது அனுராதாவின் ஒத்துழைப்பினால் அவர் சொல்லிக் கொடுத்தது போலவே ஸ்வேதா மோகன் பாடியதாக கூறியிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து அதே வருடத்தில் பம்பாய் திரைப்படத்தில் இடம் பெற்ற குச்சி குச்சி ராக்கம்மா என்னும் பாடலையும் ஸ்வேதா பாடி இருக்கிறார். இப்படித்தான் அவருடைய வாழ்க்கை தொடங்கியது. ஆனால் அதற்குப் பிறகு இவர் 10 வருடம் பாடவே இல்லை. இப்படி பாட வேண்டாம் என்று முடிவெடுத்ததற்கு பல காரணங்கள், சாக்குப் போக்கு எல்லாம் அவரே சொல்லி இருக்கிறார்.

அவர் பாட வேண்டாம் என்று முடிவு எடுத்ததற்கு முக்கியமான காரணமாக நினைத்தது. அவருடைய அம்மா தன்னுடைய குரல் நல்லா இருக்க வேண்டும் என்று ஐஸ்கிரீம் சாப்பிடவே மாட்டாராம். அது போல நாமும் பாடல் பாடினால் ஐஸ்கிரீம் சாப்பிட முடியாது என்று அதற்காகவே பாட்டு பாட மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்ததாகவும் கூறி இருக்கிறார். இந்த காரணத்தைக் கேட்டு பல பேர் சிரித்து இருந்தாலும் அது தான் அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்ததாம்.

இவர் பிடிவாதமாக இருந்ததால் அவருடைய அம்மா சுஜாதா மோகன் கூட உனக்கு இந்த ஃபீல்டு வேண்டாம், நீ மாத சம்பளத்துக்கு கூட வேற வேலைக்கு போனாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டாராம். ஆனால் ஸ்வேதா மோகன் பல பாடல்கள் பாடுவதற்கு காரணமாக அடித்தளம் எடுத்து கொடுத்தது பவதாரணி தானாம். ஒருமுறை ஸ்வேதா ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும்போது ஸ்கூலில் நடந்த பாட்டு போட்டியில் இவர் கலந்து கொண்டிருக்கிறார்.

ஸ்கூல் போயிட்டு வந்த ஸ்வேதா தன்னுடைய அம்மாவிடம் நான் இன்னைக்கு பாட்டு போட்டியில் கலந்து கொண்டிருந்தேன். அதற்கு ஜட்ஜா வந்தது பவதாரணி தான் என்று கூறினாராம். உடனே சுஜாதா பவதாரணிக்கு போன் பண்ணி இன்னைக்கு என்னுடைய மகள் பாடினாலா எப்படி இருந்தது என்று கேட்டாராம். அப்போது பவதாரணி அது உங்க பொண்ணா சூப்பரா பாடினார். அவருக்கு நல்ல டேலண்ட் இருக்கு தொடர்ந்து பாட வைங்க என்று சொல்லி இருக்கிறார்.

Singer Shweta Mohans experiences and love story in the singing industry

அதற்குப் பிறகு தான் ஸ்வேதா மியூசிக் முறைப்படி கற்றுக் கொண்டாராம். ஆனாலும் அப்போது பல பிரச்சனைகளை சந்தித்ததாகவும் கூறி இருக்கிறார். அதற்கு பிறகு தான் இப்போது கிட்டத்தட்ட 20 வருடங்களாக தொடர்ந்து பல பாடல்களை பாடி கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில்தான் அவருடைய காதல் கதையும் நடந்திருக்கிறது.

இவர் ஸ்கூலில் மட்டுமல்லாமல் காலேஜிலும் பாட்டு போட்டியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு பாட்டு போட்டியில் காற்றில் எந்தன் கீதம் என்னும் பாடல் இவர் பாடியிருக்கிறார். பாடல் நன்றாக இருந்தது என்று நண்பர்கள் எல்லாம் பாராட்டி இருக்கிறார்கள். அப்போது எப்படியும் நமக்கு பரிசு கிடைக்கும் என்று இவர் காத்திருந்திருக்கிறார். ஆனால் இவருக்கு அங்கு பரிசு கிடைக்க வில்லையாம். அந்த ஏமாற்றத்தால் அவர் அழுது கொண்டு இருந்திருக்கிறார்.

பிறகு அவருடைய தோழி ஆர்த்தி ஸ்வேதாவை சமாதானப்படுத்தி வா எங்க வீட்டுக்கு போகலாம் என்று கூட்டிக்கொண்டு போயிருக்கிறார். அப்போது இவர் வீட்டு கதவை தட்டியதும் உள்ளிருந்து ஒரு நபர் ஷார்ட்ஸ் மட்டும் போட்டுக்கொண்டு நின்னுருக்கார். இவரை பார்த்ததும் அவர் குடுகுடுன்னு ஓடிப்போய் ஒளிந்து விட்டாராம். அப்போது ஸ்வேதாவுக்கு அவரை அறியாமலே சிரிப்பு வந்து விட்டதாம். அழுது கொண்டிருந்த ஸ்வேதா இவர் செய்த செயலால் சிரித்து இருக்கிறார். அது ஆர்த்தியின் அண்ணன் தானாம்.

அப்படியே தோழியின் வீட்டிற்கு இவர் அடிக்கடி செல்ல தோழியின் அண்ணனோடு இவருக்கு காதல் ஏற்பட்டு பிறகு கல்யாணமும் முடிந்திருக்கிறது. தற்போது அவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருக்காக ஸ்வேதா ஒரு பாடலை பாடியிருந்தார். அப்போது அவர் வெட்கப்பட்டு சிரித்து இருந்தார். அந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலானது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+