இனி இவங்கதான் வாழ்க்கையில் எல்லாமே! மேடையில் வெளிப்படையாக அறிவித்த சைந்தவி.. குவியும் வாழ்த்து
சென்னை: பாடகி சைந்தவி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் குடும்பத்தை கட்டிப்பிடித்து கண் கலங்கி அழுதிருக்கிறார். அதோடு இவர்கள்தான் என்னுடைய வாழ்க்கை என்று உருக்கமாக சைந்தவி பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ் பற்றிய செய்திகள் இணையத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாடகி சைந்தவியும் ஜிவி பிரகாஷும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுடைய திருமண வாழ்க்கைக்கு சாட்சியாக ஆத்வி ஒரு பெண் குழந்தை இருக்கிறார். இவர்கள் இருவரும் பல பேட்டிகளில் தங்களுடைய காதலை மகிழ்ச்சியாக பகிர்ந்து இருக்கிறார்கள். ஆனால் திடீரென்று தங்களுடைய 11 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று அறிவித்திருந்தனர்.

ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியின் விவாகரத்து செய்தி கேட்டு பல ரசிகர்கள் இவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறி வந்தனர். அப்போதும் ஒரு சிலர் நெகட்டிவ் கமெண்ட்களும் கொடுத்து வந்தனர். அந்த நேரத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் நாங்கள் மனம் ஒத்துதான் இந்த பிரிவு முடிவை எடுத்திருக்கிறோம். அதனால் எங்களுடைய முடிவை யாரும் குறை சொல்ல வேண்டாம். எங்களுடைய திருமண பந்தத்தில் இருந்து தான் நாங்கள் விலகுகிறோமே தவிர நாங்கள் நண்பர்களாக தொடர்வோம் என்று கூறியிருந்தனர்.
அது போலவே சில மாதங்களுக்கு முன்பு ஜிவி பிரகாஷ் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சைந்தவி பாட்டு பாடி இருந்தார். அப்போது இவர்கள் இருவரும் பாடிய பிறை தேடும் இரவிலே பாடல் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல ரசிகர்கள் பீல் பண்ணி கமெண்ட் போட்டு இருந்தார்கள்.

அதுபோல சைந்தவி அதிகமான பாடல்கள் ஜி.வி பிரகாஷ் இசையில் தான் பாடி இருக்கிறார். அதிலும் விழிகளில் ஒரு வானவில், ஆருயிரே ஆருயிரே, மனசெல்லாம் மழையே, நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள, யார் இந்த சாலை ஓரம், விண்மீன் விதையில், பிறை தேடும் இரவிலே என்று பல பாடல்கள் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறது.
அதுபோல சைந்தவி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரத்தில் சைந்தவியின் சகோதரரும் அவருடைய குடும்பத்தினரும் சரிகமப நிகழ்ச்சியில் கெஸ்ட் ஆக கலந்து கொண்டனர். அப்போது சைந்தவி குறித்து அவருடைய அண்ணன் உருக்கமாக பேசியிருந்தார்.

அதில் சைந்தவி தான் எங்கள் வீட்டில் செல்ல குழந்தை. இப்போ அவளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது ஆனாலும் எங்களுக்கு என்றும் இவள் தான் முதல் குழந்தை என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே சைந்தவி அழுது கொண்டு அண்ணனை கட்டிப்பிடித்து இருக்கிறார்.
பிறகு கண்ணீரோடு பேசிய சைந்தவி நான் என்னுடைய அண்ணியையும் கூப்பிட விரும்புகிறேன். ஏன்னா இந்த பாண்டு அண்ணன் தங்கச்சிக்குள்ள கண்டினியூ ஆகணும் என்றால் அதற்கு அந்த மாதிரி ஒரு வைஃப் கிடைக்கணும் என்று சொன்னதும் சைந்தவியின் அண்ணியும் அவருடைய மகனும் மேடைக்கு வந்தனர்.

அப்போது தன்னுடைய அண்ணன் மகனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சைந்தவி அதைத்தொடர்ந்து பேசினார். அப்போது நான் ரொம்ப கொடுத்து வச்சவள். கடவுள் என்னை இந்த குடும்பத்தில் பிறக்க வச்சதுக்கு ரொம்ப நன்றி. நான் பின்னாடி விழுந்தா இவங்க எல்லாருமே என்ன பிடிக்க இருக்கிறார்கள் என்று தைரியம் எனக்கு எப்போதும் இருக்கு என்று பேசி இருக்கிறார். இந்த க்யூட்டான வீடியோ இணையத்தில் பலருடைய கமெண்ட்களை பெற்று வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications