Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுசித்ரா இறக்கிய இடி.. யாரந்த விஐபி? அதுவிடுங்க, நயன்தாரா, ரஜினிகாந்த் மீது பிரபலம் வைத்த விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாராவின் கல்யாண டாக்குமென்ட்ரி விவகாரம் மீண்டும் வெடித்துள்ளது.. ஓடிடி ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' பட காட்சிகளையும் நயன்தாரா இணைத்துள்ளாராம்.. இதனை நீக்கக் கோரி, ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு, விசாரணையும் நடந்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டியொன்றில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதில், நயன்தாரா, ரஜினி போன்றோர் குடும்பத்தினரால் பணம் காய்க்கும் மரமாக பயன்படுத்தப்படுவதாக கூறியிருக்கிறார்.

BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள தமிழா தமிழா பாண்டியன்,
"நயன்தாராவை பொறுத்தவரை மனிதாபிமானம் நிறைந்த பெண்.. ஒருமுறை ஷூட்டிங் நடந்து கொண்டேயிருந்தபோது, லைட் பாய் மயங்கி விழுந்துவிடவும், அவரை மடியில் படுக்க வைத்து, தண்ணீர் தெளித்து, அந்த நபரை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவர் நயன்தாரா. அந்த வகையில் இரக்க சுபாவம் கொண்டவர்.

Television singer Suchitra rajinikanth vignesh shivan

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

ஆனால், நயன்தாராவை வைத்து, பல பல கோடிகளை குவிக்க ஆசைப்படுகிறார் அவரது கணவர் விக்னேஷ் சிவன்.. இதுவே அவரது தீராத ஆசையாகவும் உள்ளது.. நடிகை சோனா வீட்டில் பணிபுரிந்து, பிறகு தனுஷ் படத்தில் இயக்குனராகி, நயன்தாரா மூலம் பலகோடிகளுக்கு அதிபதியாகியிருக்கிறார்.. நயன்தாராவை வைத்து கோடிகளை குவிக்க முடியும் என்று நிரூபித்து கொண்டேயிருக்கிறவர்..

நயன்தாராவுக்கு இன்னும் 5 வருடங்கள் மார்க்கெட் இருக்கும்.. அதற்குள் நயன்தாராவை ஏடிஎம் மிஷினாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன்... ஆனால், மனதளவில் பரம ஏழையாகவே உள்ளார்.. அரசியல் பின்னணி காரணம்தான், அவரது தைரியத்துக்கு காரணம்.. மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டேயிருக்கிறார்கள். நேரம் வரும்போது, சரியானதை செய்துவிடுவார்கள்.

ஈசிஆர் - சுசித்ரா பேட்டி

ஈசிஆரில் நடக்கும் மதுவிருந்துகளில் வெள்ளி தட்டில் போதைப்பொருள் வழங்கப்படுகின்றன, அங்கு ஆண்களும், பெண்களும் போதையில் தள்ளாடுகிறார்கள் என்றெல்லாம் பாடகி சுசித்ரா சொல்லியிருக்கிறார். ஆனால், அவர்கள் யார் என்று இதுவரை தெரியவில்லை..

அதேபோல, அரசு நிலத்தில், வாடகை தராமல் இருக்கக்கூடியவர்கள் ரஜினி தம்பதியினர்.. மாநில, மத்திய அரசை ரஜினியால் பகைத்து கொள்ள முடியாது.. அப்படி படைத்து கொண்டால், ரஜினி வீட்டுக்கு ரெய்டு வந்துவிடும்..

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின்போது, அனில் அகர்வாலுக்கு ஆதரவாக அங்கு சென்று அம்மாவட்ட மக்களுக்கு எதிராக பேசினார். ஆனால், மக்கள் ரஜினியை புறக்கணித்துவிட்டார்கள்.. இப்படியொரு அவமானம் தூத்துக்குடியில் கிடைத்தது.

இலவச விளம்பரம்

ரஜினியை பொறுத்தவரை எப்போதுமே அரசியல் கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்ததில்லை.. தன்னுடைய படம் வரும்போது, 50 கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்ய வேண்டிவரும்.. இதுவே கட்சி ஆரம்பிப்பதாக சொன்னால், அந்த விளம்பரம் இலவசமாக கிடைத்துவிடும்.

லிங்கா படம் ஓடாமல், அதனால் தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்து, ரஜினி வீட்டை முற்றுகையிட்டு, வீட்டை பூட்டும் போராட்டம் நடந்ததா? இல்லையா? மொத்தத்தில், மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காதவர்.

இப்போதெல்லாம் பொதுவாக எந்த படமும் இப்போது ஓடுவதில்லை.. ஆனால் ஓடுவதை போல பிரம்மை ஏற்படுத்தப்படுகிறது.. ஆனால், இந்த முட்டாள் தமிழர்கள், நடிகர்களின் படத்தை பார்க்க 1500 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குகிறார்கள். வியர்வை சிந்தும் விவசாயியின் ஒரு மூட்டை நெல் 900 ரூபாய், ஆனால் 2 மணி நேரம் சினிமா பார்ப்பதற்கு 1200 ரூபாய் தருகிறார்கள் ரசிகர்கள்" என்றெல்லாம் பாண்டியன் விமர்சித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+