திமுக செய்த தவறு இதுதான்! அதனால்தான் விஜய்க்கு வெற்றி கிடைத்தது! இனி பிரச்சனை இருக்கு! பாடகி சுசித்ரா
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் 2026 முடிவுகள் வெளியாகி, நடிகரும் அரசியல் தலைவருமான விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது உறுதியாகியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் தீவிரமாக பகிரப்பட்டு வருகின்றன.

பாடகி சுசித்ரா பதிவு
இந்த நிலையில், பாடகி சுசித்ரா வெளியிட்ட பதிவு மிகவும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் தனது பதிவில், "இப்போ இளைஞர்கள் அரசியலோட முழுமையாக இணைந்துட்டாங்க. அவர்களை இனிமேல் யாராலும் பிரிக்க முடியாது. அவர்கள் தான் தேர்ந்தெடுத்த கட்சியிடமே கேள்விகள் கேட்க ஆரம்பிப்பாங்க... அதுக்காக காத்திருக்கணும்."
விஜய்க்கு கிடைத்த சப்போர்ட்
"ஜென் Z வாக்காளர்கள் இந்த தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காங்க. அவர்கள் எடுத்த முடிவு நேரடியாக தேர்தல் முடிவில் பிரதிபலிச்சிருக்கு." "திமுக மிகவும் தளர்ச்சியாக இருந்தது. அவர்கள் தங்களுக்குள் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்ததால், தரை மட்டத்தில் நடக்கும் மாற்றங்களை சரியாக கவனிக்கவில்லை."
திமுகவின் அலட்சியம்
"விஜயை சில சர்ச்சைகளில் இருந்து எளிதாக வெளியேற அனுமதிச்சது, அவருக்கு 'மற்ற எல்லாரையும் தாண்டி இருப்பவர்' என்ற ஒரு இமேஜை கொடுத்தது.""அந்த இமேஜ் தான் மக்களிடம் அவர் ஒரு வலுவான தலைவராக இருக்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
விவாதங்கள்
இந்த பதிவு வெளியானதும், சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் கிளம்பியுள்ளது. குறிப்பாக இளம் தலைமுறை அரசியலில் எவ்வாறு ஈடுபட்டு வருகிறது, அவர்கள் எடுத்த முடிவுகள் எப்படி தேர்தல் முடிவை மாற்றுகிறது என்பதற்கான எடுத்துக்காட்டாக சுசித்ராவின் கருத்து பார்க்கப்படுகிறது.
விஜய்க்கு பிரபலங்கள் வாழ்த்து
இதற்கிடையில், விஜயின் இந்த வெற்றிக்கு திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ தனது சமூக வலைதள பதிவில், "என் சகோதரர் விஜய் மற்றும் அவரது முழு அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழ்நாட்டில் பெற்றுள்ள இந்த பிரம்மாண்டமான வெற்றிக்கு பாராட்டுக்கள். இன்று மட்டுமல்ல, எப்போதும் இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும். உண்மையான ஜனநாயக தலைவராக நீங்கள் வழிநடத்துவதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், நடிகை நயன்தாரா தனது பதிவில், "Congratulations to Vijay sir 💐 you made history today 👍 This is just the beginning of many 😇" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகை திரிஷா நேரில் சென்று விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதுபோல் விஜயுடன் நடித்த நடிகை அசின், ரம்பா, மீனா, ஸ்ரேயா உட்பட பல நடிகர்களும் நடிகைகளும் தொடர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
மொத்தத்தில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று அரசியலில் வலுவான ஆரம்பத்தை பதிவு செய்துள்ள விஜயின் வெற்றியைத் தொடர்ந்து, இளம் தலைமுறையின் தாக்கம், அரசியல் கட்சிகளின் செயல்பாடு, மற்றும் பிரபலங்களின் கருத்துக்கள் ஆகியவை இணைந்து தமிழக அரசியல் களத்தை இன்னும் சூடுபிடிக்கச் செய்துள்ளன. சுசித்ராவின் இந்த பதிவு அந்த விவாதங்களில் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.
-
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்!












Click it and Unblock the Notifications