பிரியங்காவால் என் தம்பி மகன் வாழ்க்கையே போயிடுச்சு.. மணிமேகலைக்கு தான் சப்போர்ட்! சுசித்ரா பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகுவதை அறிவித்திருந்தார். அதற்கான காரணத்தையும் தெரிவித்து இருந்த நிலையில் பாடகி சுசித்ரா தான் மணிமேகலைக்கு சப்போர்ட் செய்வதாகவும் மணிமேகலையை பாடாய்படுத்தியது பிரியங்கா தான், அவரால் என்னுடைய அண்ணன் மகன் வாழ்க்கையே போயிடுச்சு என்று பாடகி சுசித்ரா இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நான்கு சீசன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்ததை தொடர்ந்து ஐந்தாவது சீசன் தொடக்கப்படுவதற்கு முன்பே பெரிய பஞ்சாயத்து ஏற்பட்டது. இதுவரைக்கும் இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் திடீரென்று விலகி இருந்தார்.

vijay tv manimegalai

அவரைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை தயாரித்து வந்த தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் என்று அடுத்தடுத்து எல்லோரும் விலகி இருந்தனர். அது போல இந்த நிகழ்ச்சியில் பல கோமாளிகளும் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டனர். அதற்கு பிறகு புது தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர்களுடன் குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்டது. ஆனால் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் மணிமேகலை தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்து இருந்தார்.

அதற்கு பிறகு அந்த நிகழ்ச்சியில் என்ன பிரச்சனை என்பது பற்றியும் வீடியோவாகவும் தன்னுடைய youtube சேனலில் வெளியிட்டிருந்தார். அப்போது இந்த நிகழ்ச்சியில் குக்காக வந்த ஒரு தொகுப்பாளர் என்னுடைய வேலையை பார்க்க விடாமல் தடுக்கிறார். அவர்தான் எல்லா இடத்திலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்று டாமினேட் செய்கிறார். நான் விஜய் டிவியில் பெரிய ஆள் என்பது போல அவர் ஒரு மாயையை கிரியேட் செய்து அவருக்கு கீழே எல்லோரும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

அவரைப் பற்றி சேனல் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி குழுவினரிடமும் சொல்லிவிட்டேன். ஆனால் அவர்கள் எந்த ஆக்ஷன் எடுக்கவில்லை. அந்த தொகுப்பாளரிடம் நான் நிகழ்ச்சியில் மன்னிப்பு கேட்க வேண்டும், அப்படி கேட்டால் இன்னும் சில நிகழ்ச்சிகள் இதே சேனலில் உங்களுக்கு கிடைக்கும் என்று சொன்னார்கள். ஆனால் எனக்கு சுய கௌரவம் முக்கியம் நான் எந்த தப்பும் செய்யாமல் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை

அதனால் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகி விட்டேன் என்று நீண்ட விளக்கம் கொடுத்திருந்தார். இது நேற்றிலிருந்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது குறித்து பாடகி சுசித்ராவும் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியதைப் பற்றிதான் இந்த வீடியோவில் பேசப்போகிறேன். இந்த நிகழ்ச்சியை பற்றி எதற்காக பேசுகிறீர்கள் என்று சிலர் கேட்கலாம். ஆனால் நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பற்றி பேசவில்லை. மணிமேகலைக்கு நடந்த அநியாயங்கள் பற்றி தான் பேசப்போகிறேன்.

மணிமேகலை தைரியமாக முடிவெடுத்து இருக்கிறார். தனக்கு எதிராக ஒரு பெரிய தொலைக்காட்சியில் ஒரு பெண் அதாவது பிரியங்கா செய்யும் செயல்களை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். இதுபோல தான் எல்லோரும் தைரியமாக இருக்க வேண்டும். பிரியங்கா யார் என்று எனக்கு நல்லாவே தெரியும். பிரியங்கா என்னுடைய தம்பி மகனை தான் கல்யாணம் பண்ணி இருந்தார். அந்தப் பையனுடைய வாழ்க்கையே பிரியங்காவால் சீரழிஞ்சு போச்சு.

ஒரே துறையில் இருப்பதால் காதலித்து கல்யாணம் பண்ணுனாங்க ஆனால் பிரியங்கா எப்படிப்பட்டவர் என்று எங்களுக்கு தான் தெரியும். பொதுவா பிரியங்கா போன்ற சிலர் யாரையாவது எதிர்க்க வேண்டும் என்றால் அவர்களை அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, நண்பன் என்று உறவுமுறை சொல்லி தன்னுடைய அடிமையாக மாற்றி விடுவார்கள். யாரா இருந்தாலும் அவர்கள் தன்னைவிடவும் மேலே போய்விடக்கூடாது என்று ஒரு கேவலமான மனநிலை கொண்டவர்கள்.

பிரியங்கா அதனால் தான் நிகழ்ச்சியில் எல்லோரையும் என்னுடைய தம்பி, சித்தப்பா பெரியப்பா என்று உறவுமுறை கொண்டாடி கொண்டிருக்கிறார். நீங்கள் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்ப்பவராக இருந்தால் கண்டிப்பாக பிரியங்காவின் கேரக்டர் தெரிந்து இருக்கும் என்று அந்த வீடியோவில் சுசித்ரா பேசியிருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.

சுசித்ரா பிரியங்கா பற்றி பேசியது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது தவறு என்று நினைக்கிறீர்களா? உங்க கருத்தை கமெண்டில் தெரிவியுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+