செம "மூடா” இருக்கிற மாதிரி பாடுங்க.. ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் இயக்குனர் சொன்ன வார்த்தை! பாடகி ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக பல வருடங்களாக பயணித்து வருபவர் சுனிதா சாரதி. பல ஹிட் பாடல்களை கொடுத்திருக்கும் இவர் தன்னுடைய குரல் வளம் மற்றும் இசை வடிவங்களில் பாடும் திறமைக்காகவும் ரசிகர்களிடம் தனி இடத்தை பிடித்திருக்கிறார். இந்த நிலையில் ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் பெண் பாடகர்கள் சந்திக்கும் சங்கடங்கள் குறித்து அவர் வெளிப்படையாக பேசியிருப்பது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பாடகி சுனிதா சாரதி பாடல்கள்

2002 ஆம் ஆண்டு வெளியான ஏய் நீ ரொம்ப அழகா இருக்க திரைப்படத்தில் இடம் பெற்ற இனி நானும் நான் இல்லை பாடலின் மூலம் சுனிதா சாரதி பின்னணி பாடகியதாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு தொடர்ந்து பல முக்கிய வாய்ப்புகள் கிடைத்தன குறிப்பாக காக்க காக்க படத்தில் இடம்பெற்ற தூது வருமா, ஆயுதம் எழுத்து படத்தில் இடம்பெற்ற கண்ணிலே சில்மிஷம், ஐ படத்தில் இடம் பிடித்த என்னோடு நீ இருந்தால் உள்ளிட்ட பல பாடல்கள் இவர் பாடியதுதான்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பழமொழிகளிலும் சுனிதா பாடி இருக்கிறார். குறிப்பாக மெலடி காதல் மேற்கு இந்திய இசைப்பானி என பாடலின் தன்மைக்கு ஏற்ப குரலை மாற்றிப் பாடும் திறமை இவருடைய முக்கிய பலமாக இருக்கிறது. இந்த நிலையில் அவர் சமீபத்தில் கொடுத்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Sunitha Sarathy Singer Tamil Cinema

ரெக்கார்டிங் ரூமில் நடந்த சம்பவம்

அதில் அவர் தனது ஆரம்பகால ரெகார்டிங் அனுபவம் பற்றி பேசும்போது, ஒரு குறிப்பிட்ட மிகவும் கவர்ச்சியான பாடலை நான் பாடுவதற்காக போனபோது அந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே இருந்தார்கள். ஒரு பெண் கூட இல்லை. அப்போது அந்த படத்தின் இயக்குனர் என்னிடம் வந்து செம மூடா இருக்கிற மாதிரி பாடுங்க என்று கேட்டுக் கொண்டார். இசையமைப்பாளர் கூட அதை சொல்லவில்லை. இயக்குனர் தான் அப்படி பாட சொன்னார். உடனே எனக்கு கோபம் வந்துவிட்டது.

பாடகியின் ஆதங்கம்

அதனால் நான் முகத்துக்கு நேராகவே எனக்கு எல்லாம் மூடா பாட வராது என்று முகத்தில் அடித்தது போல சொல்லிவிட்டேன். உடனே அவர் அதிர்ச்சியாகி விட்டார் என்ன மேடம் இப்படி சொல்லிட்டீங்க என்று பதறிப் போய் என்னிடம் கேட்டார். ஆனால் அந்த பாடல் என்ன பாடல் என்பதை பற்றி அந்த பேட்டியில் சுனிதா பேசவில்லை. இதுபோல திடீரென வந்து ஸ்டுடியோவில் மூடாக பாடுங்கள் என்று சொல்வதெல்லாம் கேட்பதற்கு அருவருப்பாக இருக்கும். எந்த மூடும் வராது சங்கடமாகத்தான் இருக்கும்.

Sunitha Sarathy Singer Tamil Cinema

பெண் பாடகியின் மனநிலை

அப்படி அவர்கள் அருவருக்கத்தக்க வகையில் பேசும்போது டென்ஷனாகி விடும். ஒரு பாடலை பதிவு செய்யும்போது பாடகரிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட எமோஷனல் தேவைப்படலாம் ஆனால் அதை எப்படி சொல்ல வேண்டும் என்பதில் கூட ப்ரொபஷனல் பாண்டாரி இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கருத்து. குறிப்பாக பெண் மட்டுமே இருக்கும் இடத்தில் அங்குள்ள அனைவரும் ஆணாக இருக்கும் சூழலில் இது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படும் போது ஏற்படும் மனநிலையை சுனிதா வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+