கணவரை இழந்தும் திருமாங்கல்யம், பூ, பொட்டுடன் நான் இருப்பது ஏன்? பாடகி உஷா உதுப் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கணவரை இழந்தும் மாங்கல்யத்தோடு இருப்பது ஏன் என்பது குறித்து பாடகி உஷா உதுப் விவரித்துள்ளார். தனது குரல் ஆண்களின் குரல் போல் உள்ளது என கூறி தன்னை இசை ஆசிரியர்கள் ஒதுக்கிவிட்டார்கள் என்றும் அவர் உருக்கமாக தெரிவித்திருந்தார்.

நைட் கிளப் பாடகியாக வந்தவர் உஷா உதுப். இவர் கடந்த 50 ஆண்டுகளில் 17 இந்திய மொழிகள், 8 சர்வதேச மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி சாதனைப் படைத்துள்ளார்.

television usha uthup

இவரது குரல் இசைக்கேற்ப மென்மையாக இல்லை என்றும் மியூசிக்கிற்கு செட்டாகாது என்றும் கூறிய இசை ஆசிரியர், உஷாவை இசை வகுப்பிலிருந்து வெளியேற்றினார். ஆனாலும் உஷா அதற்காக துவண்டு போகவில்லை. இசை மீது அவருக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக என்ன செய்யலாம் என யோசித்தார்.

மேற்கத்திய இசை

அப்போதுதான் நமது குரலுக்கு மேற்கத்திய இசை சரியாக இருக்கும் என கருதி அதை தேர்வு செய்தார். சினிமா பாடல்களையும் மேற்கத்திய இசையில் பாடினார். மேல்நாட்டு மருமகள் படத்தில் லவ் இஸ் ஏ பியூட்டிபுல் என்ற பாடலையும் அஞ்சலி படத்தில் வேகம் வேகம் என்ற பாடலையும் இவர் பாடியுள்ளார்.

17 இந்திய மொழிகள்

இந்த நிலையில் இவர் கலாட்டா தமிழ் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் 17 இந்திய மொழிகளில் பாடுவேன். அந்த பாடல்களின் அர்த்தத்தை தெரிந்து கொண்டுதான் பாடுவேன். எனக்கு 67 வயதாகிறது. நான் 56 ஆண்டுகளாக பாடி வருகிறேன். எனது பயணத்திற்கு எனது கணவர் ஜானி உருதுணையாக இருந்தார். எனது உடைகள், மேக்கப்பை கணவர் எப்போதும் பாராட்டியதே இல்லை.

பத்ம விருது

பத்ம விருதுக்கு நான் ஆஃப் ஒயிட்டில் ஒரு சேலை கட்டியதை பாராட்டினார். இத்தனை ஆண்டுகள் திருமண வாழ்வில் அவர் பாராட்டியதை நான் மறக்கவே மாட்டேன். நான் சைவம், அவர் அசைவம். ஆனால் என் கணவர் மீதுள்ள காதலால் மீன் உள்ளிட்ட அசைவங்களை சமைப்பேன்.

திருமாங்கல்யம்

எனது திருமாங்கல்யத்தை நானே வாங்கி போட்டுக் கொண்டேன். அதில் இந்துவின் அடையாளமும் கிறிஸ்துவ மதத்தின் அடையாளமும் இருக்கும். ஏனென்றால் என் கணவர் கிறிஸ்துவர். என் கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

பூ பொட்டு

இந்தியாவில் கணவரை இழந்துவிட்டால் பூ, பொட்டு, மாங்கல்யம் எல்லாத்தையும் துறந்துவிடுவார்கள். அதை நீங்கள் நம்புகிறீர்கள் என்றால் அதை நீங்கள் பின்பற்றிக் கொள்ளலாம். ஆனால் நான் அதை செய்தேன் என்றால் வெளிவேஷம் போடுகிறேன் என்று அர்த்தம்.

வலிமையாக்குகிறது

ஏனென்றால் இவை அனைத்தும் என்னை வலிமையாக வைத்துக் கொள்கிறது. என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது. எனக்கு தெரியும் என் கணவர் நான் பொட்டு, மாங்கல்யம் போடவில்லை என்றால் ஏன் முட்டாள் மாதிரி இதெல்லாம் செய்கிறாய், உன் வாழ்க்கையை எப்போதும் போல் வாழு என சொல்வார். இது எனக்கு அவர் இழப்பிற்கு தெரபியாக இருக்கிறது.

நம்பிக்கை இருந்தால்

உங்களுக்கு பூ, பொட்டு மீது நம்பிக்கை இருந்தால் வைத்துக் கொள்ளுங்கள். அதற்காக எல்லாரும் இதை செய்ய வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. நான் கணவனை இழந்துவிட்டு பாட செல்லும் போது பலர் நினைக்கலாம். "கணவரை இழந்துவிட்டு ஜாலியாக பாடுகிறாரே" என! ஆனால் உங்களை சிரிக்க வைக்க நான் எத்தனை வலியுடன் ஜாலியாக பாடுகிறேன் என்பது எனக்குத்தான் தெரியும். அது மிகவும் எளிதான காரியம் இல்லை.

அழிந்துவிடும்

நான் நெற்றியில் வைத்திருக்கும் பொட்டு அக்ரிலிக் பெயின்ட். இதை கையால் அழித்தாலே போய்விடும். இது ஒரு டிரெண்டானது. இவ்வாறு அவர் உருக்கமாக தெரிவித்தார். கணவர் குறித்து பேசும் போது உஷாவின் குரல் தழுதழுத்தது. கண்கள் குளமாகின.

கணவன் இழப்பு

உஷா உதுப் சொல்வது போல் சிறு வயதில் இருந்தே பொட்டு, பூ வைத்துக் கொள்ளும் போது கணவர் இறந்த பிறகு அதை ஏன் நாம் இழக்க வேண்டும்? பொட்டு, பூ வைத்தால் நிச்சயம் ஒவ்வொரு கணவனை இழந்த பெண்களுக்கும் ஒரு தன்னம்பிக்கை, வலிமை கிடைக்கும். இதை எல்லாரும் பின்பற்ற வேண்டும் என்றில்லை. விருப்பப்பட்டவர்கள் பின்பற்றிக் கொள்ளலாம் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+