சிறகடிக்க ஆசை மீனாவா இது? புது பிசினஸ் தொடங்கியிருக்கிறாரா..? அப்போ இனி பூக்கடை இல்லையா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிகை கோமதி பிரியா மீனா கேரக்டரில் நடித்து வருகிறார். அவர் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சில புகைப்படங்களை பகிர்ந்திருக்கும் நிலையில் அது இணையத்தில் அதிகமான கருத்துக்களையும் லைக்குகளையும் பெற்று வருகிறது அது பற்றி பார்க்கலாம்.
இதுவரைக்கும் சன் டிவி சீரியல்கள் தான் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும். முதல் முறையாக சன் டிவி சீரியல்களை விஜய் டிவி சீரியல் முறியடித்து இருக்கிறது. அதாவது இது வரலாற்றிலேயே முதல் முறை என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு சன் டிவி சீரியலை முறியடித்து விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் முதல் இடத்திற்கு வந்திருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களுக்கும் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு கிடைக்க தொடங்கி இருக்கிறது.

அதிலும் இந்த சீரியல் கதாநாயகி மீனாவிற்கு சொல்லவே வேண்டாம். ஒரு பக்கம் இவரை சிலர் திட்டிக் கொண்டிருக்கின்றனர். மீனாவை மாமியார் விஜயா எவ்வளவுதான் கேவலமாக பேசிக்கொண்டே இருந்தாலும் இவர் மீண்டும் ரோஷம் கெட்டு போய் கிச்சன் வேலை செய்து கொண்டே இருக்கிறாரே என்பது பலரது கேள்வியாக இருக்கிறது.
ஆனாலும் முத்து மற்றும் மீனாவின் காதல் அவர்களுடைய சண்டை, புரிதல் எல்லாமே மக்கள் மத்தியில் கவரப்பட்டு இருக்கிறது. இந்த மீனா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகையின் பெயர் கோமதி பிரியா இவருடைய சொந்த ஊர் மதுரை தான். மதுரையில் படிப்பு முடித்து சென்னையில் வேலைக்கு சேர்ந்த நேரத்தில் தான் கோமதி பிரியாவிற்கு நடிக்க வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது.
சில ஆடிஷனில் கலந்து கொண்ட போது இந்த பொண்ணு முகத்தை பார்த்தாலே ரொம்ப பாவமா இருக்கு இந்த பொண்ணை கதாநாயகியாக நடிக்க வச்சா சரியா வருமா? என்று பலர் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் ஒரு வழியாக இவருக்கு சின்ன சின்னதாக சீரியல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனாலும் சிறகடிக்க ஆசை சீரியலில் தான் இவருக்கு புகழின் உச்சத்திற்கு கொண்டு போய் இருக்கிறது.
அதனாலேயே சிறகடிக்க ஆசை சீரியலின் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் இந்த சீரியலின் டப்பிங் சீரியலில் கதாநாயகியாக கோமதி பிரியா நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்திலும் கோமதி பிரியா செம ஆக்டிவாக இருக்கிறார். தினமும் ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் போட்டோ ஷீட் புகைப்படங்களை குவித்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் இன்று தன்னுடைய instagram பக்கத்தில் கோமதி பிரியா வெளியிட்ட புகைப்படங்கள் தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் கோமதி பிரியா கோவில் ஒன்றில் புகைப்படம் எடுப்பது போன்று போஸ் கொடுத்திருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் மீனா புது பிசினஸ் தொடங்கி விட்டாரா? போட்டோ எடுக்கிற பிசினஸை தொடங்கி விட்டாரா? இனி லாபம் கொட்ட போகிறதா...?
ஏற்கனவே வீட்டில் எல்லாரிடமும் மாடியில் நாங்களே புது வீடு கட்ட போறோம் என்று சபதம் போட்டிருக்கும் மீனா இந்த பிசினஸ் செய்து தான் வீடு கட்ட போகிறாரா? என்று கமெண்ட்களை குவிக்கிறார்கள். அதுபோல அப்போ இனி பூக்காரி என்று விஜயா உங்களை திட்ட மாட்டாரா? என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இதுவெல்லாம் ரசிகர்கள் எழுப்பும் ஜாலியான கேள்விகளாக இருந்தாலும், அடுத்து மீனா என்ன போட்டோஸ் வெளியிடப் போகிறார் என்று ரசிகர்கள் இப்போது கேள்விகளையும் எழுப்புகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications