சிறகடிக்க ஆசை: அடுத்தது ரோகிணியின் அப்பா ரகசியம் உடைய போகுதா? முத்து செய்த செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025, ஜனவரி மூன்றாம் தேதி மற்றும் நான்காம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்து செய்த செயலால் ரோகிணிக்கு விஜயா பெரிய செக் வைக்கிறார். அதனால் இனி ரோகிணி அப்பா பற்றிய உண்மை உடைபடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி எப்போதுதான் குடும்பத்திடம் மாட்டுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் பலருக்கும் இருந்த நிலையில் இப்போது அது அடுத்தடுத்து நடக்க தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே மனோஜிடமிருந்து ஜீவா ஏமாற்றிக்கொண்டு போன 27 லட்சம் ரூபாயை வட்டியும் முதலுமாக முப்பது லட்சம் ஆக ரோகிணியும் மனோஜும் மிரட்டி வாங்கி இருந்தார்கள்.

ஆனால் அதை குடும்பத்திடம் சொல்லாமல் அந்த பணத்தை வைத்து ஷோரும் திறந்து விட்டனர். அதோடு அது ரோகிணியின் அப்பா கொடுத்த பணம் என்று மனோஜ் ஓவராக சீன் போட்டு இருந்தார். ஆனால் முத்து இந்த உண்மைகளை கண்டுபிடித்து விட்டார். இந்த நிலையில் ரோகிணி பற்றிய அடுத்த உண்மை எப்போது தெரியவரும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஏற்கனவே ஜீவாவிடம் இருந்து வாங்கிய பண விஷயத்தை வீட்டில் சொல்லவில்லை என்று விஜயா ரோகிணியை அடித்திருக்கிறார். அதோடு தன்னுடைய மொத்த வெறுப்பையும் காட்டி இருக்கிறார். இந்த நிலையில் ரோகிணிக்கு அடுத்த பிரச்சனை வந்திருக்கிறது. அதாவது ஜீவாவிடம் இருந்து வாங்கிய பணத்தில் தான் ஷோரும் திறந்திருக்கிறார் என்ற உண்மை தெரிந்ததும் முத்து அந்த பணம் அப்பாவின் சொந்த பணம் அதனால் அப்பா பெயரில் தான் அந்த ஷோரூம் இருக்க வேண்டும் என்று தீர்ப்பு சொல்கிறார்.
அதற்கு விஜயாவும் மனோஜும் உடன்படாமல் இருக்கின்றனர். அண்ணாமலை கூட வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால் நீ இப்படியே விட்டால் அந்த ஷோரூமை கூட அவன் சரியா கவனிக்காமல் போய்விடக்கூடும். ஏற்கனவே 30 லட்சத்தை வீடு வாங்கிறேன்னு சொல்லி ஏமாந்து இருக்கிறார். இப்போ இதுவும் போயிடக்கூடாது என்று சொன்னதும் வேறு வழியில்லாமல் அண்ணாமலை அதற்கு சரி என்று சொல்கிறார்.
இதனால் நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் அண்ணாமலை ஷோரூம்க்கு செல்ல, அவருக்கு மாலை போட்டு இனி இவர்தான் இந்த ஷோரும் உரிமையாளர் என்று அங்கு வேலை செய்பவர்களிடம் அறிமுகப்படுத்துகிறார். முத்து செய்யும் அலப்பறையை பார்த்து கோபமான விஜயா ரோகிணியிடம் வந்து நீ உங்க மாமாவுக்கு போன் போட்டு உங்க அப்பாவிடம் நிலைமையை சொல்லு.
இப்போ இருக்கிற பிரச்சனைக்கு காரணம் அந்த 27 லட்சம் ரூபாய் தானே அந்த பணத்தை முத்து மூஞ்சில தூக்கி வீசுனா எல்லாம் பழையபடி மாறிடும். அதனால் உங்க அப்பா கிட்ட சொல்லி 25 லட்சம் ரூபாய் பணத்தை வாங்க பாரு என்று மிரட்டி விட்டு போகிறார். இதனால் ரோகிணி இனி என்ன செய்யப் போகிறார் என்ற பெரிய எதிர்பார்ப்பு வருகிறது.
ஏற்கனவே ரோகிணி சிட்டியிடம் இரண்டு முறை கடன் வாங்கி இருக்கிறார் என்று மீனாவிடம் சத்யா போட்டு கொடுத்து இருக்கிறார். அந்த விஷயத்தை மீனாவும் முத்துவிடம் சொல்லி இருக்கிறார். இதனால் ரோகிணி மீது பெரிய சந்தேகமும் முத்துவிற்கு இருக்கிறது.
அதுபோல சிட்டி ரோகிணியின் பழைய பிஏவுடன் சேர்ந்து சில மாதங்களுக்கு முன்பு ரோகிணியை மிரட்டி பணம் வாங்கி இருந்தார். இனி அவரிடமும் கடன் கேட்க முடியாது. இதனால் ரோகிணி இனி பெரிய பிரச்சனையில் சிக்கி இருக்கிறார். இனி என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications