முத்துவுக்கு போனில் வந்த மிரட்டல்.. சாம்பலாகும் 500 மாலைகள்? கடைசியில் காப்பாற்றியது யாரு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் 13ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் விஜயாவின் எதிர்ப்பையும் மீறி மீனா 500 மாலைகளை கட்டி முடித்திருக்கிறார். ஆனால் சிட்டி மாலையை கொண்டுட்டு போன வண்டியை ஆளை வைத்து கடத்தி விடுகிறார்.

அதே நேரத்தில் முத்துவிடம் அரசியல்வாதி தனக்கு அரை மணி நேரத்திற்குள் மாலை வந்தாக வேண்டும் என்று மிரட்டி இருக்கிறார். இப்படியான நிலையில் கட்டிய மாலைகள் நேரத்திற்கு டெலிவரி செய்யப்படுமா? இல்லையா? என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Siragadikka aasai march 13th promo and episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பார்வதி விஜயாவிடம் உனக்கு நல்ல மருமகள்களும், மகன்களும் கிடைத்திருக்காங்க. அதனால நீ எல்லாரையும் ஒன்றாக பார்க்கணும். எனக்கு என்னுடைய புருஷன் பக்கத்தில் இருக்கும் போது அவருடைய அருமை தெரியல. இப்போ நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கும்போது அவர் என்னை பார்த்துக் கொண்டது ஞாபகம் வருகிறது.

அதனால உனக்கு கிடைச்சிருக்கும் குடும்பத்தை நீ நல்லா பார்த்துக்க என்று அட்வைஸ் செய்ய அதற்கு விஜயா உனக்கு இன்னொரு குல்பி வேணும்னா வாங்கி சாப்பிடு அதுக்காக இப்படி ஜால்ரா அடிச்சிட்டு இருக்காத என்று கோபப்படுகிறார். பிறகு மாலை கட்டிக் கொண்டிருந்த எல்லோரும் தூங்கி விட மீனா மட்டும் தனியாக மாலை கட்டிக் கொண்டிருக்கிறார்.

Siragadikka aasai march 13th promo and episode full update

அப்போது தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும் முத்து இன்னும் கட்டி முடிக்கலையா என்று கேட்க, அதற்கு மீனா இன்னும் கொஞ்சம் தான் இருக்கு என்று சொன்னதும் மீனாவுக்காக முத்து டீ போட்டுக் கொண்டு வந்து கொடுக்கிறார். அதோடு டீ எப்படி இருக்கிறது என்று முத்து கேட்க நல்லா இருக்கு என்று மீனா சொல்ல, அதற்கு முத்து எனக்கு இப்போதான் ஞாபகம் வருகிறது நான் சர்க்கரையே போடலையே என்று சொல்ல, அதற்கு மீனா நீங்க சர்க்கரை போடலனாலும் அதுல நீங்க காட்டுற அக்கறை இனிப்பா இருக்கு என்று டயலாக் கொடுக்க அதை கேட்டு முத்து கலாய்க்கிறார்.

Siragadikka aasai march 13th promo and episode full update

பிறகு அடுத்த நாள் காலையில் மாலை எல்லாம் கட்டி முடித்து வண்டியை வரச் சொல்லி எல்லாவற்றையும் ஏற்றி விட டிரைவர் தன்னுடைய காதலியிடம் போனில் பேசிக் கொண்டே இருக்கிறார். அப்போது முத்து வண்டியை எங்கவும் நிறுத்தாத சீக்கிரமா போய் மண்டபத்தில் சேர்த்துரு என்று சொல்ல, அதற்கு நான் பார்த்துக்கிறேன் என்று கிளம்பி போன டிரைவரிடம் சிட்டியின் அடியாள்கள் பின்னாடியே வந்து ஒரு இடத்தில் உங்க டயர் பெஞ்சரா இருக்கு என்று சொல்லி டிரைவரின் கவனத்தை திசை திருப்புகின்றனர்.

பிறகு டிரைவர் கீழே இறங்கிய சமயம் பார்த்து வண்டியை கடத்தி செல்கின்றனர். அதோடு அந்த ரவுடிகள் சிட்டிக்கு தகவல் சொல்ல அவர் சூப்பர்டா.. எப்படியும் இந்த உண்மை தெரிஞ்சதும் கண்டிப்பா முத்து உங்களை தேடி வந்துருவான். அதுக்குள்ள ஊரு எல்லையில் விட்டு, மாலைகளை குப்பையில் கொட்டி எரிச்சிடுங்க என்று சொல்கிறார். மறுபக்கத்தில் அரசியல் தலைவர் எல்லா ஏற்பாடுகளும் ரெடியா என்று கேட்க மாலை மட்டும் இன்னும் வரவில்லை என்று சொல்ல முத்துவின் நண்பனை கூப்பிட்டு ஏன் இன்னும் மாலை வரல என்று விசாரிக்கிறார்.

அந்த நேரத்தில் முத்துவுக்கு போன் பண்ணி டிரைவர் வண்டியை தூக்கிட்டாங்க என்று சொல்ல முத்துவும் மீனாவும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு இருவரும் டிரைவர் இருக்கும் இடத்திற்கு வந்து வண்டியை தேடி அலைகின்றனர். அப்போது முத்துக்கு போன் பண்ணும் தலைவர் என்னென்னு விசாரிக்க அப்போது முத்து வண்டியை தூக்கிட்டாங்க என்று சொல்ல, அதற்கு கோபமான தலைவர் நீ என்ன தங்கத்திலா மாலை கட்டி இருக்க?

Siragadikka aasai march 13th promo and episode full update

நீ எதிர்க்கட்சி இடம் எவ்வளவு பணம் வாங்கி என்னை கடைசி நேரத்தில் ஏமாத்துன என்று கோபப்படுகிறார். பிறகு இன்னும் அரை மணி நேரம் உனக்கு டைம் தாரேன் அதற்குள் மாலை சரியா வந்து சேரனும் இல்லனா நடக்குதே வேற என்று மிரட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. அதே நேரத்தில் நாளைக்காக என்று வெளியான வீடியோவில் முத்து மாலை எடுத்துட்டு போன வண்டியை பாலோ பண்ணி போக ஒரு கட்டத்தில் அந்த டிரைவரை பிடித்து அடித்து விடுகிறார்.

Siragadikka aasai march 13th promo and episode full update

அப்போது அங்கு வரும் ஒரு சிலர் முத்துவை ரவுண்டு கட்டுகின்றனர். இப்படியாக அதில் காட்சிகள் இருக்கிறது. அதே நேரத்தில் முத்துவின் நண்பர்கள் அங்கு வந்து முத்துவுக்கு சப்போர்ட் பண்ண இருக்கிறார்கள் என்று அதனால் சரியான நேரத்தில் முத்து மாலைகளை ஒப்படைத்து விடுவார் என்று சில புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+