மீனா கார் வாங்கியதை கேவலமாக பேசிய மனோஜ்.. முத்து செய்த தரமான செயல்.. மீண்டும் சிக்கிய ரோகிணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் 18 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ரோகினி தன்னுடைய பியூட்டி பார்லர் பெயரை மாற்றியதை தெரிந்து கொண்ட விஜயா கடுமையாக திட்டுகிறார் அதை பார்த்து ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார்.

அதே நேரத்தில் மீனா முத்துவுக்காக சர்ப்ரைஸாக கார் வாங்கிக் கொடுக்க முத்துவும் மீனாவும் சந்தோஷமாக இருக்கின்றனர். ஆனால் மனோஜ் முத்துவின் காரை பார்த்து இது செகனண்ட் கார் தானே என்று அவமானப்படுத்துகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Siragadikka aasai march 18th promo and episode full update

இந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் விஜயா ரோகிணியிடம் மிரட்டி கொண்டிருக்கிறார். அப்போது இனிமே எனக்கு தெரியாம ஏதாவது பண்ணுனா அவ்வளவுதான்.. உன் அப்பன் பெரிய ஆளா இருக்கலாம் ஆனால் இங்க நான் தான்... உனக்காக நான் தான் வீட்டு பத்திரத்தை அடமானம் வச்சு பணம் வாங்கி கொடுத்தேன். அதனால வட்டி கட்ட முடியாம மாட்டி நான் எவ்வளவு அவமானப்பட்டேன் என்று சொல்ல,

அதற்கு ரோகிணி அதுதான் நான் அப்பாட்ட சொல்லி உங்களுக்கு பணம் வாங்கி கொடுத்துட்டேனே ஆன்ட்டி என்று சொல்ல, பணம் கொடுத்துட்டா போதுமா? உங்க அப்பா இதுவரைக்கும் ஒரு நாள் உன்னை வந்து பார்க்க வந்திருக்காரா? இந்த இடத்துல இன்னொரு மாமியார இருந்தா நடக்கிறதே வேற... நானாக உன்னை தேடிக் கொண்டு வந்தேன். உன்னை என் மகனும் ரொம்ப விரும்புறான் அந்த ஒரே காரணத்துக்காக தான் உனக்கு ரொம்ப இடம் தரேன்.

அதுக்குன்னு என்ன லேசா நீ நினைச்சுக்காத என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார். அடுத்த கட்டத்தில் முத்து கார் செட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது செல்வம் செகனண்ட் கார் வாங்க முத்துவை கூட்டிட்டு போகிறார். அங்கு போன முத்து அங்கிருந்த காரை பார்த்ததும் இந்த கார் நல்லா இருக்கு இதைத்தான் உன் பிரென்ட் எடுக்க போறானா என்று கேட்க அதற்கு செல்வம் நீ அந்த காரை ஓட்டி பார்த்து சொல்லு என்று சொல்ல அதற்கு முத்துவும் காரை ஓட்டி பார்த்துவிட்டு சூப்பரா இருக்கு என்று சொல்கிறார்.

இதை எல்லாம் மீனா மறைந்து இருந்து பார்த்து சந்தோஷப்படுகிறார். அடுத்த நாள் காலையில் முத்துவை மீனா கோவிலுக்கு கூட்டிட்டு போக அங்கு கார் வாங்கி வைத்திருப்பதை சப்ரைஸ் ஆக கூறுகிறார். முத்துவும் சந்தோஷப்படுகிறார். அது மட்டும் அல்லாமல் நீங்க ஆட்டோவில் போறது எனக்கு அவ்வளவா புடிக்கல கஷ்டமா இருக்கு, இனிமே நீங்க கார்ல தான் போகணும் இந்த கார் உங்களுடைய கார் நீங்கதான் கார் ஓட ஓனர் என்று மீனா சொல்ல முத்துவும் சந்தோஷப்பட்டு காரை எடுக்கிறார்.

இருவரும் ரொமான்ஸ் செய்கின்றனர் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடையும் நிலையில் நாளைக்கு என வெளியான வீடியோவில் முத்துவின் காரை பார்த்ததும் மனோஜ் இது செகனண்ட் கார் சும்மா ரெண்டு மூணு லட்சம் தான் இருக்கும் என்று நக்கலாக பேச அதற்கு கோபமான முத்து ஆமா இது செகனண்ட் கார்தான் இது என் பொண்டாட்டி எனக்காக வாங்கி கொடுத்தது.

என் பொண்டாட்டி மலேசியாவில் இருந்தா பத்து லட்சம் இல்ல 10 கோடிக்கு கார் வாங்கி கொடுத்து இருப்பா என்று நக்கலாக பேசுகிறார். உடனே விஜயா ரோகிணியை பார்க்க ரோகிணி அடப்பாவிங்களா யாரு பால் போட்டாலும் அந்த பால் எனக்கே திருப்பி அடிக்கிறாங்களே என்று பரிதாபமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+