முத்துவை மாட்டிவிட்ட ரோகிணிக்கு மீனா கேட்ட கேள்வி.. விஜயாவுக்கு இந்த அவமானம் தேவை தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் 4ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் முத்து காரை விற்று விட்டு ஆட்டோ ஓட்டுவதை ரோகினி விஜயாவிடம் சொல்லிக் கொடுக்க அவர் அண்ணாமலை இடம் சொல்லி முத்துவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர்.

அதே நேரத்தில் மீனா முத்துவிற்காக விஜயா மற்றும் ரோகினிக்கு பதிலடி கொடுத்து அவமானப்படுத்துகிறார். ஆனால் கடைசியில் மீனாவுக்கும் முத்துவுக்கும் சண்டை வந்துவிடுகிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Siragadikka aasai march 4th Episode and promo full update

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்து ஆட்டோ ஓட்டுவதை ரோகினி விஜயாவிடம் போட்டுக் கொடுக்க, அதற்கு விஜயா என் வீட்டு பத்திரத்தை வைத்து தானே கார் வாங்கி கொடுத்தாரு. அப்போ அந்த கார் எனக்கு தானே சொந்தம் என்னிடம் சொல்லாமல் எப்படி அவன் காரை விற்கலாம். இதை நான் கேட்டால் சரியா வராது கேட்க வேண்டியவர் கேட்கட்டும் என்று சொல்லி அந்த விஷயத்தை அண்ணாமலையிடம் விஜயா போட்டுக் கொடுக்க அதற்கு அவர் யார் உனக்கு சொன்னது என்று கேட்க பார்வதி சொன்னதாக விஜயா மழுப்புகிறார்.

பிறகு அண்ணாமலை முத்து வந்ததும் கேட்கிறேன் என்று சொல்லி விடுகிறார். அந்த நேரத்தில் மீனா பூக்கடையில் இருக்கும்போது அங்கு ஒரு பாட்டியை முத்து ஆட்டோவில் கூட்டிக்கொண்டு வந்து விடுகிறார். அதை பார்த்ததும் மீனா என்ன இவர் கார் ஓட்டாமல் ஆட்டோ ஓட்டுறாரு என்று கன்பியூஸ் ஆகிறார். பிறகு மீனா வீட்டிற்கு வரும்போது விஜயா மீனாவிடம் உன் புருஷன் என்ன பண்ணுனாலும் உன்கிட்ட சொல்லுவானே கார் என்ன ஆச்சு என்று கேட்கிறார்.

அதற்கு மீனா எனக்கு தெரியாது என்று சொல்கிறார். அதற்கு அண்ணாமலை முத்து ஆட்டோ ஓட்டுற விஷயம் உனக்கு தெரியுமா? என்று கேட்க, அதற்கு மீனா இல்ல மாமா இப்பதான் தெரியும். இப்போதான் அவர் ஆட்டோ ஓட்டுவதை பார்த்தேன் என்று சொல்கிறார். அதற்கு விஜயா கார் ஓட்டிட்டு இருந்தவன் இப்ப தெருத்தெருவா ஆட்டோ ஓட்டுறான் கார் என்ன ஆச்சு என்று கேட்க, அதற்கு மீனா காரையும் தெருவுல தான் ஓட்டுவாங்க கடலில் ஓட்ட முடியாது என்று கவுண்டர் கொடுத்து அவமானப்படுத்துகிறார்.

Siragadikka aasai march 4th Episode and promo full update

பிறகு முத்து வீட்டிற்கு வந்ததும் விஜயா முத்துவிடம் கேள்வி கேட்க அதற்கு ரோகிணி அன்னைக்கி மனோஜ் பொய் சொன்னாருன்னு இவரு டிவில எல்லாம் போட்டு காட்டினாரு. இன்னைக்கு இவர் எதுக்கு இந்த விஷயத்தை வீட்ல மறைச்சாரு? என்று கேள்வி கேட்கிறார். அதற்கு முத்து ஆமா நான் ஆட்டோ தான் ஓட்டுறேன். பார்க்குல படுத்து பொண்டாட்டி கிட்ட ஏமாத்தல என்று முத்து சொல்கிறார்.

Siragadikka aasai march 4th Episode and promo full update

அதற்கு விஜயா கார் வாங்குனது என்னுடைய பணம் அதனால நீ காரை வித்த பணத்தை என்கிட்ட தானே கொடுக்கணும் என்று கேட்க அதற்கு முத்து கொடுத்திடலாம். ஆனால் இவன் 27 லட்ச ரூபா பணத்தை தூக்கிட்டு ஓடுனானே அதை எடுத்து வைத்த அடுத்த நிமிஷம் நான் செட்டில் பண்றேன் என்று சொல்ல மனோஜ் எனக்கு வேலை இருக்கு என்று நைசாக நழுவி விடுகிறார். பிறகு விஜயாவும் இந்த பேச்சை நிறுத்தி அமைதியாகி விடுகிறார்.

அப்போது அண்ணாமலை கார் என்ன ஆச்சு ஏன் விற்ற என்று கேட்க அதற்கு முத்து கொஞ்சம் அவசர தேவைப்பா அதனால வித்துட்டேன். கண்டிப்பா அந்த பணத்தை அம்மாகிட்ட கொடுக்கிறேன். நீயே உடம்பு முடியாம இருக்க அதனால் தான் உன்கிட்ட சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். அதுக்கான காரணம் என்ன என்பது இப்போ சொல்ல முடியாது. ஆனா கண்டிப்பா உன்னிடம் சொல்லுவேன் என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து கிளம்பி விடுகிறார்.

Siragadikka aasai march 4th Episode and promo full update

அடுத்ததாக மீனா கிச்சனில் இருக்க முத்து தண்ணீர் குடிக்க வரும்போது மீனா காரைப் பற்றி கேட்க வர முத்து மீனா கேட்க நினைத்த கேள்விகளை எல்லாம் கேட்டதும் மீனா கோபப்படுகிறார். அப்படியே பேசிக் கொண்டிருக்கும் போது முத்து சத்யாவை பற்றி பேச, அதற்கு மீனா இப்போ எதற்கு சத்யாவை பற்றி பேசுறீங்க என்று கேட்டு கோபப்படுகிறார்.

Siragadikka aasai march 4th Episode and promo full update

அதற்கு முத்து நீங்க பொண்ணு வெளியே போயிட்டு வரதுக்கு லேட்டானா மட்டும் கேள்வி கேக்குறீங்க, ஆனா ஒரு ஆம்பள எங்க போறான்னு கேள்வி கேட்க மாட்டேங்கறீங்க என்று திட்டிவிட்டு போய் விடுகிறார். இதனால் மீனா குழப்பத்தில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+