பேங்க்காரர்களால் மனோஜ் முன்பு அவமானப்படும் ரோகிணி.. முத்து செய்த உருப்படியான வேலை.. மாஸ் காட்டிய மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மார்ச் 6ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம். ரோகிணி ஏற்கனவே பணம் வாங்கிய பேங்க்காரர்கள் மனோஜ் முன்பு வைத்து ரோகிணியை அவமானப்படுத்த ரோகிணி பற்றிய விஷயங்கள் மனோஜ்க்கு தெரிய வருகிறது. அதனால் ரோகிணி மற்றும் மனோஜ்க்கு இடையே பிரச்சனை வெடிக்கிறது.
அதே நேரத்தில் மீனாவிற்கு முத்து மூலமாக பெரிய ஆர்டர் கிடைக்கிறது. ஆனாலும் மீனா மற்றும் முத்து இருவரும் சண்டை போட்டு பிரச்சினை செய்து கொண்டிருக்க அதை பார்த்து அண்ணாமலை மனம் கஷ்டப்படுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் மீனா முத்துவிடம் என்கிட்ட காரை விற்ற விஷயத்தை மறைச்சிங்க என்று கேட்க அதற்கு முத்து உனக்கு எப்படி தெரியும் என்று சொல்ல எனக்கு எல்லா விஷயமும் தெரியும். நான் அந்த சிட்டியை போய் திட்டிட்டு வந்திருக்கிறேன் என்று மீனா சொல்ல, அதற்கு முத்து அவன் ஒரு ரவுடி நீ எதுக்கு அங்க போனா? முதல்ல உன் தம்பியை திருத்தி வை என்று அட்வைஸ் கொடுத்துவிட்டு போகிறார்.
பிறகு முத்து ஆட்டோவில் போகும்போது அவருடைய நண்பர் ஒருவரை பார்க்கிறார். அவர் ஒரு கட்சி ஆபீசில் இருக்கிறார். அப்போது முத்துவை பார்த்ததும் வந்த நண்பர் கட்சி ஆபீசுக்கு உள்ளே முத்துவை கூட்டிட்டு போய் அங்கு இருக்கும் தலைவரிடம் தன்னுடைய நண்பர் என்று முத்துவை அறிமுகம் செய்கிறார். அப்போது அவர்கள் 250 ஜோடிக்கு கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது ஒரு ஜோடி மட்டும் கல்யாணத்துக்கு குறையுது என்று முத்துவின் நண்பரிடம் தலைவர் சொல்ல அதற்கு அவர் முத்துவை கல்யாணம் செய்யுமாறு சொல்கிறார். அதற்கு முத்து இல்லை எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது என்று சொல்கிறார். அதோடு கல்யாணத்துக்கு தேவையான மாலை கட்டும் நபர் ஓடிப் போய்விட்டார் என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது முத்துவின் நண்பர் மீனா நல்லா மாலை கட்டுவாங்க தானே அப்போ அவங்க கிட்ட சொல்லி எங்களுக்கு 500 மாலைக்கு ஏற்பாடு பண்ண சொல்லுங்க என்று சொல்லி 20000 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து விடுகிறார். இதனால் பணத்தை வாங்கிய முத்து சந்தோஷமாக வீட்டிற்கு வந்து அண்ணாமலையிடம் மீனாவை கூப்பிடுமாறு சொல்லி 500 மாலைக்கு ஆர்டர் வந்திருக்கிறது அதற்கான அட்வான்ஸ் பணமும் வாங்கியாச்சு என்று அண்ணாமலையை மீனாவிடம் சொல்லும்படி சொல்கிறார்.

அதற்கு மீனா என்கிட்ட கேட்காம எப்படி அட்வான்ஸ் வாங்குவீங்க? 500 மாலை இரண்டு நாள்ல எப்படி கொடுக்கிறது என்று அண்ணாமலை இடம் கேட்க சொல்கிறார். இவர்கள் இருவரும் அண்ணாமலை இடம் மாறி மாறி தகவல்கள் பரிமாறிக் கொள்ள அண்ணாமலை இவர்கள் இருவருக்குள் மாட்டிக்கொண்டு தவித்துக் கொண்டிருக்கிறார். அப்போது நாளைக்கு பூ வாங்க கடைக்கு போகணும், மாலை கட்ட ஆட்கள் பிடிக்கணும் என்று மீனா பிளான் பண்ணிக் கொண்டிருக்கிறார்.
பக்கத்தில் ரோகினி மனோஜோடு தெருவில் நடந்து கொண்டிருக்கும்போது மனோஜ் கனடாவில் வேலைக்கு போகணும் இல்லனா இங்கே பிசினஸ் பண்ணனும் என்றால் உங்க அப்பா கிட்ட பணம் கேளு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு ரோகிணி இப்படி எல்லாம் கேட்க முடியாது என்று சொல்லிவிட அதற்கு மனோஜ் எங்க அப்பா கிட்ட பணம் கேட்கலாம் என்றாலும் ஏற்கனவே வீட்டு பத்திரத்துக்கு காசு வாங்கியாச்சு வாங்க முடியாது என்று பேசிக் கொண்டே வருகிறார்கள்.

அப்போது பாங்க்காரர்கள் இருவர் ரோகினியை பார்த்து அவர் பின்னாடியே வந்து அவர்களை நிறுத்தி உன்னை தான் நாங்க இவ்வளவு நாளா தேடிகிட்டு இருக்கோம். மூணு வருஷத்துக்கு முன்னாடி கடன் வாங்கிட்டு நல்லா ஏமாத்திட்டா என்று ரோகிணியை திட்டுகிறார்கள். அதோடு நீ தந்த அட்ரஸ்க்கு போனா அங்க நீ இல்ல என்று சொல்லி ரோகிணியை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். மனோஜ் இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சியாகி கொண்டு நிற்கிறார்.
இறுதியில் அந்த பேங்க்காரர்கள் இன்னும் ஒரு மாசத்துக்குள்ள பணம் வரலைன்னா இருவரையும் போலீஸ்ல பிடிச்சு கொடுத்துடுவேன்னு மிரட்டி போட்டோ எடுத்துட்டு போகிறார்கள். அதற்கு பிறகு மனோஜ் ஏன் இந்த விஷயத்தை என்கிட்ட மறைச்ச என்று கோபப்பட அதற்கு ரோகிணி நான் மறந்துட்டேன் அது வித்தியா அம்மாவுக்கு தான் எடுத்துக் கொடுத்தேன் என்று சமாளிக்கிறார்.

ஆனாலும் ரிலேஷன்ஷிப்பில் உண்மையாக இருக்கணும் என்று சொல்லி இருக்கிறோம் ஆனால் நீ என்கிட்ட சொல்லலையே என்று மனோஜ் கோபப்பட அதற்கு ரோகிணி நான் ஒன்னும் உன்னை போல 27 லட்சம் பணத்தை எடுத்துட்டு ஓடல என்று வாய் தவறி சொல்ல அதனால் மனோஜ் கோபப்பட்டு போய்விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications