சிறகடிக்க ஆசை: விஜயாவுக்கு ரோகிணி கொடுக்கும் அதிர்ச்சி! போட்டோவை பார்த்து அதிர்ந்த மனோஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளைக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் விஜயா போட்டோவை பார்த்து ரோகிணி மற்றும் மனோஜ் இருவரும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.

கடந்த வாரம் முழுக்க சிறகடிக்க ஆசை சீரியலில் கலகலப்பான காட்சிகள் தான் இருந்து வருகிறது. இதுவரைக்கும் இந்த சீரியலில் பல பிரச்சனைகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அது குறித்த முடிவுகள் இன்னும் எட்டாத நிலையில் தான் இருக்கிறது. அதிலும் ரோகிணி பிரச்சனைகள் ஒன்று கூட இன்னும் முடிவுக்கு வரவில்லை.

television siragadikka aasai serial vijay tv

அடுத்தடுத்து முத்துவிற்கும் மீனாவிற்கும் தான் பிரச்சனைகள் வந்து அதுதான் ஒவ்வொரு வாரமும் முடிவுக்கு வருகிறது. ஆனால் ரோகிணி எப்போது மாட்டுவார் என்று எதிர்பார்ப்போடு இருக்கும் ரசிகர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. இப்போது முத்து, மீனா பிரச்சனைகளை விடவும் ஸ்ருதி வாழ்க்கையில் புது பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது.

அதுபோல மீனாவை ஒருவர் ஒரு தலையாக காதலித்து வருகிறார். அவரால் பிரச்சனை வரப்போகிறதா? அல்லது காமெடியாக வரப்போகிறதா? என்று தெரியவில்லை. இது ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது வெளியான ப்ரோமோவில் சில மாதங்களுக்கு முன்பு மீனா பொருட்கள் எடுக்கும் போது விஜயா மீது மாவு கொட்டியது.

television siragadikka aasai serial vijay tv

விஜயா உடம்பெல்லாம் மாவோடு இருக்கும்போது ஸ்ருதி ஒரு போட்டோ எடுத்திருந்தார். அதை ஸ்டேட்டஸில் வைத்திருந்தார். அந்த புகைப்படம் ஒன்றை ஒருவர் பிரின்ட் போட்டு இது தான் கண் திருஷ்டி போட்டோ என்று மனோஜ் கடைக்கு கொண்டு வந்திருக்கிறார். இந்த போட்டோ இப்போ தமிழகத்தில் நல்லா விற்பனை ஆகி கொண்டிருக்கிறது.

இதை நீங்க வாங்கி உங்க கடையில் மாட்டிட்டா உங்க கடைக்கு திருஷ்டி வராது என்று அந்த நபர் சொல்ல அந்த போட்டோவை பார்த்த ரோகினி இவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று சிறிது நேரம் யோசித்து மனோஜிடம் மனோஜ் இது ஆன்ட்டி.. உங்க அம்மா தான் என்று சொல்ல, அதை பார்த்து மனோஜ் அதிர்ச்சி அடைகிறார்.

television siragadikka aasai serial vijay tv

இந்த போட்டோ பிரச்சனை வீட்டிற்கு போகும்போது மீனா மீது விஜயா கோபப்படுவாரா? அல்லது இந்த போட்டோவை நெட்டில் அப்லோடு செய்து ஸ்ருதி மீது கோபப்பட போகிறாரா என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த போட்டோவால் ஸ்ருதிக்கு பிரச்சனை ஏற்பட போகிறதா? அல்லது வழக்கம்போல இதையும் காமெடியாக கொண்டு போகப் போகிறார்களா என்று தெரியவில்லை.

ரசிகர்கள் எதிர்பார்ப்பது ரோகிணி மாட்ட வேண்டும் என்பது, ஆனால் இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் ஒரு திருப்பம் வந்து கொண்டே இருக்கிறதே தவிர ரோகிணி மாட்டுவது மட்டும் கிடையாது. ரோகிணி மாட்டினால் சீரியலே முடிந்துவிடும். அதனால் இப்போதைக்கு ரோகிணி மாட்டுவாரா என்று எதிர்பார்ப்பது நடக்காத காரியம் தான். அதனால் ரசிகர்கள் மனதை தைரியப்படுத்தி விட்டு அண்ணாமலை விஜயா குடும்பத்தினர் செய்யும் அலப்பறைகளை பார்க்க ரெடியா இருங்க மக்களே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+