புதுக்கோட்டையில் கோலாகலமாக நடந்த வெற்றி வசந்த்- வைஷ்ணவி ரிசப்ஷன்.. குவிந்த விஜய் டிவி பிரபலங்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவாக நடிக்கும் வெற்றி வசந்த் மற்றும் பொன்னி சீரியலில் பொன்னியாக நடிக்கும் வைஷ்ணவிக்கும் புதுக்கோட்டையில் ரிசப்ஷன் நடைபெற்று இருக்கிறது. அப்போது சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சின்னத்திரையில் ஒன்றாக நடிக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொண்டவர் அதிகமாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் விஜய் டிவி பிரபலங்கள் இருவர் இணைந்து இருக்கிறார்கள். அதுவும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனாக எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்திருக்கும் வெற்றி வசந்த் மற்றும் பொண்ணு சீரியலின் கதாநாயகி வைஷ்ணவியும் தான்.

வெற்றி வசந்த் சில மாதங்களுக்கு முன்பு விரைவில் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி சொல்லப் போகிறேன் என்று சொல்லி இருந்தார். அதனால் ரசிகர்கள் இவர் திரைப்படத்தில் நடிக்கப் போகிறாரா என்ற கேள்வி எழுப்பி வந்தனர். காரணம் முதல் முறையாக வெற்றி வசந்த் விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் மூலமாகத்தான் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியல் இவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. இதனால் இவர் வெள்ளித்திரையில் அடுத்த பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அடுத்த சில வாரங்களில் இவர் தான் சீரியல் நடிகை வைஷ்ணவியை காதலிப்பதாக அறிவித்தார். இது சின்னத்திரை ரசிகர்களுக்கு பெரிய இன்ப அதிர்ச்சி தான்.
அதைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் இவர்களுடைய திருமணமும் நடைபெற்றது. திருமணத்திற்கு விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதிலும் குறிப்பாக பொன்னி சீரியல் நடிகர்கள், சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள் அனைவருமே கலந்து கொண்டனர். இவர்களின் எங்கேஜ்மண்டில் கலந்து கொள்ளாத நடிகர்கள் கூட இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டனர்.
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவாக நடிக்கும் கோமதி பிரியா இவர்களின் எங்கேஜ்மென்டில் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து கேள்விகள் அதிகமாக வந்தது. அதுபோல சில வதந்திகளும் பரவி வந்தது. ஆனால் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக கல்யாணத்தில் கோமதி பிரியா கலந்துகொண்டு புகைப்படங்களையும் எடுத்து இருந்தார்.
அதுபோல பொன்னி சீரியலில் வைஷ்ணவிக்கு ஜோடியாக நடிக்கும் சபரி இந்த திருமணத்தில் செய்த ரகளையால் நிகழ்ச்சி பெரிய அளவில் களைக்கட்டி இருந்தது. இந்த நிலையில் இவர்களுடைய ரிசப்ஷன் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றிருக்கிறது. அப்போது எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
இதை பார்க்கும் அதிகமான ரசிகர்கள் உண்மையிலேயே இவர்கள் இருவருக்கும் ஜோடி பொருத்தம் அருமையாக இருக்கிறது என்று தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த பங்க்ஷனில் வெற்றி வசந்த் கருப்பு நிற கோட் சூட் அணிந்திருக்கிறார். வைஷ்ணவி மெல்லிய ஆரஞ்சு கலரில் புடவை கட்டி இருக்கிறார். இன்று தம்பதிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications