Siragadikka Aasai serial: ரகசியத்தை உளறிய கிரிஷ் பெரியப்பா! முத்துக்கு தெரிந்த உண்மை! ரோகிணியின் பிளான்
சென்னை:(siragadikka Aasai serial today episode) விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பரபரப்பான தொடரான 'சிறகடிக்க ஆசை'யில், ரோகிணியின் முதல் திருமணம் மற்றும் மகன் கிரிஷ் பற்றிய பெரிய ரகசியம், எதிர்பாராதவிதமாக முத்துவின் மூலம் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளது. கிரிஷின் பெரியப்பாவை முத்து சந்தித்தது, இன்றைய எபிசோடில் பெரியத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனை சவாரி
கிரிஷின் தந்தை சேகரின் அண்ணன் சுப்ரமணியும் அவரது மனைவியும், 15 ஆண்டுகளாகக் குழந்தை இல்லாததால், அதற்காக சிகிச்சை எடுக்கச் சென்னை வந்திருக்கின்றனர். சுப்ரமணி, வித்யாவின் கணவர் முருகனின் உறவினர் என்பதால், அவரைச் சென்னையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, முருகன் முத்துவின் காரை ஏற்பாடு செய்திருந்தார்.
முத்துவின் முடிவு
ஆனால், முதல் நாள் முத்து வீட்டில் அப்பா தனியாக இருந்ததால், அவர் சவாரிக்குச் செல்லவில்லை. அவருக்குப் பதிலாகத் செல்வத்தை அனுப்பி வைத்தார். பின்னர், இரண்டாம் நாள் சவாரிக்கு முத்துவே சுப்ரமணியையும் அவரது மனைவியையும் காரில் அழைத்துச் சென்றிருக்கிறார்.
கிரிஷின் பெரியப்பா
முத்து அவர்களை காரில் அழைத்துச் செல்லும் போது, அவர்கள் எதற்காகச் சென்னை வந்திருக்கிறார்கள் என்றுப் பாசத்துடன் விசாரிக்கிறான். அப்போது, தங்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லாததைப் பற்றித் தம்பதிப் புலம்புகிறார்கள். அதற்கு முத்து, "நீங்கள் ஏன் குழந்தையைத் தத்தெடுக்கக் கூடாது?" என்பதை பற்றிக் கூறுகிறான். இந்த கேள்விக்கு அவர்களும், "நாங்களும் அந்தப் பிளானில் தான் இருக்கிறோம்" என்று பதிலளிக்கிறார்கள்.
அடுத்த ரகசியம்
பிறகு, "என்னுடைய தம்பி மகனை தத்தெடுக்க ஆசைப்படுகிறோம். தற்போது அவனை பார்க்கத்தான் கோவிலுக்குச் செல்கிறோம்" என பேச்சுக் கொடுக்க, ரோகிணி குடும்பத்தின் ரகசியத்தின் அடுத்தப் பகுதியை முத்து அறிய நேரிடுகிறது.
கோவிலில் காத்திருந்த பேரதிர்ச்சி
கோவிலுக்கு வந்ததும், சுப்ரமணியும் அவரது மனைவியும் உள்ளே செல்ல, முத்துவிடம் பூ வாங்கி வரச் சொல்கிறார்கள். முத்து பூ வாங்கிக் கொண்டு உள்ளே சென்றுப் பார்க்கையில், அங்கு அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருக்கிறது! தன்னுடைய காரில் வந்தது கிரிஷின் பெரியப்பா என்கிற விஷயம் அப்போதுதான் முத்துவுக்குத் தெரிய வருகிறது!
கிரிஷ்ஷின் பாசம் முத்துவை பார்த்ததும் கிரிஷ் ஓடிப்போய்க் கட்டிப்பிடித்து விளையாடுகிறார்!. அதைப் பார்த்த அந்தத் தம்பதி முத்துவிடம், "இவனை உங்களுக்கு ஏற்கனவேத் தெரியுமா?" என வினவ, அதற்கு முத்து, "கிரிஷ் கொஞ்ச நாள் எங்க வீட்டில் தான் இருந்தான்" என்று சமாளிக்கிறான். பின்னர், லட்சுமி அவசர வேலை இருப்பதாகக் கூறி, கிரிஷை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார். முத்துவும் குழப்பத்துடன் வீட்டுக்கு வந்துவிடுகிறார்.
ஷாக்கில் உறைந்த ரோகிணி
வீட்டுக்கு வந்து, கிரிஷின் பெரியப்பாவை பார்த்ததை பற்றி முத்து சொல்ல, அதைக் கேட்டு ரோகிணி ஷாக் ஆகிறார்! பின்னர், தன்னுடைய அம்மா லட்சுமிக்கு போன் போட்டு, "எதற்காகக் கிரிஷை அவனுடையப் பெரியப்பாவைப் பார்க்கக் கூட்டிட்டுப் போன?" எனச் சண்டை போடுகிறார். முத்துவுக்குக் கிரிஷ் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாகத் தெரியவருவதால், ரோகிணி என்ன செய்வதென்றுத் தெரியாமல் திக்குமுக்காடிப் போகிறார்.
இதைத் தொடர்ந்து என்ன ஆனது? கிரிஷின் அம்மா ரோகிணிதான் என்கிற உண்மையை முத்து கண்டுபிடித்தானா? அல்லது இந்த ரகசியத்தை ரோகிணி மீண்டும் சமாளித்து மூடி மறைப்பாரா? என்பது இனி வரும் எபிசோடுகளில் தெரியும்!
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications