சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு குழந்தை பிறக்காதா? அதிர்ச்சியில் ரோகிணி! முத்து உளறிய விஷயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டி.வி-யின் ஹிட் சீரியலான 'சிறகடிக்க ஆசை'யில், இன்றைய எபிசோட் முழுக்க முழுக்கச் சண்டை, சமாதானம், காமெடின்னு பல ட்ராக்குகளில் ஓடி, ரசிகர்களுக்கு ஒரு முழு நீள விருந்தா அமைஞ்சது! குறிப்பா, மனோஜுக்குக் குழந்தை வரம் கிடைக்க டாக்டர் கொடுத்த அட்வைஸ் தான் செம ஹைலைட்!

Siragadikka aasai serial vijay tv

அருணின் சர்ப்ரைஸ் விசிட்

வீட்டை விட்டு வெளியே வந்து பூக்கடையில் இருக்கும் சீதாவைப் பார்க்க அவங்க அம்மா சந்திரா வந்தாங்க. அப்போ, "ஏற்கனவே வீட்டை விட்டு வந்தது தப்பு. மாப்பிள்ளை (அருண்) போன் பண்ணியும் ஏன் எடுக்காம இருக்க?"ன்னு சந்திரா சீதாவைக் கேட்க, அந்த நேரத்துல கரெக்ட்டா அருண் அங்க வந்து நின்னார்!

சந்திரா பதற்றத்தோட, "மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை, சீதா வீட்டை விட்டு வந்திருக்கக் கூடாது"ன்னு சொல்ல, அருண் அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லைன்னு சொல்லி, சந்திராவை கடைக்குப் போகச் சொன்னார். அருண், ஒருவழியா சீதாவைச் சமாதானம் செஞ்சு, "சரி, காபி போட்டுட்டு வாங்க, கிளம்பலாம்"னு சொல்லி பாத்ரூமுக்குப் போனார்.

முத்துவின் சீக்ரெட் பேச்சு

அருண் பாத்ரூம் போனவுடனே, முத்துவும் மீனாவும் அங்கே ஓடி வந்தாங்க!
"எதுக்கு சீதா, நீ வீட்டை விட்டு வெளியே வந்த? அந்த ஆளுக்கு (அருணுக்கு) என் மேல தான் கோபம்; உன் மேல எல்லாம் எதுவும் கிடையாது. அவருக்கு யார்கிட்டயாவது சண்டை போடணும்; கொஞ்சம் மெண்டல் மாதிரி!" - இப்படி அருணைப் பத்தி முத்து பேசிக்கொண்டிருக்க, இதையெல்லாம் கவனிச்சுட்டு இருந்த அருண், டக்குனு "அருண்... சீதா!"ன்னு குரல் கொடுத்தார்! முத்து உடனே அமைதியாகி, "உன் புருஷன் வந்திருக்காருன்னு சொல்ல மாட்டியா?"ன்னு சீதா கிட்டக் கேட்க, அங்கேயும் ஒரு சிரிப்பலை! கடைசியில், முத்துவே அருண்-சீதாவை காரில் ஏற்றி வழி அனுப்பி வச்சார்!

மனோஜுக்கு கிடைத்த சாபம்

மறுபக்கம், மனோஜ் ஷோரூம்ல போன் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு பெண்மணி தன் குழந்தையோடு வராங்க. அந்தப் பையன் ஐஸ்கிரீம் வேணும்னு அடம் பிடிச்சு அழுதுகிட்டே இருக்க, மனோஜுக்கு அது டிஸ்டர்பா இருக்கு! அந்த அம்மா, குழந்தையைக் கவனிக்காம விட்டதால, மனோஜ் குழந்தையைத் தொட்டுத் தரையில இறக்கிவிட, குழந்தை தவறி விழுந்து அடி வாங்கிடுது!

உடனே வந்த அம்மா, "ஏன் குழந்தையை அடிச்சீங்க?"ன்னு கேட்க, "அது அழுதுகிட்டே இருந்தா என்னால போன் பேச முடியலை!"ன்னு மனோஜ் சொல்றார்! கோபப்பட்ட அந்தப் பெண்மணி, "உங்களுக்குக் குழந்தையே பொறக்காது!"ன்னு சாபம் விட்டுட்டுப் போக, மனோஜ் வருத்தப்பட்டார். மனோஜைத் தேற்றும் சந்தோஷ், "ஹாஸ்பிடலுக்குப் போய் பேசலாம்"னு சொல்லி கூட்டிட்டுப் போனார்.

தொட்டிலில் தூங்க சொன்ன டாக்டர்

ஹாஸ்பிடலுக்குப் போன மனோஜும் சந்தோஷும் டாக்டரைப் பார்க்க உட்கார்ந்தாங்க. மனோஜ், "எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு; ஆனா குழந்தை இல்லை"ன்னு சொல்ல, அந்த டாக்டர் செம ஷாக் கொடுத்தார். "மருந்து சாப்பிட்டால் குழந்தை பிறக்காது. அதுக்கு நீங்க நடக்கக் கூடாது; குழந்தை மாதிரித் தவழ்ந்து போகணும்! அதுவும் இல்லாம ஃபீடிங் பாட்டில்லதான் பால் குடிக்கணும்! ஒரு பத்து நிமிஷம் குழந்தை மாதிரி அழனும்!" "நீங்க எதுல தூங்குறீங்க?"ன்னு டாக்டர் கேட்க, "கட்டில்லதான்"னு மனோஜ் சொல்றார். உடனே டாக்டர், "இனிமேல் ஒரு புடவையில தொட்டில் கட்டி, அதுலதான் தூங்கணும்!"னு சொல்லிட்டார்!

இதெல்லாம் எப்படி பண்ண முடியும்னு மனோஜ் கேட்டபோது, "இதெல்லாம் சைக்காலஜி ட்ரீட்மென்ட். நீ எதை நினைக்கிறாயோ, அதையே ஆகிறாய்னு நினைச்சு இதெல்லாம் பண்ணணும். அஞ்சு நாள் பண்ணாப் போதும்!"னு சொன்னார்! ஃபீஸ் எவ்வளவுன்னு மனோஜ் கேட்க, "நீ அப்பா ஆனவுடன் தானா எனக்குக் கிரெடிட் ஆகும்!"னு சொல்லிட்டு அனுப்பினார்!

மனோஜும் சந்தோஷும் கிளம்பிப் போன பிறகுதான், அந்த டாக்டர் ரூம்ல இருந்தவர் உண்மையில் ஒரு மெண்டல் என்றும், அவருடைய மகன்தான் உண்மையான டாக்டர் என்றும் தெரிய வருது! "அவரை எதுக்கு இங்க உட்கார வச்சீங்க? ரூம்லதானே உட்காரச் சொன்னேன்!"னு உண்மையான டாக்டர் வந்து பதறுறாரு!

வீட்டுக்கு வந்த மனோஜ், ஹால்ல புடவையில தொட்டில் கட்டிக்கிட்டு இருக்க, ரோகிணி வந்து அதிர்ச்சியில் பார்க்கிறார். இந்த டிராமா, அடுத்த எபிசோடுல என்ன களேபரத்தைக் கிளப்பப் போகுதோ!

குடும்பச் சண்டையை விட, மனோஜுக்கு டாக்டர் கொடுத்த இந்த 'சைக்காலஜி' ஷாக் தான் இன்றைய எபிசோடுல அல்டிமேட் காமெடி!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+