சிறகடிக்க ஆசை: விஜயாவால் பாதை மாறிய முத்து! சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போன காரணம்! இன்றைய அப்டேட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில், ரசிகர்களின் மனம் கவர்ந்த முத்துவின் வாழ்நாள் வலி என்ன என்பது, இன்றைய எபிசோடில் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அம்மா விஜயாவின் பாசத்திற்காக ஏங்கி நிற்கும் முத்துவின் கண்ணீரும், அவரது கடந்த காலத்தின் துயரமும், இந்த எபிசோடை மிகவும் உருக்கமாக்கியது.

அரங்கேறிய துரோகம்
இன்றைய எபிசோடின் தொடக்கத்தில், மனோஜ் ஹெட் மாஸ்டர் மீது கல்லை எறிந்துவிட்டு, பழியை முத்துவின் மீது போடுகிறார். இதனால் பள்ளிக்கு வரும் விஜயாவிடம், "நாங்க போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறோம். அப்படி கொடுத்தா உங்க பையனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் போட்டுடுவாங்க" என ஆசிரியர்கள் சொல்ல, விஜயா எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாகிவிடுகிறார்.
பின்னர் வீட்டுக்கு வந்தபோது, அண்ணாமலையும், பாட்டியும் முத்துவின் பக்கம் நின்று, "அவன் ரவுடி கிடையாது, அவன் இந்தத் தப்பை பண்ணியிருக்க மாட்டான். நீ அவனுக்குத் தானே சப்போர்ட் பண்ணிப் பேசி இருக்கணும்?" என்று கேட்கிறார்கள். அதற்கு விஜயா, "இவன்தான் செஞ்சிருப்பான். இவன் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்குப் போகட்டும். அப்போதான் எனக்கு நிம்மதி" என்று சொன்னது, அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்கிறது. சிறிது நேரத்தில், போலீஸார் வந்து முத்துவை ஜீப்பில் ஏற்றிக் கொண்டு செல்கிறார்கள். முத்துவும், அண்ணாமலையும் கண்ணீருடன் கலங்கி நிற்கிறார்கள்.
முத்துவின் வலிமிகுந்த வாக்குமூலம்
சிறார் சீர்திருத்தப் பள்ளியில் இருந்தபோது, நடந்த அனைத்தையும் மீனாவிடம் முத்து சொல்லி அழுகிறார். "நீங்க ஏன் உங்க அம்மாகிட்ட மனோஜ்தான் இதை பண்ணாருன்னு சொல்லல?" என்று மீனா கேட்க, "நான் ஸ்கூல்ல வந்து, 'என் பையன் தப்பு பண்ணியிருக்க மாட்டான், அவன் மேல எந்தத் தப்பும் இல்ல'ன்னு சொல்லுவாங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா, பெத்த அம்மாவே வந்து பையனை ரவுடி, முரடன் என்று சொல்லும்போது நான் நொறுங்கிப் போயிட்டேன் மீனா!" என்று சொல்லி முத்து கதறி அழுகிறார்.
தொடர்ந்து, "ஒருத்தர் மேல அதிக அன்பு வைத்திருக்கும் போது, அவங்க மேல எந்த ஒரு பழியைப் போட்டாலும் ஒத்துக்க மாட்டாங்க. ஒருத்தர பிடிக்கலைன்னா, அவங்க செய்யவே இல்லனாலும், அந்தத் தப்பு அவங்க மேல போட்டுடுவாங்க" என்று தன் தாயின் மனநிலையை அவர் விவரிக்கிறார்.
மீனாவால் கிடைத்த சந்தோஷம்
சிறார் சீர்திருத்தப் பள்ளியில் இருந்தபோது, முத்துவுக்கு படிப்பு சுத்தமாக ஏறவில்லை. அம்மா தன்னை நம்பாமல் போய்விட்டாரே என்ற கவலை அவரை வாட்டுகிறது. அந்த வலியை மறக்கவே அவர் குடிக்க ஆரம்பித்தார். இதையெல்லாம் கேட்ட மீனா அழுது, "உங்களை ஒரு நாள் நிச்சயம் உங்க அம்மா புரிந்துகொள்வார்" என்று ஆறுதல் கூறுகிறார்.
அதிர்ஷ்டவசமாக, ஹெட் மாஸ்டர் குணமடைந்ததால் முத்து விடுவிக்கப்பட்டு, பாட்டி வீட்டில் இருந்து படிக்கிறார். ஆனால், அந்தக் கசப்பான சம்பவம் அவரது வாழ்க்கையை முழுமையாக மாற்றிவிடுகிறது. "என் வாழ்க்கையில் சந்தோஷம் என்றதையே உன்னைத் திருமணம் பண்ணதுக்கு அப்புறம்தான் எனக்குக் கிடைச்சது" என்று முத்து மீனாவிடம் சொல்லும் அந்தக் காட்சி, இன்றைய எபிசோடின் உச்சகட்ட உணர்வுபூர்வமான தருணமாக அமைந்தது.
எபிசோடின் முடிவில், கிருஷ்க்கு டெஸ்ட் வைப்பதற்கு அவன் அடித்த சிறுவனின் அப்பா வருகிறார். அவரிடம் என்ன டெஸ்ட் வைக்க போறீங்க என்று ஹெட் மாஸ்டர் கேட்க,"ஒரு பக்கம் ஆப்பிளும் ஒரு பக்கம் பணமும் வைப்போம். அதில் அவன் ஆப்பிளை எடுத்தால் அவன் அப்பாவி. அப்படியே பணத்தையும் எடுத்தால், அந்தப் பணம் எடுத்ததற்கான காரணத்தைக் கேட்போம். அதிலேயே தெரிந்துவிடும்" என்று சொல்கிறார் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications