Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறகடிக்க ஆசை: ரோகிணியின் நாடகத்துக்கு அளவில்லையா? மாட்டிக்கொண்ட மீனா! முத்து கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில், ரோகிணி தனது சோகமான பிளாஷ்பேக் கதையின் தொடர்ச்சியைக் கூறி முடித்தார். இந்தக் கதையைக் கேட்ட மீனா, ரோகிணி மீது பரிதாபம் கொண்டாலும், குடும்பத்தை ஏமாற்றுவது குறித்துக் குற்ற உணர்ச்சியுடன் பேசியது விறுவிறுப்பைக் கூட்டியது.

Siragadikka aasai serial vijay tv

ரோகிணியின் போராட்டம்

நேற்றைய எபிசோடில், தனது முதல் கணவர் விபத்தில் இறந்த பிறகும், கர்ப்பமாக இருந்த தன்னை அவரது குடும்பத்தார் வீட்டிலிருந்து துரத்திவிட்டதாக ரோகிணி மீனாவிடம் கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, ஊரை விட்டே ஓடிவந்த ரோகிணி தனது வாழ்க்கைப் போராட்டத்தைக் குறித்து இன்றைய எபிசோடில் மீனாவிடம் விவரித்தார்:

படிப்பு மற்றும் வேலை

ஊரை விட்டு வந்த ரோகிணி, தனது படிப்பைத் தொடர்ந்தார். அடுத்த சில மாதங்களில் கிரிஷ் பிறந்ததை அடுத்து, மகனுக்காகப் பார்ட் டைமாக வேலைக்குச் சென்று, தன்னுடைய படிப்பையும் தொடர்ந்திருக்கிறார். ஒருவழியாகப் படிப்பை முடித்துச் சென்னைக்கு வந்து பார்லரில் வேலைக்குச் சேர்ந்த ரோகிணிக்கு, வங்கி ஊழியர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

அந்த நபர் ரோகிணியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அவருடன் நெருங்கிப் பழகிவிட்டு, அவருக்குக் குழந்தை இருப்பது தெரிந்ததும் கழட்டிவிட்டுச் சென்றுவிட்டார். அதன் பின்னரும் நிறைய பேர் ரோகிணிக்குத் தொல்லை கொடுத்திருக்கிறார்கள். பார்லர் வேலைக்காகச் சென்ற நிறைய இடங்களில் ரோகிணியிடம் தவறாக நடக்க முயன்றார்களாம்.

மனோஜை திருமணம் செய்ய காரணம்

இவ்வளவு கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு, "நமக்கென ஒரு நல்ல வாழ்க்கை வேண்டும்" என்று முடிவெடுத்த ரோகிணி, மனோஜை திருமணம் செய்யச் சம்மதித்ததற்கான காரணத்தையும் கூறினார். "தான் நேசித்த முதல் ஆள் மனோஜ் என்பதால் அவரைத் திருமணம் செய்தேன். அதனால்தான் மனோஜிடமும் கிரிஷை பற்றிய உண்மைகளைச் சொல்லவில்லை. நான் சொன்ன பொய்யை நியாயப்படுத்தவில்லை. ஆனால், நான் சொன்ன பொய்க்கு ஒரு நியாயம் இருக்கு" என்று ரோகிணி சொல்கிறார். ரோகிணியின் இந்தக் கதையைக் கேட்ட மீனா மிகவும் உணர்ச்சிவசப்படுகிறார்.

குற்ற உணர்ச்சியில் மீனா

ரோகிணியின் சோகத்தைக் கேட்டு அவர் மீது பரிதாபம் கொண்டாலும், ஒரு குடும்பத்தை ஏமாற்றுவது குறித்த தனது மனவேதனையை மீனா வெளிப்படுத்துகிறார். "உன் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் எந்தப் பொண்ணுக்கும் நடக்கக் கூடாது. உன்மேல நான் பரிதாபப்படுறேன். ஆனால், அதற்காக ஒரு குடும்பத்தை ஏமாற்றுவது எந்த விதத்தில் நியாயம்? நீ உண்மையை மறைப்பதற்கு உன் பக்கம் ஆயிரம் நியாயம் இருக்கு. ஆனா, எனக்குத் தெரிஞ்சும் நான் மறைச்சுட்டு இருக்கேனே... என் பக்கம் எந்தக் காரணமும் இல்லையே? எந்த உண்மையும் ரொம்ப நாள் இருட்டிலேயே இருக்கப் போறது இல்ல ரோகிணி. நாம செய்யுற எல்லாப் பாவ, புண்ணியமும் எதாவது ஒரு வகையில நம்மகிட்ட வரும். உண்மை வெளியே தெரியும். அன்னைக்கு உன்கூடச் சேர்ந்து நானும் ஒரு குற்றவாளியா தான நிப்பேன்?" என்று கேட்கிறார் மீனா.

இதைக் கேட்டு ரோகிணி, "உங்களுக்குத் தெரியும்னு நீங்க யாருகிட்டையும் சொல்லவே வேண்டாம் மீனா. நேரம் வரும்போது நானே சொல்லிக்கிறேன்" எனக் கெஞ்சுகிறார். மத்தவங்க கிட்ட இருந்து மறைச்சாலும் என்னுடைய மனசாட்சியிடம் இருந்து நான் மறைக்க முடியாது. உன் வாழ்க்கைக்காக என்னோட நிம்மதியை எடுத்திருக்க" என்று சொல்லிவிட்டு மீனா அங்கிருந்து கீழே செல்கிறார்.

இரவில் இதை நினைத்துத் தூக்கம் வராமல் இருக்கும் மீனாவை, முத்து வழக்கம் போல, "என்ன ஆச்சு?" எனத் துருவித் துருவி கேட்கிறார். இதனால் டென்ஷன் ஆன மீனா, முத்துவிடம் சிடுசிடுவெனப் பேசுகிறார். "நீ எதையோ மறைக்குற, அதுமட்டும் தெரியுது" எனச் சொல்லிவிட்டு முத்து அங்கிருந்து செல்கிறார்.

முத்துவிடம் உண்மையைச் சொல்ல முடியாமல் மீனா தொடர்ந்து வேதனைப்படுவாரா, அல்லது ரோகிணி உண்மையைப் போட்டு உடைப்பாரா என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+