சிறகடிக்க ஆசை: முத்து மீது பழி போட்ட மீனா! அதிர்ச்சியில் அண்ணாமலை எடுத்த முடிவு, விஜயா கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில் (டிசம்பர் 24), குடி பழக்கம் காரணமாக மீனா வீட்டை விட்டு போக, அதனால் கோபமடைந்த அண்ணாமலை முத்துவிடம் கடும் சண்டையிடுகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம் வாங்க.

குடிபோதையில் வந்த முத்து
முத்து குடித்துவிட்டுப் பேசிக்கொண்டு இருக்க, செல்வம் அவரை வீட்டுக்கு போக சொல்கிறார். ஏற்கனவே சண்டைபோட்டு விட்டு வந்திருக்கிறாய், அதனால சீக்கிரமா போ என்று சொல்லி முத்துவை அனுப்பி வைக்கிறார்.
வீட்டுக்குத் தள்ளாடிக்கொண்டே வந்த முத்துவை பார்த்து அனைவரும் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். வந்தவுடன் 'மீனா, மீனா' எனக் கூப்பிட, யாருமே எதுவும் பேசாமல் இருக்கின்றனர்.
விஜயாவின் அதிர்ச்சி தகவல்
அண்ணாமலை முதலில் போய் சாப்பிடு என்று சொல்ல, மீனா எங்கேப்பா என்று முத்து மீண்டும் கேட்கிறார். உடனே விஜயா, "அவள் இங்கே இல்லையே, துணியெல்லாம் எடுத்துக்கிட்டு வீட்டை விட்டு ஓடி போயிட்டா" என்று சொல்லி முத்துவைச் சற்று அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார். இதைக் கேட்ட அண்ணாமலை கோபப்படுகிறார்.
உண்மை விவரம்
வீட்டுக்கு வந்த மருமகளை 'ஓடி போயிட்டாள்' என்று விஜயா பேசுவதை கேட்டு அண்ணாமலை திட்டுகிறார். ரவியும், ஸ்ருதியும் முத்துவை பார்த்து "நீங்க பண்ணது ரொம்ப தப்பு" என்று சொல்கின்றனர். என்ன நடந்தது என்று முத்து கேட்கும்போதே, அண்ணாமலை நடந்த விஷயங்களைச் சொல்லுகிறார்.
மீனாவின் முடிவு
மீனா பையை எடுத்துக்கொண்டு குடும்பத்தினரிடம், நான் அம்மாவின் வீட்டுக்குப் போகப் போவதாகச் சொல்கிறார். அதற்குக் காரணம் என்ன என்று அண்ணாமலை கேட்க, விஜயாவைக் கேட்கிறார். விஜயா நான் எதுக்கு திட்ட போறேன் என்று சொல்ல, மீனாவும் போவதற்கு அவர்கள் காரணம் இல்லை, 'அவர்தான்' என்று முத்துவை கை காட்டுகிறார்.
குடி பழக்கமே காரணம்
முத்துவை பற்றி பேசிய மீனா, "எவ்வளவு சொன்னாலும் குடிச்சிட்டுத் தான் வராரு, அவர் எப்ப குடியை நிறுத்துகிறாரோ அப்பத்தான் நான் இந்த வீட்டுக்கு வருவேன்" என்று உறுதியாக சொல்கிறார். அதற்குப் பதிலாக விஜயா கோபத்தில், "அப்போ நீ இந்த ஜென்மத்துக்கே இந்த வீட்டுப் பக்கமே வர முடியாது" என்று சொல்லுகிறார்.
மீனா போகும் முடிவு சரிதான் என்று ரோகிணி ஆதரவு தெரிவிக்க, மீனா அவரைப் பார்த்து முறைக்கிறார். இதுதான் உன்னோட முடிவாமா என்று அண்ணாமலை கேட்க, ஒன்னு அவர் இந்தக் குடியை விடணும் இல்ல என்ன மறந்துடனும் என்று மீனா சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்.
அண்ணாமலையின் கண்டிப்பு
நடந்த விஷயங்களை முத்துவிடம் சொல்லி அண்ணாமலை கோபத்தில் பேசுகிறார். "இதுக்கு மேல நீ குடிக்கக் கூடாது, நீ உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வா என்று நான் சொல்ல மாட்டேன், அது உன்னோட விருப்பம்! ஆனா குடிச்சிட்டு நீ இந்த வீட்டுக்குள்ள வரக் கூடாது! புருஷன் குடிக்கிறதா சொல்லி வீட்டுக்கு வந்த மருமக வெளியேப் போனா நாளைக்கு என்னை என்ன நினைப்பாங்க? அண்ணாமலை பிள்ளை வளர்த்தது சரியில்லன்னு நினைப்பாங்க. இனிமேல் குடிச்சிட்டு வந்தா நான் உன்னைச் சேர்க்க மாட்டேன்" என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்.
இதன்பிறகு விஜயா முத்துவைப் பார்த்து, 'பொண்டாட்டியைத் தலை மேல தூக்கி வெச்சிகிட்டு ஆடனான், இல்ல உன்னை எப்படி தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டா பாரு' என்று பேசிவிட்டு செல்கிறார். ரோகிணி மனதிற்குள், இவன் குடியை விடமாட்டான், அவளும் வரமாட்டா, இது இப்போதைக்கு சந்தோஷம் என்று நினைத்து சென்றுவிடுகிறார்.
அண்ணாமலையின் கண்டிப்புக்குப்பின் முத்து என்ன சொல்லப் போகிறார் என்பதையும், மீண்டும் மீனா வீட்டுக்குத் திரும்பி வருவாரா என்பதையும் நாளைய எபிசோடில் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications