சிறகடிக்க ஆசை: விஜயாவால் பிச்சைக்காரனாகும் மகன்.. உடைப்பட்ட உண்மை! இனி ரோகிணிக்கு ஆப்பு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரவு சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் பல்வேறு எதிர்பாராத திருப்பங்களையும் டிராமாக்களையும் கொண்டிருந்தது. ஒருபுறம் ஒரு டாக்டர் பட்டம் தொடர்பான மர்மம் வெளிவர மறுபுறம் முத்து பிச்சைக்காரன் வேஷம் போட்டு வீடியோ ஷூட் செய்யும் அளவுக்குப் போனதுதான் இன்றைய எபிசோடின் ஹைலைட்.

ரத்ததான முகாம்
இன்றைய எபிசோடில் ஒரு ரத்ததான முகாம் நடக்கும் இடத்தில் விஜயா இது மாதிரி சமூக சேவை செய்வதற்கு முக்கிய காரணமே என்னோட ஹஸ்பண்ட் தான் என்று கூறி அண்ணாமலை மற்றும் முத்துக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதைக் கேட்ட முத்து அண்ணாமலையிடம் உங்களுக்குக் கல்யாணம் ஆகி அவங்க உங்களை பாராட்டி பேசி இன்னைக்குத்தான்பா பார்க்கிறேன் எனக்கு மயக்கமா வருது என்று சொல்லி நகைச்சுவையாகக் கலாய்த்தார். தொடர்ந்து இன்னைக்கு இந்த ரத்த தான முகாமுக்கு என் குடும்பம் வந்திருக்காங்க அவங்க எல்லாரும் ரத்த தானம் கொடுக்கப் போறாங்க வாங்க அதை பார்க்கலாம் என்று சொல்லி கேமராமேனைக் குடும்பத்தினரிடம் அழைத்துச் சென்றார் விஜயா. குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் ரத்தம் கொடுத்துவிட்டு வெளியில் வந்தனர்.
முத்துக்கு தெரிந்த உண்மை
கொஞ்ச நேரத்தில் யோகா கிளாசுக்கு வந்த சிவன் பார்வதிக்கு பொக்கே கொடுத்து வாழ்த்து சொல்ல, விஜயா பண்றா எனக்கு எதுக்கு கொடுக்குறீங்க என்று கேட்க ஒரு வீட்டில் நல்லது நடக்கும்போது அதுவே எவ்வளவு பெரிய விஷயம் என்று சிவன் சொல்ல பார்வதி அந்த பொக்கேயை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார். இன்னொரு வாட்டி வரும்போது இரண்டு குப்பைத் தொட்டிதான் வாங்கிட்டு வரணும் எது கொடுத்தாலும் குப்பைத்தொட்டில போட்டுறீங்க என்று சிவன் சொல்ல, பார்வதி அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
பிறகு விஜயாவுக்கு டாக்டர் பட்டம் வாங்கித் தருவதாகச் சொன்ன நண்பர் அங்கு வந்தார். விஜயா அவரை வரவேற்று குடும்பத்தில் இருப்பவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது முத்து மற்றும் மீனாவை அறிமுகப்படுத்தாமல் விட்டார். முத்துவே அவர்களை அறிமுகப்படுத்திக் கொள்ள இவங்களோட அப்பா தான் ட்ரெயின் ஆக்சிடென்ட்ல இறந்துட்டாரா என்று அவர் கேட்க அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உங்க மாமியாருக்கு ரொம்ப பெரிய மனசுமா உங்க கல்யாணத்தை முன்நின்று நடத்தி இருக்காங்க என்று சொல்ல அனைவரும் அமைதியாக இருந்தனர். விஜயாவிடம் நீங்கள் நிறைய நல்லது பண்ணி இருக்கீங்க என்று நண்பர் பாராட்டினார்.
முத்துவின் வீடியோ ஆபரேஷன்
முத்து இந்தப் பேச்சில் ஏதோ ஒரு உண்மை இருக்கு என்று யோசித்து பார்வதியிடம் தண்ணீர் கேட்டார். பார்வதி உள்ளே சென்ற பிறகு முத்துவும் பின்னாலேயே சென்று அம்மா எதுக்காக இது மாதிரி பண்றாங்கன்னு நான் கண்டுபிடித்துவிட்டதா என்று சொல்ல அப்போ டாக்டர் பட்டம் வாங்கப் போறது உனக்கும் தெரிஞ்சிருக்கு என்று விஜயா கேட்க டாக்டர் பட்டமா என்று முத்து அதிர்ச்சி அடைந்தார். இப்பதானப்பா தெரியும்னு சொன்ன என்று அவர் சொல்ல நான் ஒருவேளை ஏரியா கவுன்சிலருக்கு போட்டி போடுறாங்களோன்னு நினைச்சேன் என்று முத்து கூற பார்வதி உண்மையை உளறி விட்டார்.
பிறகு முத்து மீனாவிடம் டாக்டர் பட்டம் எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்குவாங்க தெரியுமா? ஆனால் இவங்க ஊழல் பண்ணி வாங்க பார்க்கிறாங்க. அம்மாவுக்கு இது கிடைக்க விடக்கூடாது என்று முடிவெடுத்தார். இத்தனை நாளா எங்க அம்மா டாக்டர் பட்டம் கிடைக்கறதுக்காக வீடியோ எடுத்தாங்க இதுக்கு அப்புறம் நான் அவங்களுக்குக் கிடைக்க விடாமல் பண்றதுக்காக வீடியோ எடுக்கப் போறேன். இதுக்கு நீ தான் உதவி செய்யணும் என்று முத்து மீனாவிடம் சொல்லிவிட்டார்.
மனோஜின் திட்டம்
மறுநாள் காலையில் விஜயா வெளியில் எழுந்து வந்தவுடன் முத்து வழிமறைத்து நின்றார். உனக்கு என்னடா வேணும் என்று விஜயா கேட்க முத்து மீனாவிற்கு சைகை காட்ட மீனா போன் கேமராவை ஆன் பண்ணி வைத்தார். அப்பாதானே எங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்சாரு அதுக்கப்புறம் எதுக்கு நீங்க பண்ணதா சொன்னீங்க என்று முத்து கேட்க ஆமா பொய்தான் சொன்னேன் இப்ப என்ன பண்ணச் சொல்ற என்று விஜயா உண்மையை பேசிவிட்டார். இதுமட்டும் இல்லாமல் மீனா குடும்பத்தை அங்க பாராட்டிப் பேசினீங்க என்று கேட்க, பேசறதுக்கு என்ன இருக்கு அதனாலதான் அங்கையாவது சும்மா பேசி வெச்சேன் என்று சொன்னார். இதுக்குதான் என்னை மறைச்சு நின்னுட்டு இருந்தியா போடா என்று சொல்லி முத்துவைத் தள்ளிவிட்டார்.
மீனா விஜயாவிடம் இன்னைக்கு என்ன சமைக்க, எனக்கு பூ கொடுக்கிற ஆர்டர் இருக்கு என்று சொல்ல, விஜயா வழக்கம் போல் சாம்பார், கூட்டு, பொரியல் என லிஸ்ட் பெரிதாகச் சொன்னார். எனக்கு டைம் ஆயிடுது என்று மீனா சொல்ல நீ எங்க வீட்டுக்கு வந்ததே பெருசு இதுல உன்னால வேலை என்ன செய்ய முடியாதா? என்று திட்டிவிட்டுப் போவதையும் முத்து வீடியோ எடுத்தார்.
இதற்கிடையில் ஷோரூமில் மனோஜ் வேலை பார்த்துக் கொண்டிருக்க அவரது நண்பர் வந்தார். மனோஜ்ஷின் பிரச்சனையைக் கேட்ட நண்பர் அந்தப் பொண்ணு நீ தப்பே பண்ணாம நீ தப்பு பண்ணாத மிரட்டிக்கிட்டு இருக்கு அதனால நீ அந்தப் பொண்ணு கிட்ட தப்பு பண்ற மாதிரி பண்ணு அப்போ அந்த பொண்ணு பதறி போய் எல்லாம் சொல்லிடுவா என்று ஐடியா கொடுத்தார். அதற்கு மனோஜ் அதெல்லாம் முடியாது நான் ரோகிணியை தவிர வேற எந்த பொண்ணையும் தப்பா பார்க்க மாட்டேன் என்று சொல்ல, அப்போ உன் பிரச்சனைக்கு வெளியே கிடையாது நீ தான் இப்போ முடிவு எடுத்துக்கணும் என்று நண்பர் சொல்லிவிட்டுச் சென்றார்.
முத்துவின் கடைசி முயற்சி பிச்சைக்காரன் வேஷம்
மறுபக்கத்தில் முத்து பிச்சைக்காரன் வேஷம் போட்டுக்கொண்டு தெருவில் இருக்க அதைப் பார்த்து மீனா திட்டிக் கொண்டிருக்கிறார். உங்களை இந்த நிலைமையில என்னால பார்க்க முடியவில்லை என்று முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கிறார். பிறகு அந்த நேரத்தில் விஜயா அங்கு வந்ததும் மீனா ஒளிந்து கொண்டு வீடியோ எடுக்கிறார். விஜயாவிடம் பிச்சை கேட்ட முத்துவை விஜயா திட்டி அவமானப்படுத்தி துரத்தி விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications