சிறகடிக்க ஆசை: 'புது வில்லி' எண்ட்ரி! சீதா குடும்பத்திற்குள் வரும் நபர்! இனி விஜயாவுக்கு ஆப்பு தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'சிறகடிக்க ஆசை' சீரியலில் ஒரு நாளும் சஸ்பென்ஸுக்குக் குறைவில்லைங்க! முத்துவும் சீதாவும் ஒரு பக்கம் சண்டை போட்டுச் சமாதானமானா, இப்போ ரவி, ஸ்ருதி, நீத்துன்னு ஒரு பக்கம் பிசினஸ் சண்டை! இன்றைய எபிசோடில் ஹைலைட்டே நம்ம சத்யாவோட வேலையில் நடந்த ட்விஸ்ட்தான்.

Siragadikka aasai serial vijay tv

ரவி - நீத்துவின் பிசினஸ்

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ரவியும், நீத்துவும் ஹோட்டல் வேலையை பத்திப் பேசிட்டு இருக்காங்க. அப்போ ஸ்ருதி வந்து, "என் ரெஸ்டாரன்ட்டுக்கு ஆள் பற்றாக்குறையா இருக்கு. உங்க ஹோட்டல் உணவுகளை வாங்கி, டெலிவரி பண்ணலாமா?"ன்னு கேட்குறாங்க. ரவிதான், "இதெல்லாம் சரி வருமா?"ன்னு சந்தேகப்படுறாரு. ஆனா, நீத்து, "இது நல்ல ஐடியாதான்"னு ஓகே சொல்லிட்டாங்க.

அப்போ ஸ்ருதி, "நீங்க என் ரெஸ்டாரன்ட் ஆட்களை உங்கள் பக்கம் இழுத்ததால, எனக்குப் பார்ட் டைம் வேலை பார்க்கக் கல்லூரி மாணவர்கள் நிறைய கிடைச்சிட்டாங்க"ன்னு சொல்றாங்க.

ரவிக்கு தெரிஞ்ச உண்மை

இதைக்கேட்டு ரவிக்கு ஷாக்! "நீங்க அந்த 3 பேரும் அவங்கவங்களா வந்தாங்கன்னு சொன்னீங்களே... ஆனா நீங்க தான் வரவழைச்சீங்களா?"ன்னு நீத்து கிட்ட ரவி கேட்குறாரு. நீத்துவும், "ஆமாம், பிசினஸில் இதெல்லாம் சகஜம்"னு ஒரு சப்பைக்கட்டு கட்டுறாங்க. "எனக்கு இதெல்லாம் சுத்தமாப் பிடிக்காது"ன்னு ரவி கடுப்பாகி அங்கிருந்து கிளம்பிடுறாரு.

சத்யாவிற்கு இன்ப அதிர்ச்சி

இப்பதாங்க முக்கியமான இடமே! அந்தப் பக்கம் நம்ம சத்யா, முத்துவின் அறிவுரைப்படி, தான் வேலை பார்க்கும் பைனான்ஸ் கம்பெனிக்கு ரிசைன் பண்ணப் போறாரு. "இந்த வேலையில் மைனஸ் நிறைய இருக்கு, எனக்கு திருப்தியில்லை"ன்னு சொல்லி ராஜினாமா செய்யப் போறப்போ... அவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்குது!

முதலாளி சேர்ல, ஓனரோட மகள் ஒருத்தங்க உட்கார்ந்திருக்காங்க. சத்யா ஷாக் ஆகி, "நீங்க யாரு?"ன்னு கேட்குறாரு. அந்தப் பொண்ணு, "நான் ரேகா, இப்போதான் ஃபாரினில் படிப்பை முடிச்சிட்டு வந்திருக்கேன். இனி என்னுடைய அப்பாவோட பிசினஸை நான் தான் பார்த்துக்கப் போறேன். நீங்க சொல்றபடி இந்தக் கம்பெனியை நம்பிக்கை உள்ளதாக மாற்ற நான் உதவுறேன்"னு சொல்லிட்டாங்க.

ஒரு ஊழியரோட ஐடியாவைக் கேட்டு, கம்பெனி ரூல்ஸையே மாத்துறேன்னு சொல்றீங்க, எனக்கு ரொம்ப சந்தோஷம்"னு சொல்லி, சத்யா தன்னோட முடிவில் இருந்து பின்வாங்கிடுறாரு.

செம சம்பவம் வெயிட்டிங்

போகிற போக்கைப் பார்த்தா, அந்தப் பொண்ணு ரேகாவுக்கு முதல் சந்திப்பிலேயே சத்யா மேல கிரஷ் வந்தது போல் தெரிகிறது. இங்கேதான் பிக் ட்விஸ்ட்டே இருக்கு!. அந்தப் பெண் ரேகா, வேற யாரும் இல்லீங்க... நம்ம மீனாவோட பரம எதிரியான சிந்தாமணியோட மகளாம். ஒருவேளை ரேகாவும், சத்யாவும் காதல் பண்ணினா... அதன்மூலம் மீனாவின் குடும்பத்திற்குள் நுழைந்து, சிந்தாமணி குட்டையைக் குழப்பவும் வாய்ப்பு இருக்கு!

கடைசியாக முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சீதாவும் மீனாவும் பேசாததற்கு முத்து வருத்தமாக பேசிக் கொண்டிருக்கிறார். நீங்க ரெண்டு பேரும் சீக்கிரமா பேசலனா நான் சீதாவிடமும் அருணிடமும் நேரில் மன்னிப்பு கேட்க போறேன் அப்போதான் இந்த பிரச்சனைக்கு முடிவு வரும் என்று சொல்ல, அதற்கு மீனா அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

எது எப்படியோ இனி வரப் போகிற எபிசோடுகள் எல்லாம் செம அனல்பறக்கும் என்பது மட்டும் உறுதி! சத்யா - ரேகா காதல், சிந்தாமணியின் வில்லத்தனம்... பரபரப்புக்குக் குறை இருக்காது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+