சிறகடிக்க ஆசை: மனோஜால் அதிர்ச்சியில் குடும்பம்! முத்து முடிவு! அசிங்கப்படும் ரோகிணி! வீட்டை விட்டு துரத்தும் விஜயா
சென்னை: விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில், இன்று முத்துவின் அதிரடியான சண்டையால், மனோஜின் சூழ்ச்சியும், பொய்யும் ஒட்டுமொத்தக் குடும்பத்தின் முன் அம்பலமானது. பாசத்தின் பெயரால் விஜயா கொடுத்த பில்டப், கடைசியில் மனோஜுக்குப் பெரிய அவமானத்தில் முடிந்தது.

விஜயாவுக்கு பிடிக்காத பிறந்தநாள்
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பார்வதி பார்வதியின் பிறந்தநாளில் தனியாக ரூமுக்கு அழைத்துச் சென்ற விஜயா, "நீ எதுக்கு அந்த சிவன் கிட்ட சிரிச்சுப் பேசுற? அவர் உனக்கு கேக் வாங்கிக் கொடுக்கிறார்; பூங்கொத்து (Bouquet) வாங்கிட்டு வந்து கொடுக்கிறார். இதெல்லாம் எனக்குப் பிடிக்கல" என்று கோபமாகச் சொல்கிறார். அதற்கு பார்வதி, "நீ நினைக்கிற மாதிரி எதுவும் தப்பா கிடையாது. நாங்க ஃபிரெண்ட்லியா பழகுகிறோம் அவ்வளவுதான்" என்று சொல்லி, விஜயாவைச் சமாதானப்படுத்த முயல்கிறார். ஆனாலும், விஜயா அதையெல்லாம் ஏற்க மறுக்கிறார்.
முத்துவின் வலையில் சிக்கிய சந்தோஷ்
மறுபக்கம், மனோஜின் நண்பர் சந்தோஷ், முத்துவின் ஆட்டோவுக்காகக் காத்திருக்கிறார். முத்துவின் கார் வந்தவுடன், "நீங்க எங்க?" என்று சந்தோஷ் கேட்க, "நான்தான் கார் புக் பண்ணியிருந்தேன்" என்று முத்து சொல்கிறார். சந்தோஷ், "வண்டி என்ன ஆச்சு?" என்று கேட்க, "ரெண்டு நாளா எனக்கு டைம் சரியில்ல. அதனாலதான்..." என்று சந்தோஷ் ஏதோ உளறுகிறார். முத்து, "டைம் சரியில்லைன்னு என் வண்டியில் ஏறுறீங்களா?" என்று கிண்டல் செய்ய, சந்தோஷ் வேறு வழியின்றி ஏறிவிடுகிறார்.
காரில் உட்கார்ந்தவுடன், சந்தோஷ் மனோஜுக்கு போன் போட்டுப் பேச, மனோஜ் கோபமாகக் திட்டுகிறார். "நான் பண்ணது தப்புதான் ப்ரோ" என்று சந்தோஷ் சொல்லியும், "இதுக்கு மேல கடைப் பக்கமே வந்துறாதீங்க. என் பொண்டாட்டி ரொம்ப திட்டுறா" என்று மனோஜ் சொல்கிறார். "உங்க ரெண்டு பேருக்கும் நான் எவ்வளவு செஞ்சிருக்கேன். இந்த விஷயத்துக்காக என்ன வரக் கூடாதுன்னு சொல்றீங்களே" என்று சந்தோஷ் புலம்புகிறார்.
இவர்கள் பேசுவதைக் கேட்ட முத்து, "ஏதோ ஒரு விஷயம் இருக்கும் போல. போட்டு வாங்கித் தெரிஞ்சுக்கலாம்" என்று முடிவெடுக்கிறார். மனோஜ் போனை வைத்தவுடன், முத்து, "என்ன இருந்தாலும் இது மாதிரி நடந்திருக்கக் கூடாது" என்று சொல்ல, "அப்ப மனோஜ் எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டானா?" என்று சந்தோஷ் பதறிப் போகிறார்.
"கூடப் பொறந்தவன் ஆச்சே, எப்படிச் சொல்லாம இருப்பான்?" என்று முத்து சொல்ல, உண்மை வெளியே வருகிறது. "நான் அந்த ராஜா - ராணியை, மனோஜ் தப்பா பேசுற மாதிரி ஒரு வீடியோ வெச்சு மிரட்டுனதனால, நீ அவங்க கிட்ட தப்பா நடந்துக்கிற மாதிரி நடிக்கச் சொல்லி அனுப்பினேன். அவன் ஓவரா நடிச்சிட்டானா என்னனு தெரியல, மூணு பொம்பளைங்க விளக்கமாத்தில வெச்சு அடி வெளுத்துட்டாங்க" என்று சந்தோஷ் உண்மையை உளறிவிடுகிறார்.
வீட்டிற்கு வந்த ராஜாவும் ராணியும்
முத்து, "அப்படியா? என்று கேட்க, அப்படியானால் உனக்குத் தெரியாதா?" என்று சந்தோஷ் கேட்க, "தெரியாது, அதுதான் இப்போ நீ சொல்லிட்ட இல்ல" என்று முத்து சொல்கிறார். "மனோஜ் கிட்ட நான் சொன்னதைச் சொல்லாதப்பா" என்று சந்தோஷ் கெஞ்ச, "சொல்ல மாட்டேன். ஆனா, அவன் ஒரு கதை சொன்னான், அதுக்கு சும்மா விடமாட்டேன்" என்று முத்து சொல்லிவிட்டு, ராஜா - ராணி வீடு எங்க இருக்கு என்று கேட்கிறார்.
சற்று நேரத்தில் வீட்டுக்கு வந்த முத்து, வீட்டில் இருக்கும் அனைவரையும் கூப்பிடுகிறார். அண்ணாமலை "என்னடா ஆச்சு? என்ன விஷயம்?" என்று கேட்க, விஜயா, மனோஜ், ரோகிணி என எல்லாரும் வந்து நிற்கின்றனர். "நேற்று மனோஜ் சொன்னது உண்மைதான். ஒரு பொண்ணைக் கஷ்டப்பட்டு காப்பாத்திருக்கான். அது எவ்வளவு பெரிய விஷயம். அந்த பொண்ணு இப்போ நேர்ல வந்து நன்றி சொல்றதுக்காக வந்திருக்கு" என்று முத்து பில்டப் கொடுக்கிறார். விஜயாவும் "நீங்கதான் யாரும் நம்பல" என்று பில்டப் கொடுக்கிறார்.
முதலில் சந்தோஷ் வந்து நிற்க, மனோஜ் கோபமாக, "நீ இங்கே எதுக்கு வந்திருக்க?" என்று கேட்க, "கொஞ்சம் பொறுமையா இருடா" என்று சந்தோஷ் சொல்கிறார். உடனே கொஞ்ச நேரத்தில் ராஜாவும் ராணியும் வந்து நிற்க, மனோஜ் மற்றும் ரோகிணி அதிர்ச்சி அடைகின்றனர்.
உடைந்த மனோஜின் உண்மை முகம்
விஜயா, "இவ தானே வீட்ல அன்னைக்குச் சமைக்கிறேன்னு வந்தவ" என்று கேட்க, ரோகிணி உடனே ஓடி வந்து விஜயாவின் பக்கத்தில் நின்று, "இவங்கதான் பணத்தை திருடி இருக்காங்க. அதுவும் இல்லாம மனோஜை மிரட்டிப் காசு, பொருள்னு வாங்கிக்கிட்டு இருக்காங்க" என்று சொல்லி முந்துகிறார். விஜயா, "ஓ, இதுவேரயா?" என்று கேட்கிறார்.
மனோஜ், "இவங்களை எதுக்குடா இங்க கூட்டிட்டு வந்த?" என்று கேட்க, "உன்னோட வீர தீர செயல் சொல்றதுக்குதான்" என்று முத்து சொல்கிறார். "என்ன, வந்ததுல இருந்து புரியாமலே பேசிக்கிட்டு இருக்கீங்க?" என்று மீனா கேட்க, "முதல்ல நான் தெளிவா சொல்றேன். இவங்க ரெண்டு பேரு எப்படி இங்க வந்தாங்க, அவங்களை எப்படி கூட்டிட்டு வந்தேன்றத முதல்ல சொல்றேன்" என்று முத்து ஆரம்பிக்கிறார்.
முத்துவும் சந்தோஷும் ராஜா ராணி வீட்டுக்குப் போக, ராஜா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். ராணி வந்தவுடன், "நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?" என்று கேட்க, "நான் உங்களுக்கு நியாயம் வாங்கிக் கொடுக்கத்தான் வந்திருக்கேன். எங்க அண்ணன் உங்க கிட்ட தப்பா நடந்து இருக்கான். அதுக்கு உங்களுக்கு நியாயம் கிடைக்க வேணாவா? அவன் எவ்வளவு பெரிய தப்பு பண்ணிக்கிட்டு இருக்கான். எங்க அப்பா அம்மாவுக்குத் தெரிய வேணாவா? நீங்க ரெண்டு பேரும் வந்து எங்க அப்பா அம்மா கிட்ட சொல்லுங்க. அவனுக்குப் போலீஸ்ல பிடிச்சுக் கொடுத்து ஜெயில்ல போட்டு விடலாம்" என்று முத்து சொல்கிறார்.
ராணி, "அதெல்லாம் வேணாம், மன்னிச்சு விட்டுடலாம்" என்று சொல்ல, "அது எப்படிம்மா விட முடியும்? உன்கிட்ட தப்பா நடக்கப் பார்த்திருக்கான். எந்த ஒரு பொண்ணும் இந்த விஷயத்துல பொய் சொல்ல மாட்டா" என்று முத்து சொல்கிறார். இருவரும் வர மறுக்க, பொறுமையாகப் பேசிக் கொண்டிருந்த முத்து, கோபமாகி, "உனக்கு ரெண்டு நிமிஷம் டைம் கொடுக்கிறேன். சாப்பிட்டு வந்தேனா, கூட்டிட்டுப் போய்க் கூட்டிட்டு வந்துருவேன். இல்லைன்னா என்ன கைய முறுக்க" என்று மிரட்ட, இருவரும் பயந்து வந்து விடுகின்றனர்.
விஜயாவின் அதிர்ச்சி
இந்த விஷயத்தைக் கேட்ட வீட்டில் இருக்கும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ரவி, "அப்ப இந்த பொண்ணு வீட்டுக்குப் போய்தான் அவன் எல்லார் கிட்டயும் அடி வாங்கினானா?" என்ற உண்மையைச் சுட்டிக் காட்ட, முத்துவும் "ஆமா" என்று சொல்கிறார். "என்ன வேலை பார்த்து வச்சிருக்க மனோஜ்?" என்று அண்ணாமலை கேட்க, விஜயா, "அவன் அப்படியெல்லாம் பண்ணி இருக்க மாட்டான்" என்று சொல்கிறார். "அவன் முழிக்கிறத பார்த்தாலே தெரியலையா?" என்று ரவி கேட்கிறார்.
குடும்பத்தில் இருக்கும் அனைவரும் மனோஜைப் பார்த்து, "நீங்க எதுக்கு இப்படி பண்ணீங்க?" என்று கேட்க, "நான் தப்பா எல்லாம் நடந்ததில்ல. உண்மையை வரவைக்கத்தான் இப்படிப் பண்ணேன்" என்று சொல்லிச் சந்தோஷத்தை இழுத்துவிடுகிறார். "சொல்லுங்க ப்ரோ" என்று மனோஜ் கேட்க, "நான்தான் இந்த ஐடியாவைக் கொடுத்தேன்" என்று சந்தோஷ் சொல்கிறார். "அவன் சொன்னா உனக்கு எங்க போச்சு அறிவு?" என்று விஜயா கேட்கிறார்.
உடனே ரோகிணி, "மனோஜ் மேல எந்தத் தப்பும் இல்ல. இவங்கதான் பொய் சொல்றாங்க" என்று சொல்ல, ராணி, "அவர்தான் எங்ககிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணினாரு" என்று அடிவாங்கியதைச் சொல்கிறார். அதையும் விஜயா நம்பவில்லை. அப்போதுதான், ராணியின் கணவன், மனோஜ் பேசிய வீடியோவை போட்டுக் காட்டுகிறார்.
அந்தப் பெண்ணிடம் மனோஜ் தப்பா நடக்க முயற்சி செய்தது, அங்கிருந்த எல்லாரும் பார்த்த உண்மை என்று முத்து சொல்லி, மனோஜின் முகத்திரையைக் கிழிக்கிறார். இறுதியாக, முத்து,இனிமேல் இதான் உன் மாமியார் வீடு" என்று மனோஜின் முகத்தில் அடித்தது போலச் சொல்கிறார். இதைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் குழந்தை பற்றி சரவணன் சொன்ன வார்த்தை! அடி வெளுத்து வாங்கிய கோமதி! பாண்டியன் எடுத்த முடிவு -
ராத்திரி நேரத்து பூஜையில்.. விஜய் டிவி நிகழ்ச்சியில் டிஸ்கோ சாந்தி போட்ட டான்ஸ்! அசந்து போன ரம்பா! -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்: முத்துவேல் பற்றி தெரிய வந்த பெரிய உண்மை.. அதிர்ச்சியில் கதிர்! உடையும் குடும்பம் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை












Click it and Unblock the Notifications