Siragadikka aasai Promo: தினேஷ் பற்றிய ரகசியத்தை உடைத்த முத்து! அதிர்ச்சியில் ரோகிணி! அம்பலமான உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செப்டம்பர் 30-ம் தேதியில் இருந்து அக்டோபர் ஐந்தாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மனோஜ்க்கு பிளாக்மெயில் லெட்டர் எழுதிக் கொண்டிருப்பது ரோகிணியின் முன்னாள் பி ஏ தினேஷ் என்ற உண்மையை முத்து கண்டுபிடித்திருக்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரத்தில் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். ஒரு பக்கத்தில் முத்துவின் செல்போனில் இருக்கும் சத்யா திருடிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர வேண்டும் என்று சிட்டி சொல்லி இருக்கும் நிலையில் அந்த வீடியோவை ரோகிணியும் பார்த்து இருக்கிறார். ஆனால் இன்னும் அவர் சோசியல் மீடியாவில் போஸ்ட் போடாமல் இருக்கிறார்.

siragadikka aasai serial vijay tv

அதே நேரத்தில் ரோகிணியின் பழைய பிஏ தினேஷ் ரோகிணிக்கு மேலும் நெருக்கடி கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ஏற்கனவே ரோகிணியை மிரட்டி கொண்டு இருந்த தினேஷ் இப்போது மனோஜை மிரட்டி கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் கடிதம் எழுதி மிரட்டிய தினேஷ் இப்போது நேரடியாகவே வந்து மிரட்டி இருக்கிறார். அதிலும் நான் மனோஜ்க்கு கடிதம் எழுதியது முத்து தான் என்று அவர் கோர்த்து விட இப்போது தினேஷுக்கு அது சிக்கலாக மாறி இருக்கிறது.

சாமியார் வேஷத்தில் இருந்த தினேஷ் மனோஜிடம் முத்து தான் உங்களுக்கு கடிதம் எழுதி என்னிடம் தந்து விட்டு போனது என்று சொன்னதை நம்பி மனோஜ் வீட்டில் பிரச்சனை செய்திருந்தார். இதற்கு முத்து முதலில் நான் எந்த லெட்டரும் எழுதவில்லை, பிரச்சனை செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில் பிறகு அது யார் என்று நானே கண்டுபிடிக்கிறேன் என்று சொல்லி இருந்தார்.

siragadikka aasai serial vijay tv

அதோடு எனக்கு ரோகிணி மீது தான் சந்தேகமாக இருக்கிறது என்றும் சொல்லி இருக்கிறார். இப்படியான நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது முத்து நான் மனோஜ்க்கு லெட்டர் எழுதி மிரட்டி கொண்டு கொண்டிருப்பவனை கண்டுபிடிச்சிட்டேன் என்று சொல்கிறார்.

அதற்கு மீனா யாருங்க அப்படி லெட்டர் அனுப்புறது என்று கேட்க அதற்கு முத்து கோவில்ல மனோஜ்க்கு கல்யாணம் நடந்துச்சுல்லப்பா அப்பதான் நான் அவனை முதல் தடவ பார்த்தேன். அவன் என் காரிலேயே உட்கார்ந்துட்டு பொண்ணுங்கள பத்தி தப்பு தப்பா பேசிட்டு இருந்தான். அப்போ நான் தான் அவனை அடிச்சு விரட்டி விட்டேன். அதற்குப் பிறகு ரெண்டு மாசத்துக்கு முன்பு அவனை நான் ரோட்டில் பார்த்தேன். ஒரு வயசான அம்மாவ வண்டியில இடிச்சுட்டு நிக்காம போயிட்டான்.

siragadikka aasai serial vijay tv

அப்போ நான் தான் அவனை விரட்டி பிடிச்சு போலீசில் பிடிச்சு கொடுத்தேன் என்று சொல்ல, அதற்கு மீனா இவர் கூட ஒருத்தருக்கு பிரச்சனை என்றால் எதற்கு அந்த ஆளு இவரோட அண்ணனுக்கு லெட்டர் கொடுக்கணுமா? என்று கேட்க, அதற்கு முத்து எனக்கும் அது மட்டும் தான் புரியல, நான் அந்த பொறுக்கிய மாட்டிவிட்டு அவன் எதுக்கு இந்த ஓடு காலியை பயமுறுத்துறான்னு தெரியல.. எங்கையாவது அவன் மாட்டுவான்.

siragadikka aasai serial vijay tv

அப்போ அவனை தூக்கிட்டு போயி ரெண்டு போடு போட்டேன்னு வச்சுக்க அப்போ எதுக்கு இவன் இதெல்லாம் பண்ணுனான்னு எல்லாம் சொல்லிடுவான் என்று சொல்ல, ரோகிணி அதிர்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். இதனால் அடுத்த வாரத்தில் சிட்டியிடம் சொல்லி தினேஷ் கதையை முடிப்பதற்காக முத்துவை ரோகிணி மாட்டிவிட்டு இந்த பிரச்சனையை திசை திருப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பு ஒருவேளை தினேஷை முத்து கண்டுபிடித்து அவரிடம் இருந்து உண்மையை தெரிந்து கொண்டால் சீரியல் சுவாரசியமாக இருக்கும். என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+