சிறகடிக்க ஆசை: முத்து காரில் கிரிஷ்.. அருண் செய்த செயல்! அதிர்ச்சியில் ரோகிணி! செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி, மக்கள்கிட்ட நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் சீரியல் 'சிறகடிக்க ஆசை'. முத்து, மீனா, ரோகிணி, மனோஜ்னு ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு நல்லாவே பரிச்சயம். இன்னைக்கு எபிசோடில் நடந்த ட்விஸ்ட்டெல்லாம், அடுத்த எபிசோடைப் பார்க்கிறதுக்கு ஆர்வத்தைத் தூண்டி விட்டிருக்கு. வாங்க, இன்னைக்கு என்ன நடந்ததுன்னு பார்க்கலாம்.

முத்துவின் காரில் மர்மம்
அதாவது, ரோகிணி - மனோஜோட பையன் க்ரிஷ், அவன் மேனேஜர் திட்டுனதை மனசுல வெச்சுட்டு, அங்கிருந்து வேகமா ஓடி வர்றான். வாட்ச்மேன்கிட்ட மாட்டாம, மந்திரிச்ச கோழி மாதிரி ஓடி வந்தவன், சரியா முத்துவோட காரை பார்க்குறான். முத்து, காரை நிறுத்திட்டு லக்கேஜை இறக்கி வைத்து, டிக்கியை சரியா மூடாமப் போற நேரத்துல, க்ரிஷ் அந்த டிக்கிக்குள்ளேயே போய் படுத்துக்கறான். முத்து அதைக் கவனிக்காம, மறுபடியும் டிக்கியை மூடிட்டு அங்கிருந்து கிளம்பறார்.
சரி, காரை எடுத்துட்டு எங்க போறார்னு பார்த்தா, நம்ம மீனாவுக்குப் போன் போட்டு, "இன்னைக்கு நாம வெளியில போய் சாப்பிடலாம்"னு சொல்லி, அவளைக் கூப்பிடப் போறார். பூக்கட்டுற அக்கா கடையில மீனா இருக்க, அங்க வந்த முத்து, மீனாவை அழைச்சிட்டு காரில் கிளம்புறார்.
முத்துவும் மீனாவும் காரில் வந்துட்டு இருக்கும்போது, ஒரு இடத்துல போலீஸ் நிறுத்தி கார்களைச் செக் பண்றாங்க. "என்ன விஷயம்?"னு முத்து விசாரிக்க, "டெட் பாடிகளை காரில் வைத்து மறைச்சு எடுத்துட்டு போறதா தகவல் கிடைச்சுருக்கு. அதனாலதான் சோதனை"னு சொல்றாங்க போலீஸ்காரங்க.
முத்துவும் மீனாவும் பேசிக்கிட்டு இருக்கும்போதே, எங்கே நம்ம அருண் நம்மள மாட்டி விட்டுடுவானோன்னு பாக்குறார். பார்த்தா, அருண் அவங்க காரை கவனிச்சு, "செக் பண்ண வேணாம், விட்டுடுங்க"னு போலீஸ்காரர்கிட்ட சொல்றான். இதைப்பார்த்த முத்து, "அவன் எதுக்கு இப்படிப் பண்ணிக்கிட்டு இருக்கான்? அவனுக்கு என்ன ஆச்சு?"னு ஆச்சரியப்படுறார்.
ரோகிணியின் டென்ஷனும், ஸ்கூல் கொடுத்த ஷாக்கும்
மறுபக்கம், மனோஜ், ரோகிணி ரெண்டு பேரும் ஷோரூம்ல வேலை பார்த்துட்டு இருக்காங்க. அப்போ, ரோகிணியோட ஃப்ரெண்ட் மகேஸ்வரிக்கு போர்டிங் ஸ்கூலில் இருந்து ஒரு போன் வருது. க்ரிஷ் ரத்தம் வர அளவுக்கு யாரையோ பென்சிலால குத்திட்டு ஸ்கூலை விட்டு ஓடி போயிருக்கான் அப்படின்னு சொல்றாங்க. இதைக் கேட்ட ரோகிணி, பதட்டமாகி, "இவன் எதுக்கு இப்படி பண்றான்?"னு சொல்லிவிட்டு, மகேஸ்வரியை அழைச்சுட்டு, "நம்ம போய் விசாரிச்சிட்டு வந்துடலாம்"னு கிளம்புறாங்க.
மனோஜிடம், "எனக்கு ஒரு முக்கியமான க்ளையன்டைப் பார்க்கப் போகணும். நான் ஷோரூமை விட்டுப் போயிட்டு வரேன்"னு சொல்லி பொய் சொல்லி கிளம்பறாங்க. ரெண்டு பேரும் போர்டிங் ஸ்கூலுக்குப் போய் இறங்குனதும், ரோகிணி மகேஸ்வரியை மட்டும் உள்ளே அனுப்பி விசாரிக்கச் சொல்றாங்க. "ஏங்க, உங்களை நம்பி அனுப்பி வச்சா இப்படி பண்றீங்க?"னு மகேஸ்வரி கேட்க, ஸ்கூல் நிர்வாகிகள், "அந்தப் பையன் ரொம்ப அடமன்ட்டா இருக்கான். அவனுக்கு இங்க இருக்கவே பிடிக்கல"னு சொல்றாங்க. அதுமட்டுமில்லாம, "நீங்க போலீஸ்ல எல்லாம் கம்ப்ளைன்ட் பண்ணாதீங்க, ஸ்கூல் பேரு கெட்டுப்போயிடும். நாங்களே தேடி கண்டுபிடிச்சிடுவோம்"னு சொல்றாங்க.
இனி, க்ரிஷ் எங்க போனான், முத்துவோட காரை விட்டு இறங்குவானா, அருண் ஏன் முத்துவுக்கு உதவினான், ரோகிணி என்ன முடிவு எடுப்பாங்கன்னு தெரியல. அடுத்தடுத்த எபிசோடுகள் விறுவிறுப்பா இருக்கும்னு எதிர்பார்க்கலாம்.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications