சிறகடிக்க ஆசை: முத்துவை ஏமாற்றிய ரோகிணி! செல்வத்திடம் கிடைக்கும் ஆதாரம்! ஏமாற்றத்தில் மனோஜ்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில், விஜயா, ரோகிணி, சுருதி ஆகிய பெண்கள் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்ற நிலையில், வீட்டில் உள்ள ஆண்கள் சமைத்து, ஒரு நாள் முழுவதும் செய்த அலப்பறைகள் இன்று சுவாரசியமானத் திருப்பங்களுடன் முடிந்துள்ளது. ரோகிணியின் பிளானால், ஒரு பக்கம் டென்ஷன் குறைந்தாலும், வீட்டில் சமையல் பஞ்சராகி போனது தான் இன்றைய எபிசோடின் ஹைலைட்!

வீட்டில் ஆண்களின் சமையல்
பெண்கள் வீட்டில் இல்லாத காரணத்தினால், இன்று சமையல் வேலையை முத்து, மனோஜ், ரவி மற்றும் அண்ணாமலை ஆகியோர் சேர்ந்து செய்திருக்கின்றனர். ஆளுக்கு ஒரு வேலையைப் பிரித்துக்கொண்டு, சமையல் வேலையைச் சிரமப்பட்டு முடித்திருக்கின்றனர்.
ரோகிணியின் டென்ஷன் நீங்கியது
வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால், ரோகிணியின் முதல் திருமணத்தை தெரிந்து கொள்ள இருந்த சவாரியை தவிர்க்க வேண்டிய சூழல் வந்தது. அதனால், முருகன் சவாரி கொடுத்த ரோகிணியின் உறவினர்களை செல்வத்தை அழைத்துச் செல்லுமாறு முத்துச் சொல்லுகின்றார். அதுவும் இன்று ஒருநாள் மட்டும் தான். நாளை தான் வந்து விடுவதாக முத்து சொல்லி இருக்கிறார்.
ரோகிணியின் நிம்மதி
ரோகிணியும் அவருடைய அம்மாவிடம் போன் பண்ணி விசாரித்து முத்து சவாரிக்கு போகல என்பதை தெரிந்து கொண்டு, தான் பிளான் போட்டதுப்படியே நடந்து விட்டது என்றும், இன்னைக்கு ஒரு நாள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம் என்றும் கூறுகின்றார்.
உறவினர்களின் திடீர் விசிட்
வீட்டில் சமையல் வேலை முடிந்ததும், முத்து, மனோஜ், ரவி மற்றும் அண்ணாமலை ஆகியோர் ஒன்றாக அமர்ந்து சாப்பிட இருந்தபோதுதான் எதிர்பாராத திருப்பம் நிகழ்ந்தது. சரியாக அந்த நேரம் பார்த்து, அங்கு அண்ணாமலையின் உறவினர்கள் வந்து கல்யாண பத்திரிகை வைக்கின்றார்கள்.
சந்தோஷ பேச்சு
அப்போது அங்கிருந்த அண்ணாமலையின் பிள்ளைகளிடம், "உங்க மூன்று பேருக்கும் கல்யாணம் ஆகி ரொம்ப நாள் ஆகிவிட்டது எப்போது உங்க வீட்டில் விசேஷம்?" என்று உறவினர்கள் கேட்கின்றனர். அதற்கு அண்ணாமலை எல்லாம் நடக்கும் போது நடக்கும் என்று சொல்கிறார். அதன் பின்பு அவர்களை சாப்பிடுமாறு அண்ணாமலை சொல்ல, மனோஜ் வேண்டாம் என்று தடுக்கின்றார். ஆனாலும் அண்ணாமலை அவர்களைச் சாப்பிட வைத்து அனுப்புகின்றார். இதனால், "சாப்பாடு முடிந்து விட்டது!" என்று மனோஜ் புலம்பி தள்ளுகின்றார். ஆண்களின் சமையலில், சாப்பாடு பற்றாக்குறையாகி போனது பரிதாபம்!

சத்யா - சிந்தாமணி மகள் சந்திப்பு
இறுதியில், சிந்தாமணியின் மகளோடு சத்யா காபி குடிக்கின்றார். இந்தப் புதிய கதைக்களமும் சுவாரசியமாக இருந்தது. அப்போது சத்யா தன்னுடைய ஃபேமிலி பேக்ரவுண்ட் பத்தி சொல்லுகின்றார். அதேபோல, சிந்தாமணியின் மகள் தன்னுடைய அம்மா, அப்பா பிரிந்த கதையை சொல்ல முனைய, சத்யா அதை வேண்டாம் என்று சொல்லுகின்றார். இதனால், சிந்தாமணியின் மகள் சத்யா மீது இம்ப்ரஸ் ஆகின்றார்.
வீட்டில் ஆண்கள் சமைத்தது, மனோஜுக்குச் சாப்பாடு பஞ்சரானது, மற்றும் ரோகிணி தற்காலிகமாக டென்ஷன் இல்லாமல் நிம்மதி அடைந்தது என இந்த வார எபிசோட் எதிர்பாராதக் கலகலப்புடன் முடிவடைந்துள்ளது. அடுத்த எபிசோடில் பாண்டிச்சேரி சென்ற பெண்கள் என்ன செய்கிறார்கள்? அல்லது செல்வம் ரோகிணி பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications