Siragadikka Aasai serial promo: ரோகிணி தான் க்ரிஷ் அம்மா கல்யாணி! குடும்பத்தோடு மீனாவிடம் சிக்கிட்டாங்க!
சென்னை: விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல், இப்போது ரோகிணியின் 'மெகா ரகசியத்தால்' அனல் பறந்து கொண்டிருக்கிறது! வீட்டில் இருந்த ஆம்பளைங்க கூத்தடித்தது ஒருபக்கம் என்றால், முத்துவின் காரில் ஏறிய ரோகிணியின் முதல் கணவர் குடும்பம், மொத்த ரகசியத்தையும் உடைக்கப் போகிறது போல தெரிகிறது.

ஆண்கள் கிளப் Vs பெண்களின் சுற்றுலா
மீனா, ரோகிணி, ஸ்ருதி, விஜயா என வீட்டின் பெண்கள் எல்லாரும் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா கிளம்பிப் போனதால், இந்த வார எபிசோடுகளில் வீட்டில் இருந்த ஆம்பளைகள் (முத்து, மனோஜ், ரவி, அண்ணாமலை) செம ஜாலியாக இருந்தனர். வீட்டு வேலைகளை செய்த பின்னர், இரவில் மாடியில் முத்து, மனோஜ், ரவி ஆகியோர் சரக்கடித்துக் கொண்டு சின்சிலாப்பாக அரட்டை அடித்தார்கள். அந்த களேபரத்தில் அண்ணாமலையும் வந்து ஐக்கியமாகி, நால்வரும் ஒன்றாக படுத்து கொண்டு பாடல் பாடி மகிழ்ந்தனர்.
ரோகிணியின் பழைய வாழ்க்கை
இந்த கொண்டாட்டங்களுக்கு மத்தியில் தான், ரோகிணியின் முதல் கணவர் சேகரின் அண்ணன் மற்றும் அவரது மனைவி சென்னைக்கு வந்தனர். இவர்களின் வருகை தான் மொத்தக் கதையின் ட்விஸ்ட்! தங்கள் மனைவிக்கு செக் அப் முடிந்துவிட்டதாகவும், ஒரு மாதத்திற்கு பின் வரச் சொல்லி இருக்கிறார்கள் என்றும் சொல்லிவிட்டு, நாளை ஒரு நாள் சென்னையில் தங்கி, கிரிஷை பார்க்க வருவதாக ரோகிணியின் அம்மா லட்சுமியிடம் சொல்கிறார் அந்த அண்ணன்.
கோவில் பிளான்
ரோகிணிக்குத் தெரியாமல் கோவிலில் வைத்து கிரிஷை அவர்களுக்குக் காட்ட லட்சுமி முடிவெடுக்கிறார். இவர்கள், வேறு யார் காரிலும் வரவில்லை, நம்ம முத்துவின் காரில் தான் கிரிஷை பார்க்க வருகிறார்கள்! "சென்னையில் எங்க போகணும்னாலும் சொல்லுங்க, நான் சுத்திக் காட்டுறேன். புது ஊருக்கு வந்து 4 இடங்களை பார்த்தாலே மனசுல இருக்கிற கவலையெல்லாம் குறைந்துவிடும்" என்று முத்துத் தன் இயல்பான பாசத்தை கொட்டுகிறார்.
முத்து கேட்ட கேள்வி
அப்போது அவர்கள், "எங்க வாழ்க்கையிலும் நாங்கள் ஒரு பாவத்தை செய்துவிட்டோம். அதனால் தான் எங்களுக்குக் குழந்தையே இல்லை" என்று சோகமாகக் கூற, முத்து வழக்கம் போலத் தன் நல்ல மனதுடன் ஒரு யோசனையைச் சொல்கிறார். "நீங்க யாரையாவது தத்தெடுத்துக்கூட வளர்க்கலாமே சார்?" என்று முத்து சொல்ல, அதற்கு அவர்கள், "என் தம்பி பையன் இருக்கான்" என்று பேசிக்கொண்டே வருகிறார்கள்.
முத்துவுக்கு கொஞ்சமும் தெரியாது, தனது வண்டியில் ஏறி வருபவர்கள் தான் தன் அண்ணன் மனைவி ரோகிணியின் முதல் கணவரின் அண்ணன் என்று!
சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ
இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கு என்று வெளியே அன்ன ப்ரோமோவில் தீபாவளி கொண்டாட குடும்பத்தினர் அனைவரும் அண்ணாமலையின் அம்மா ஊருக்குச் செல்ல, அங்கேதான் ரோகிணியின் 2வது ரகசியம் உடைபடுகிறது. ரோகிணி, தன் தந்தைக்குத் திதி கொடுக்க அந்த ஊர் அருகில் இருக்கும் கோவிலுக்குச் செல்கிறார். மீனாவும் அங்கே வர, அங்கு கிரிஷ், லட்சுமி ஆகியோருடன் ரோகிணி அமர்ந்திருப்பதைப் பார்த்துவிடுகிறார்!
முழு உண்மை
அப்போது லட்சுமி, ஐயரிடம், "என்னோட ஒரே பொண்ணு கல்யாணி இவதான்" என்று சொல்வதைக் கேட்டு மீனா ஷாக் ஆகிறார். பின்னர் ரோகிணியை தனியே அழைத்துச் சென்று, "இத்தனை நாள் எங்களையெல்லாம் ஏமாத்துனியா?" என 'பளார்' என ஒரு அறைவிடுகிறார் மீனா!
இதன் மூலம், ரோகிணியின் முதல் திருமணம் மற்றும் கிரிஷ் தான் அவளது மகன் என்ற இரண்டு ரகசியங்களும் மீனாவிற்குத் தெரிந்து விட்டது. இனி வரும் எபிசோடுகளில், ரோகிணிக்கு எதிராக மீனா செய்யும் 'தரமான சம்பவம்' என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது!
-
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications