சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் வேதனை.. அசிங்கப்படுத்துறாங்க! கலையிலும் அரசியல் செய்றாங்க என வருத்தம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் செல்வம் கேரக்டரில் நடிகர் பழனியப்பன் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் பிரபலமடைந்தவர் தான். இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வேதனையான வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்கள்.
தற்போதைய சூழ்நிலையில் எல்லா இடங்களிலும் அரசியல் புகுந்து விட்டது. ஒருவர் பிரபலமாக வேண்டும் என்றால் அடுத்தவர்களை தங்களுடைய சுய லாபத்திற்காக வியாபார தந்திரத்தில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதிலும் சமூக வலைதளத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சிலர் அதை வைத்து அடுத்தவர்களை ஏமாற்றி பிரபலமாகுகிறார்கள்.

இந்த மாதிரி கும்பலிடம் ஏமாத்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் பழனியப்பன் தைரியமாக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இது அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது. சமீபத்தில் அவருக்கு ஒரு நிகழ்ச்சியில் அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் இவர் யார்? இவர் எந்த சீரியலில் நடித்திருக்கிறார்? இவர் செய்த சாதனை எதுவும் சொல்லப்படாமல் ஒரு அவார்ட் கொடுத்திருக்கிறார்கள்.
பொதுவாக கலைஞர்கள் அவர்களுடைய திறமைக்கான அங்கீகாரத்தை தான் விரும்புவார்கள். வருமானம் எல்லோருக்கும் முக்கியமானதாக இருந்தாலும் தங்களுடைய திறமைக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பது எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கும். அதுபோலத்தான் நடிகர் பழனியப்பன் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் சமீபத்தில் எனக்கு ஒரு பங்க்ஷனில் அவார்ட் தந்தாங்க. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினவங்களுக்கும் நான் யாருன்னு தெரியல, அந்த நிகழ்ச்சியை ஆர்கனேஷன் பண்ணுனவர்களுக்கு நான் யாருன்னு தெரியல. ஆனா எதற்காக என்னை கூப்பிட்டு அவார்டு கொடுத்தாங்கன்னு அங்க இருக்கிற யாருக்குமே புரியலை.
இது எதுக்கு பண்ணுறாங்க? அவார்ட் கொடுக்கிறதிலும் அரசியல் இருக்கிறது. அவார்டு கொடுக்கிறோம் என்று ஒரு அறிவிப்பு வெளியிட்டு ஸ்பான்சர் பெற்று விடுகிறார்கள். அதற்கு பிறகு ஒரு பத்து பேருக்கு அவார்ட் கொடுக்கிறார்கள். பிறகு யார் என்று தெரியாமலே ஒரு சிலருக்கு அவார்டை கொடுக்கிறார்கள். இந்த மாதிரி அவார்டை பெறுவது எனக்கு வேதனையாக இருக்கிறது. இனி இந்த மாதிரி அவார்டு எனக்கு தேவையே இல்லை என்று அந்த வீடியோவில் வேதனையோடு பேசியிருக்கிறார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications