விஜய்யை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? ஜூலியை கடுமையாக விமர்சித்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்
சென்னை: வேலூர் கூட்டத்தில் நடிகர் விஜய் பேசிய "குட்டி ஸ்டோரி" அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து விவாதத்தை கிளப்பி வருகிறது. அந்த உரையில் ஜல்லிக்கட்டு காளையை எடுத்துக்காட்டாக கூறியிருந்தது பெரும் பேசுபொருளானது. இதற்கு எதிர்வினையாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜூலி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அந்த வீடியோவில் ஜூலி பேசும்போது, "அண்ணே நீங்கபாட்டுக்கு பேசிட்டு போயிருவீங்க. உங்க ரசிகர்கள் ஜல்லிக்கட்டு காளை முன்னாடி புல்லுகட்டோடு போய் நின்னா அசம்பாவிதம் நடந்துரும். அதற்கு நீங்கள் பொறுப்பு ஏத்துக்குவீங்களா? இறந்து போன லிஸ்ட் ஐம்பதோடு இருக்கட்டும், 500 ஆக்கிடாதீங்க. இன்னொரு முறை ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் நடத்த திராணி இல்லை," என்று கடுமையாக கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு ஜூலியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கருத்து மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் (Siragadikka Aasai serial Actor Palaniyappan) செல்வம் கேரக்டரில் நடித்துவரும் நடிகர் பழனியப்பனும் ஜூலிக்கு அறிவுரை கூறும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
பழனியப்பன் தனது வீடியோவில், "அரை மணி நேரம் பேசின அந்த மனுஷனுக்கு பேச தெரியலையா? அந்த மனுஷன் கூட நீங்க நடிச்சிருக்க வாய்ப்பே இல்ல. ஆனா விஜய் எத்தனை பக்க ஸ்கிரிப்ட் கொடுத்தாலும் உடனே நடிக்கக் கூடியவர். எவ்வளவு பெரிய லெந்தான டான்ஸ் ஸ்டெப்பா இருந்தாலும் அதை அப்படியே ஆடும் கற்பூர புத்தி உள்ளவர். இதெல்லாம் சினிமாக்காரர்களுக்கு தெரியும்," என்று முதலில் விஜய்யின் தொழில்முறை திறமையை பாராட்டுகிறார்.
அவர் தொடர்ந்து, "நீங்க பேசுறது தப்பு இல்ல. ஆனா ஜல்லிக்கட்டு நீங்க போராடி தான் ஜல்லிக்கட்டு கிடைச்ச மாதிரி ஒரு வார்த்தையை விட்டிங்கம்மா. அந்த போராட்டத்திற்காக எத்தனை ஆட்டோ டிரைவர்ஸ், எத்தனை ஸ்டூடன்ட், எத்தனை மாணவர்கள், தமிழ் திரைப்பட குழுவினர்கள்-நாங்க எல்லாருமே சேர்ந்துதான் போராடனோம்.
லட்சக்கணக்கான கைகள் தூங்கியதால் அந்த போராட்டம் வெற்றி பெற்றது. ஆனா ஏதோ நீங்களே போராட்டம் பண்ணி அந்த ஜல்லிக்கட்டை வாங்கின மாதிரி பேசுறீங்க," என்று குற்றம் சாட்டுகிறார்.
மேலும், "நீங்க அரசியல் பேசுங்க அது தப்பு இல்ல. ஆனா விஜய் பற்றி பேசுறதுக்கு நீங்க என்ன சாதிச்சு இருக்கீங்க? ஒருத்தவங்களை பற்றி பேசணும்னா, நாம அவங்கள விட கொஞ்சமாவது சாதிச்சிருக்கணும். நான் இப்ப விஜய் பற்றி பேசுறதா இருந்தா கூட, நான் ஏதாவது சாதிச்சிருந்தா தான் பேச முடியும்," என்று கூறியுள்ளார்.
அரசியல் குறித்து பேசும்போது, "பொதுவா அரசியலுக்கு ஒருத்தர் வந்துட்டா அவரைப் பற்றி யாரு வேணாலும் எப்படி வேணாலும் பேசலாம் என்று நினைக்கிறார்கள். இது பாப்புலர் ஆகுவதற்காக ஒரு ஸ்டாண்டு தான். உங்களுக்கு இப்பதான் கல்யாணம் முடிஞ்சு இருக்கு. கழுத்துல தாலி கூட புதுசா தொங்குது. நீங்க உங்க திருமண வாழ்க்கையை பாருங்க," என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், "தாவெகாவில் இருக்கிறவங்க எல்லாம் மைனர் என்று சொல்லி இருக்கீங்க. ஆனா அதுல லட்சக்கணக்கான பேருக்கு ஓட்டு இருக்குமா? இதை சொல்றதால நான் தாவெகாக கட்சிக்காரன்னு நினைச்சுக்காதீங்க. நான் அப்படியெல்லாம் இல்ல. ஒரு சக நடிகனுக்காக தான் நான் குரல் கொடுத்து இருக்கேன்," என்று தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் பெருமளவில் பகிர்ந்து வருகின்றனர். ஒருபுறம் ஜூலியின் கருத்துக்கள் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், மறுபுறம் பழனியப்பனின் பதில் வீடியோ புதிய சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
விஜய் அரசியலில் இறங்கியதிலிருந்து, அவரது ஒவ்வொரு பேச்சும், அதனைச் சுற்றியுள்ள எதிர்வினைகளும் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக ஜல்லிக்கட்டு போன்ற பிரச்சனைகள் தொடர்பாக வரும் கருத்துக்கள் அதிக உணர்ச்சியை தூண்டும் நிலையில் உள்ளன.
மொத்தத்தில், வேலூர் கூட்டத்தில் தொடங்கிய "குட்டி ஸ்டோரி" சர்ச்சை, ஜூலியின் விமர்சனம், அதற்கு பதிலாக பழனியப்பன் வெளியிட்ட வீடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் தீவிர அரசியல் மற்றும் உணர்ச்சி சார்ந்த விவாதமாக மாறியுள்ளது. 2026 தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் சூழல் சூடு பிடித்து வரும் நிலையில், இந்த விவகாரம் மேலும் எந்த திசைக்கு செல்லும் என்பது அரசியல் வட்டாரங்களில் ஆர்வத்துடன் கவனிக்கப்படுகிறது.
-
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு












Click it and Unblock the Notifications