சிறகடிக்க ஆசை நடிகர் இனி வெள்ளி திரையில்.. அதிரடியாக மாறிய கதாநாயகன்.. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தனக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருப்பதாக இணையத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களிடம் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கிறார். சிறகடிக்க ஆசை சீரியல் இப்போது டிஆர்பியின் முக்கிய இடத்தில் இருக்கும் நிலையில் இன்றைய காட்சிகள் வேற லெவலில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

அதாவது ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே பல நாட்களுக்குப் பிறகு மனோஜ் வேலைக்கு போகாமல் பார்க்கில் சுற்றிக்கொண்டு இருப்பது முத்துவுக்கு தெரியவர, முத்துவால் மொத்த குடும்பத்திற்கும் இந்த ரகசியம் தெரிய வந்திருக்கிறது. இதனால் நேற்று வெளியான ப்ரோமோ யூடியூப்பில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருந்தது.

இந்த நிலையில் இந்த சீரியலில் மனோஜாக நடிக்கும் நடிகர் ஸ்ரீ தேவா புது கெட்டப்பில் புகைப்படங்களை வெளியிட்டு இது எப்படி இருக்கு என்று கேட்டிருக்கிறார். இதனால் இனி இவர் சீரியலில் இதுபோன்றுதான் மாறப் போகிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka aasai serial Actor Sri Deva act in new movie

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களின் மத்தியில் ஆரம்பத்தில் இருந்து அமோகமான வரவேற்பை பிடித்து வருகிறது. 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடிக்கிறது. குறிப்பாக இந்த சீரியல் விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்த பாக்கியலட்சுமி சீரியலை கூட பின்னுக்கு தள்ளி வந்தது.

ஆரம்பமான முதலில் இருந்து இந்த சீரியலில் விறுவிறுப்பான கதை ரசிகர்களை கவர்ந்திருந்தது. அதிகமான பில்டப் இல்லாமல் அடுத்தடுத்த திருப்பங்கள் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் போய்க் கொண்டிருப்பதும் இந்த சீரியலின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் இப்போது பல மாதங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த முக்கிய திருப்பம் வந்திருக்கிறது.

Siragadikka aasai serial Actor Sri Deva act in new movie

அதாவது இத்தனை நாட்களாக மனோஜ் தான் வேலைக்கே போகாமல் வீட்டில் ஷோரூமில் வேலை பார்க்கிறேன் என்று பில்டப் கொடுத்துவிட்டு பார்க்கில் சுற்றிக் கொண்டிருந்த உண்மை முத்துவிற்கு தெரிய வர முத்து அதை வீடியோ ஆதாரத்தோடு வீட்டில் அனைவரிடமும் சொல்லியிருக்கிறார். இதனால் இனி ரோகிணி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கிறது. அந்த வகையில் youtube தளத்திலும் இந்த சீரியல் பெரிய சாதனையை செய்திருக்கிறது.

Siragadikka aasai serial Actor Sri Deva act in new movie

நேற்று இந்த சீரியலுக்கான ப்ரோமோ வெளியாகி சில மணி நேரங்களிலே டாப் ஒன் இடத்தை பிடித்து விட்டது. இப்படியான நிலையில் இந்த சீரியலில் பரபரப்புக்கு முக்கிய காரணமாக இப்போது இருக்கும் மனோஜ் அதாவது மனோஜாக நடிக்கும் நடிகர் ஸ்ரீ தேவா இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

Siragadikka aasai serial Actor Sri Deva act in new movie

அதுவும் இனிமே இப்படித்தான்... இந்த புகைப்படங்கள் எப்படி இருக்கு? என்று மக்களிடம் கருத்து கேட்டிருக்கிறார். இதுவரைக்கும் தாடியோடு இருந்து வந்த மனோஜ் இப்போது ஸ்டைலாக செம லுக்கில் மாறி இருக்கும் நிலையில் இனி இவர் இப்படித்தான் சீரியலில் மாறப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது.

Siragadikka aasai serial Actor Sri Deva act in new movie

அதே நேரத்தில் அவருடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் புது படத்திற்கான சூட்டிங் வேலை தொடங்கியது என்றும் தன்னுடைய முகத்தை மட்டும் மறைத்து ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதனால் இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு போகப் போகிறார் என்று தெரிகிறது. அதே நேரத்தில் இனி தொடர்ந்து இந்த சீரியலில் நடிப்பாரா என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது. ஏற்கனவே ஸ்ரீ தேவா ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+